Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…

உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…

உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து

வருகிறது. கிரெட் கார்டு ( #CreditCard ) மூலம் பொருள்கள் வாங்கி, அத்தொகையைச் சுமார் 45 நாட்களுக்குள் ( within 45 days ) கட்டி விட்டால், வட்டி எதுவும் கிடையாது என்பதே இந்த அதிகரிப்புக்கா ன முக்கிய காரணம். அதே நேரத்தில் தவறும்பட்சத்தில் ஆண்டுக் கு சுமார் 35-45% வட்டி கட்ட வேண்டி வரும்.

கிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா?

நம்மில் பலர் கையில் பணம் இல்லாதபோது செலவுக்கு கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்துவிடுகிறார்கள். இப்படி ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால் இழப்பு அதிகம் என்பது பலருக்குத் தெரிய வில்லை.

கிரெடிட் கார்டு ( #Credit #Card ) மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடு த்தால், வட்டியில்லா காலக்கெடு எதுவும் கிடையாது. பணம் எடுத்த நொடியிலிருந்தே வட்டிக் கணக்கு ஆரம்பித்துவிடும். மேலும் பணம் எடுத்த ற்கான கட்டணம் சுமார் ரூ.300 செலுத்த வேண்டும்.

இதனை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒருவர் கிரெடிட் கார்டு ( #Credit Card ) மூலம் ரூ.10,000-க்கு பொருள்களை வாங் குகிறார் என வைத்துக் கொள்வோம். இத்தொகையை ஒரு மாதத்துக் குள் செலுத்துகிறார் என்றால் ரூ.10,000 மட்டுமே கட்டினால் போதும்.

இதுவே பணமாக ரூ.10,000 எடுத்தால், பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.300 மற்றும் ரூ.10,000-க்கு ஒரு மாத வட்டி ( #Monthly #Interest )  (3%) ரூ.300 என்றால் ஒரு மாதத்தில் செலுத்தினால் சுமார் ரூ.10,600 கட்ட வேண்டும். கிரெடிட் கார்டு ( #Credit Card ) மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால் அதற்கான வட்டி கந்துவட்டி போல் ஏறிக்கொண்டே போகும். இ தை செலுத்த தாமதித்தால், கிரெடிட் ஸ்கோர் ( #CreditScore ) பாதி க்கும்.

மிக அவசரத் தேவை தவிர வேறு எதற்கும் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை த் தவிர்ப்பது நல்லது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: