நடிப்புக்கு முழுக்கு போட்ட பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி
நடிப்புக்கு முழுக்கு போட்ட பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி
வெள்ளித்திரை நடிகைகள், பலர் சின்னத்திரைக்கு அதீத ஆர்வத்தோடு
படையெடுக்கும் இந்த வேளையில் பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் இனி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறி முழுக்கு போட்டுள்ளார்.
பிரபல சீரியல் நடிகை ( #TV #Serial #Actress ) லாவண்யா ( #Lavanya). இவர் அறிமுகமானது என்னவோ சினிமாவில்தான். ஆனால் சீரியல் மூலம்தான் ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போதும், சினிமாவில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால், தொலைக்காட்சி சீரியலில் நடிப்பதைதான் நிறுத்திவிட்டா ர். இதற்கு அம்மணி சொல்லும் காரணம். சீரியலில் நடிப்பதை நிறுத் தியது குறித்து அவர் கூறியுள்ளதாவது, தொலைக்காட்சி சீரியலில் நடிப்பதால் தான் எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டேன்
இனிமேல் சினிமாவில்தான் நடிப்பேன். தற்போது, ஆறாம் திணை என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை நான் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். என்று கூறியுள்ளார். இவருக்கு என்றே சின்னத்திரை ரசிகர்கள் கூட்டம்உண்டு. இவரது இந்த அறிவிப்பால், அவ ரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 38வயதை தாண்டிய இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.