போர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம்
வாசகர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம்
விதை2விருட்சம் இணையத்திற்கு வாசகர்களாகிய நீங்கள் அளித்துவரும் பேராதர
விற்கு நன்றிகள் சொல்ல கடமைப்படுள்ளோம். விதை2விருட்சம் இணையத்தில் தனது கவிதை வெளியிடுமாறு பூ.சுப்ரபணியம் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பி யுள்ளார். வாழ்க்கையெனும் போர்க்களம் என்ற தலைப்பில் கருவாகி உருவான அவரது கவிதை இதோ…
வாழ்க்கையெனும் போர்க்களம்
கருவறையிலிருந்து
கல்லறை வரைக்கும்
மனித வாழ்க்கையே
இனிய போர்க்களம் !
குழந்தையைப் பெறும்
அம்மாவுக்கு
பத்து மாதமும்
இன்பப் போர்க்களம் !
தாயின் கருவில்
இருளில் சுழன்ற சிசு
வெளிச்சத்தைக் காண
துடித்த துடிப்பும்
ஒரு போர்க்களம் !
வளர்ந்த பிள்ளையை
பள்ளியில் சேர்த்து
படிக்க வைப்பதும்
தந்தையும் தாயும் நாளும்
சந்திப்பது போர்க்களம் !
படிக்கும் மாணவனுக்கு
பரீட்சை வந்து விட்டால்
தேர்வு முடிவு வரைக்கும்
கல்விக்கூடமே
ஒரு போர்க்களம் !
இல்லற வாழ்வில்
உள்ளம் மகிழ
நல்ல துணை, மக்கள்
அமைவது வரைக்கும்
இல்லறமே போர்க்களம் !
இளமையில் மகிழ்ந்து
முதுமையில் நோயின்றி
வாழ்ந்து கல்லறை
செல்லும் வரைக்கும்
வாழ்க்கையே போர்க்களம் !
உலகில் மனித
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கலாம் !
வாழ்க்கையெனும் போர்க்களம்
நாம் நினைத்தால்
அமைதிப் பூங்காவாக மாற்றலாம் !
==> பூ.சுப்ரமணியன், ஸ்ரீவில்லிப்புத்தூர்
கைப்பேசி – 9894043308 – 9840479505
நீங்களும் உங்கள் படைப்புக்களை vidhai2virutcham@gmail.com அனுப்பினால், அந்த படைப்பு விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டு விதை2விருட்சம் இணையம் பெருமை கொள்ளும் .