Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழ்க்கை மலரட்டும் – இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்

வாழ்க்கை மலரட்டும் (இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்)

வாழ்க்கை மலரட்டும் (இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்)

2018 ஜுன் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

தூத்துக்குடி போராட்டத்தில் உயிர் நீத்த 13 பேருக்கு வீர வணக்க‍ங்கள். காயமடைந்த

வர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனைகள்.

வன்முறையை தூண்டியவர்களையும், வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்க ளுக்கு சேதம் விளைவித்த‍வர்களையும் மனிதாபிமான மின்றி துப்பாக்கி சூடு நடத்தியவர்களையும் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதியளித்தவர்களையும், இறந்தவர்களின் கல்ல‍றை ஈரம் காய்வதற்குள் கண்டறிந்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

99நாட்கள் போராட்டங்களை வேடிக்கை பார்த்துவிட்டு பல உயிர்கள் பலியான பிற கு ஒரே நாளில் அரசு ஆலையை மூடுகிறது. விதிமுறைகளை சரியாய் கடைப்பிடிக் க‍வில்லை என்பதற்கு ஒரே இரவில் மின்சாரத்தையும் தண்ணீ ரையும் நிறுத்த‍ முடிந்த அரசு நிர்வாகத்தால் இதை ஏன் முன்ன மே செய்ய முடியவில்லை. காவுகொடுத்தால் அருள் கிடைக்கு ம். நரபலி கொடுத்தால்தான் நல்ல‍து நடக்கும் என்கிற மூட நம் பிக்கையை உண்மையாக்குகிறதோ அரசு நிர்வாகம் ? அதற்கு துணைபோன அதிகாரிகள் அரசியல் பெரும்புள்ளிகள் அனைவரையுமே மக்க‍ள் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும். ஆனால் தண்டிக்க முடியுமா? நடக்குமா நடக்குமா ?

காரணம் அது நடக்காது. காரணம் இந்ததேசத்தில் சிறிய தவறுகளு க்கு விசாரணையே இல்லாமல் உடனடி தண்டனை. பெரிய்ய்ய குற்ற‍ ங்களுக்கோ விசாரணை ஆணையம் அமைத்து, நிதானமாய் நிரந்த விடுதலை, சிஸ்டம் சரியில்லை என்று காலா கரிகாலன் சொன்ன‍து மிக மிகச்சரி

பராசக்தி படத்தில் சிவாஜிகணேசன் சொன்ன‍துபோல் தமிழகம் கடந்த சில ஆண்டு களாக பல விசித்திரமான விபரீதங்களை, காட்சிகளைக் கண்டு வருகிறது. காவலர்களை கை நீட்டியடிப்பது, காவல்துறையை கேவலமாய் பேசுவது, அரசியல் தலைவர்களை அநாகரீகமாய் விமர்சிப்ப‍து, போராட்ட‍ம் என்றால் காஷ்மீர்போல கற்களை பறக் க‍விடுவது காற்று வாங்கும் இடமான மெரினாவை கலவரப் பூமியாக்க‍ துடிப்ப‍து, இவையெல்லாம் இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்,

திரைப்படங்களில் வருவதைப் போன்று, ஒருசில மணிநேரங்களி ல் போராட்ட‍ம் வெடிப்பதும், அரசு அலுவலகங்ள் சூறையாடப்படு வதும், பொதுசொத்துக்களுக்கு தீ வைக்க‍ப்படுவதும், குறி பார்த்து சுடுவதும், இவையெல்லாமே காட்சிப்படுத்த‍ப்பட்டாலும், குற்ற‍ வாளியைத் தேடுவதும், தானாக நடந்தவையா? திட்ட‍மிடப்பட்ட‍ வையா? புரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் புரிந்து, போராட தூண்டியவர்களுக்கு விளம்பரம் கிடைத்தது. போராடியவர்களு க்கோ வாழ்க்கைத் தொலைந்தது.

மூடிய ஆலையால் முடங்கிப்போன மக்க‍ளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்க மாற்று வழி தேட வேண்டியது. அரசின் கடமை மட்டுமல்ல நமது பொறுப்பும் கூட

\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

நம் உரத்த‍ சிந்தனை ( Nam Uratha Sindhanai ) மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply