Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ பிக்பாஸ் ( #BIGGBOSS ) 2 – மிரட்டும் ஓவியா ( #Oviya) கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே கடந்த சீசனைவிட மிக மிக பிரம்மாண்டமாக

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2ம்பாகம் நேற்று கோலாகலமாக தொடங்கப்ப ட்டுள்ளது.இதில் 16போட்டியாளா்கள் கொண்ட இந்நிகழ்ச்சியில் நேற்றைய தின மே அனைத்து போட்டியாளா்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் திரை புகழ் மற்றும் சின்ன‍த்திரை, பண்பலை போன்ற துறைகளில் அனுபவம் கொண்டவர்கள். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரா க கலந்துகொண்டுள்ள ஓவியா புதிய போட்டியாளா்களுக்கு அறிவுரை வழங்கும்விதம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாா். ஆனால், பிக்பா ஸ் ( BIGG BOSS ) வீட்டில் உள்ள‍ 16 போட்டியாளர்களுக்கும், நடிகை ஓவியா ( Oviya ) விருந்தினர் என்பது தெரியாது. அவரும் போட்டியாள ராகவே நினைத்துக் கொண்டுள்ள‍னர். இதனால் அந்த 16 போட்டியாள ர்களும் நடிகை ஓவியாவை கண்டதும் பெருத்த‍ அதிர்ச்சிக்குள்ளாயி னர். இன்னும் போக போக பார்ப்போம். 

பிக் பாஸ் போட்டியாளர்களின் பெயர்களும் அவர்களை பற்றிய சிறு குறிப்புக்களும்


1) யாஷினி மோகன் ( YASHINI MOHAN )

நடிகை, இருட்டு அறையில் முரட்டு குத்து உட்பட சில திரைப்படங்களி ல் நடித்திருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளம் போட்டியாளா் (18 வயது) என்ற பெருமையையும் கைப்பற்றி யுள்ளாா்.


2) பொன்னம்பலம் ( PONNAMBALAM )

ஆரம்ப காலத்தில் ஸ்டென்ட் நடிகராக இருந்து பின்ன‍ர் வில்லன் அவதாரம் எடுத்து, அதன் பிறகு சிறந்த சிரிப்பு நடிகராக பரிணமித்து தற்போது ஸ்டென்ட் மாஸ்டராக இருக்கிறார்.


3) மஹத் ( MAHATH )

நடிகர், இவர் மங்காத்தா திரைப்படத்தில் தல அஜித்துடன் மிக முக்கிய கதாபாத்திர த்தில் நடித்துள்ளார்.


4) டேனியால் அன்னிபோப் ( DANNY )

நடிகர், இதற்கு தானே ஆசைப் பட்டாய் பாலக்குமாரா படத்தில் “பிரண்டேய் லவ் பெயிலிரே ஆஃப் சாப்டா கூல் ஆய்டுவாப்ல” என்ற வசனத்தின் மூலம் பிரபலமான நடிகர்.


5) R.J. வைஷ்ணவி ( RJ VAISHNAVI )

(மறைந்த பத்திரிகையாளர் – எழுத்தாளர் சாவி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட சா.விஸ்வனாதன் அவர்களின் பெயர்த்தி ஆர்.ஜே. வைஷ்ணவி.


6) நடிகை ஜனனி ஐயர் ( JANANI IYER )

அவன்-இவன், தெகுடி, பலூன் போன்ற திரைப்படங்க‌ளில் நடித்து புகழ் பெற்ற‍வர்.


7) அனந்த வைத்தியநாதன் ( ANAND VAIDHYANATHAN )

மூத்த‍ பாடகர், குரல் வள பயிற்ச்சியாளர் மற்றும், விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் புகழ்


8) N.S.K. ரம்யா ( NSK RAMYA )

மிகச் சிறந்தல பாடகி, இவர் கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களின் பெயர்த்தி


9) செண்ட்ராயன் ( SENTRAYAN )

சிரிப்பு நடிகர், மூடர் கூடம் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற‍வர்.


10) ரித்விகா ( RITHVIKA )

நடிகை, கார்த்தியுடன் மெட்ராஸ், ரஜினியுடன் கபாலி, இயக்குநர் பாலாவின் பரதேசி, வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று, ஒருநாள் கூத்து திரைப்படங்களி ல் நடித்துள்ளார்.


11) மும்தாஜ் ( MUMTAZ )

பல்கலை வித்த‍கர் T.R. எனும் விஜய T. இராஜேந்தர் அவர்களால் தமிழ்த் திரை க்கு அறிமுகப்படுத்த‍ப்பட்டு கவர்ச்சிப்புயலாக வீசி பல இளைஞர்களின் தூக்க‍த்தை கெடுத்த‍ கனவு கன்னி.


12) RJ & VJ (தாடி) பாலாஜி ( DHADI BALAJI )

பலமேடை நாடகங்களில் நடித்த‍வர். வெள்ளித்திரையில் பல நகைச்சுவை நடிகரா க நடித்த‍வர்.விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சி நடுவராக வலம் வருபவர்.


13) மமத்தி சாரி ( MAMADHI CHARI )

நடிகை, தொகுப்பாளினி, ரேடியோ தொகுப்பாளினி என பல துறைகளில் தடம் பதித்த பெண்மணி இவர்.


14) நித்யா ( NITHYA )

நகைச்சுவை நடிகா் தாடி பாலாஜியின் மனைவி நித்யா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாா். இவரது கணவா் தாடி பாலாஜியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாா்.


15) ஷாரிக் ஹுசைன் ( SHARIK HUSSAIN )

சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் கோதாவரி என்ற கதாபாத்திரமாக வாழ்ந் த பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் அவர்களின் பெயரன்- பல படங்களில் நடித்த‍ ரியாஸ் கான் மற்றும் கமலாகாமேஷின் மகள் உமா ரியாசின் மகன் ஆவார்.


16) ஐஸ்வர்யா தத்தா ( AISWARYA THATHA )

நடிகை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்த‍வும் திரைப்படத்தில் நடித்து, தனது விழி அசைவால் இளம் நெஞ்சங்களை கொள்ளைளை கொண்ட கொள்ளைக்காரி.


 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: