ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால்…
ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டால்…
நாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும்போது ( #wheezing while #Eating ), தவறான பாதையில்
நுழைந்துவிட்டால், உள்ளிழுக்கவேண்டிய மூச்சு தடைபட்டு, திணறல் ( wheezing ) ஏற்படும். மூச்சுத்திணறல் ( wheezing ) ஏற்பட்டால், 40 வினாடிகளில் மயக்கம் ஏற்பட்டு, நான்கு நிமிடங்களில் மரணமே ஏற்பட்டுவிடும். உடனடி மருத்துவ சிகிச்சை செய்து, உயிர் காப்பாற்றப் பட்டாலும், மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படும். சாப்பிடும்போது, இது போன்ற மூச்சுத் திணறலை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர்.
புரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்
கண்கள் சிவப்பாகி, காற்றை உள்ளிழுக்கும் வகையில், வேகமாக மூச் சிழுப்பர். தொடர்ந்து, பெரிய அளவில் இருமல் ஏற்படும். பேச முடியாம ல், தொண்டையைப் பிடித்து கொள்வர். உடலில் ஆக்சிஜன் குறைந்து, முகம் நீலநிறமாகிவிடும். பின், இருமல் மெதுவாக குறைந்து, மயக்கம் ஏற்படும். உடனடி மருத்துவ உதவி கிடைக்காவிட்டால், உயிரிழக்க நே ரிடும். புரை ஏறும்போது, அருகில் நிற்பவர்கள், முதுகில் தட்டி, அதை சரி செய்ய முயல்வர். இது பெரும்பாலும் ஆபத்தில் முடியும். முதுகில் வேகமாக தட்டும் போது, உணவு துகள்கள் வெளியேறலாம் அல்லது மூச்சுக்குழாயில் மேலும் இறங்கி விடலாம்.
இது, அரைகுறை அடைப்பை முழுமையாக்கி விட்ட கதையாகி விடும். தண்ணீர் குடிக்க சொல்வது, வாழைப்பழம் அல்லது வேறு திட உணவு களை சாப்பிடச் சொல்வது, பிரச்னையை மேலும் சிக்கலாக்கி, ஆளை பலி வாங்கிவிடும். சம்பந்தப்பட்ட நபர் மயக்கமடையாமல் இருந்து, தொடர் இருமி, நன்றாக மூச்சுவிட்டு, பேசிக் கொண்டிருந்தார் என்றால் , அவரை கீழே குனிய வைத்து, இன்னும் அதிகமாக இருமச் சொல்ல வேண்டும்.
உள்ளங்கையால், மேல் முதுகை தட்டவேண்டும். ஐந்து தட்டுதலுக்கு பின்னும், நிலைமை சீராகவில்லை எனில் டாக்டர் ஹீம்லிச் கோட்பா ட்டை பின்பற்ற வேண்டியது தான். டாக்டர் ஹென்றி ஹீம்லிச், இருதய சிகிச்சை நிபுணர். புரை ஏறினால் என்ன செய்வது என்பது குறித்து, 1976ல் ஒரு கோட்பாட்டை வகுத்தார். எனவே, அந்தக் கோட்பாடு, அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. முதலுதவி வகுப்புகளில் இந்த கோட்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இதை கற்றுக் கொள்ள அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை.
ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டால்…
* அவருடைய பின்புறம் நின்று, பின்னாலிருந்து இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
* அதே நிலையில் நின்று, அவருடைய விலா எலும்புகள் நடுவில் முடி யும் இடத்தின் கீழே, தொப்புளுக்கு மேலே ஒரு குத்து விடுவது போல், கையை மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அப்படியே மேல் நோக்கி வேகமாகக் கையை அழுத்தவும். விலா பகுதியைப் பிழிந்து விடாதீர்கள். கவனமாகச் செய்ய வேண்டும்.
*உணவுப்பொருள் வெளியேறும் வரை இப்படி செய்யலாம். படிக்கும் போது இது எளிதாக தென்படும். தொடர்ந்து பயிற்சிசெய்தால் மட்டுமே, எளிதாக செய்ய முடியும். இல்லையெனில், உங்கள் பின்னால் நின்று கொண்டிருப்பவரையும் சேர்த்து உதைப்பீர்கள்!
*புரை ஏறிய நபர் கர்ப்பிணியாகவோ, அதிக எடை கொண்டவராகவோ இருந்தால், அவரை பின்புறத்திலிருந்து கட்டிப் பிடிக்க முடியாது. அவ ருடைய இருகைகளின்கீழ் வழியே உங்கள் இருகைகளையும் நுழைத் து, மார்புப் பகுதிக்குக்கீழ் லேசாக மேல்நோக்கி அழுத்தி, கீழிறக்க வேண்டும்.
நினைவிழந்தவர்களையோ, நிற்க முடியாதவரையோ வேறுவிதமாக கையாள வேண்டும்
* அவர்களை நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வைக்க வேண்டும்.
*அவருடைய இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் உங்கள் கால்களை முட்டி போட்டு, உங்கள் எடை அவர் மீது விழாதவாறு அமர்ந்து கொள் ளுங்கள்.
*வலதுகை மீது இடது கையை வைத்து கொள்ளுங்கள். விலா எலும்பி ன் கீழ், தொப்புளின் மேல்புறத்தில் வலது உள்ளங்கையின்கீழ் பகுதி யால் மேல் நோக்கி அழுத்துங்கள்.
* உணவுத்துகள் வெளியே வரும் வரை இதை செய்யலாம். நீங்கள் தனி யாக இருக்கும்போது, புரை ஏறி, மூச்சுத்திணறல் வந்தால் பயப்படாதீர்.
* வேறொருவர் உங்கள் வயிற்றில் மேல் நோக்கி அழுத்தம் கொடுப்பது போலவே, நீங்களே உங்கள் கையால் அழுத்தம் கொடுத்து மேலேற்ற லாம். உணவுத் துகள் வெளியேறும் வரை, இதை செய்து கொள்ளலாம்.
* மேஜையின் முனை அல்லது அதைப்போன்ற பொருட்கள்மீது உங்கள் வயிற்றை (அதாவது, விலா எலும்பு மற்றும் தொப்புளுக்கு இடைப்பட் ட பகுதி) வைத்து அழுத்தி, அழுத்தத்தை மேலே ஏற்றுவது, துகளை மிக எளிதாக வெளியே எடுக்கும் யுக்தியாக அமையும்.
குழந்தைகளுக்கு புரை ஏறும் போது செய்ய வேண்டியவை….
*குழந்தையின் முகத்தை மேஜை போன்ற தட்டையான பகுதியில் வை த்து, குழந்தையை மடியில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் இரண்டு கைகளின் சுட்டு விரல் மற்றும் நடுவிரல்களை, விலா எலும்புகளுக்கு க்கீழ் வைத்து, மேல்நோக்கி அழுத்துங்கள். விலா எலும்புகளை அழுத் தி விடாதீர்கள்; உடைந்து விடும்.
* குழந்தையின் உள்ளே சென்ற பொருள் வெளியே வரும் வரை இதை செய்யலாம். குழந்தை ஏதாவது விழுங்கிவிட்ட உடன், நாமும் பதறி அடித்து, குழந்தையின் வாயில் கையை நுழைத்து, அதை வாந்தி எடுக் க வைக்க முயற்சி செய்வோம். இந்த செய்கையால், குழந்தை வாயினு ள் சென்ற பொருள், மேலும் தாறுமாறாக உள்ளே நகருமே தவிர, வெளியே வராது.
=> ப அரசு