Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? – எச்சரிக்கும் நிபுணர்கள்

இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? – எச்சரிக்கும் நிபுணர்கள்

இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? – எச்சரிக்கும் நிபுணர்கள்

கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என எந்தக் கடனை

வாங்கவேண்டும் என்றாலும், வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர்தான் முதல் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கிரெடிட் ரிப்போர்ட்டில் கடன் கேட்டு வருபவரின் ஸ்கோர் எவ்வளவு என்பதைப் பார்த்தே அவருக்குக் கடன் தரலாமா, எவ்வளவு கடன் தரலாம், வட்டி விகிதம் என்ன என்கிற விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

இலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்! ( Free Credit Score Report ) 

சமீபகாலமாக ‘உங்களது கிரெடிட் ஸ்கோரைத் தெரிந்துகொள்ளுங்கள்’ அல்லது ‘உங்களது கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் உங்களது கடன் தகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என SMS மூலமாகவும், இமெயில் மூலமாகவும் பல்வேறு தனியார் கிரெடிட் ஏஜென்சிகள் தகவல் அனுப்பிவருகின்றன. ‘இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? வாங்கித்தான் பார்ப்போமே!’ என்று இந்த நிறுவனங்கள் அனுப்பும் லிங்கை (Link) நாம் க்ளிக் செய்தால், பல பிரச்னைகளை மாட்டிக்கொள்ள வேண்டி யிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதேயில்லை.

இலவச கிரெடிட் ஸ்கோர் அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் லிங்கைச் சொடுக்கி னால், முதலில் நம் பான் நம்பர் கேட்கும். இங்கேதான் நாம் உஷாராக வேண்டும். இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுக்காக மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் (Third Party) நமது முக்கிய விவரங்களைத் தெரிவிக்கும்போது அந்த நிறுவனங்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தெ ரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ அல்லது விருப்பமோ உங்களுக்கு இருந்தா ல், அவசரப்பட்டு இதுபோன்ற மூன்றாம் தரப்பிடம் நம்மைப் பற்றிய விவரங்களை அளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, கடன் தகவல் நிறுவனங்களிடமிருந்து (Credit Information Companies – CIC) அதனை நீங்கள் நேரடியாகவே பெறலாம். டிரான்ஸ்யூனி யன் சிபில் (Trans Union CIBIL), ஈக்­யூஃபேக்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் (Equifax), எக்ஸ்­பீ­ரியன் (Experien) மற்றும் ஹை மார்க் (High Mark) ஆகிய கிரெடிட் ஏஜென்ஸி நிறுவனங்கள்மூலம் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகவே நீங்கள் கடன் ஸ்கோரைப் பெறலாம்.

ஏற்கெனவே கிரெடிட் கார்டுமூலம் கடன் வாங்கியவர்கள், இதர தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் ( Home Loan )  வாங்கித் திரும்பச் செலுத்தியவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் கிரெடிட் ஸ்கோர் ( Credit Score ) என்ன என்கிற அறிக்கையை கிரெடிட் ஏஜென்ஸி ( Credit Agency ) நிறுவனங்கள் மூலம் இலவசமாகப் பெறுவதற் கான உத்தரவை ரிசர்வ் வங்கி ( Reserve Bank ) கடந்த 2017 ஜனவரியில் நடை முறைப்படுத்தியது.

இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு கிரெடிட் ஏஜென்சி நிறுவனமும் தனித்தனியே ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக கிரெடிட் ரிப்போர்ட் தரவேண்டும் என்பதால், ஒருவர் ஓராண்டில் மொத்தம் நான்கு ரிப்போர்ட்டுகளை இலவசமாக பெற முடியும்.

அதேசமயம், சில மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு க்கு ஒருமுறைக்குமேல் இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுடன், மேலும் சில சேவைக ளையும் சேர்த்து வழங்குகின்றன. “வாடிக்கையாளர்கள் அவர்களது கிரெடிட் நிலை மையைப் புரிந்துகொள்ளும் விதத்திலும், அவர்களது கிரெடிட் ஸ்கோரை உயர்த்து வதற்கான வழிகாட்டுதலையும் அளிக்கின்றன. ஆனால், கடன் தகவல் நிறுவனங் கள் (CIC) இந்தச் சேவையை அளிப்பதில்லை. மேலும் தேர்டு பார்ட்டி நிறுவனங்கள், நீங்கள் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தெரிந்துகொள்ள எத்தனை முறை வேண் டுமானாலும் அவர்களது தளங்களுக்குச் செல்ல அனுமதிக்கின்றன. இதற்குக் கட்டு ப்பாடு எதுவும் விதிப்பதில்லை.

எச்சரிக்கையான அணுகுமுறை அவசியம்

இத்தகைய வசதிகள் ஒருபக்கமிருந்தாலும், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள், வாடிக் கையாளர்கள் கேட்கும் கிரெடிட் ஸ்கோரை தெரிவிப்பதற்காகக் கேட்டு பெறும் அவ ர்களது பான் எண், அடையாள சான்று, முகவரி, மொபைல் எண் மற்றும் இ-மெயில் விவரங்களை மற்றவர்களுக்கு ரகசியமாகத் தெரிவிப்பதாகவும், அவற்றைத் தவ றாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில், இன்றைய உலகம் டேட்டா உலகம். வாடிக்கை யாளர்களின் டேட்டாக்களைப் பெறுவதற்காக த்தான் இன்று பல பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இத்தகைய சூழலில் நமது தகவல்கள் பிற நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் சம்மதம் இருந்தால்தான் அவர்களது கிரெடிட் ரிப்போர்ட்டை, தாங்கள் தொழில் தொடர்புகள் வைத்துள்ள மூன்றாம் தர ப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதாகக் கடன் தகவல் நிறுவனங்கள் (CIC) தெரிவிக்கின்றன. அதேசமயம், நீங்கள் ஒருமுறை அந்த சம்மதம் தெரிவித்துவிட் டால், அதன்பின்னர் உங்கள் தகவல்கள் மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் தவறாக பயன்படுத்தப்பட்டால், அதற்கு நீங்கள் கடன் தகவல் நிறுவனங்களைக் குறைகூற முடியாது.

இலவச கிரெடிட் ஸ்கோர் அளிக்கும் நிறுவனங்களிடம் நமது முக்கிய விவரங்க ளை அளித்தால், நமக்குத் தேவையற்ற இ-மெயில்கள், எஸ்.எம்.எஸ்-கள், போன் கள் வரவாய்ப்புள்ளன. எனவே, இத்தகைய நிறுவனங்களின் சேவையைப் பெறும் முன் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனை களை நன்கு படித்துத் தெரிந்து கொ ண்டு, அதன்பின்னரே அந்த நிறுவனங்களின் தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்முன், அந்த மூன்றாம் தரப்பு நிறுவனம் ஏதாவது கடன் தகவல் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதா என்ப தை உறுதி செய்துகொள்ள வேண்டும். எந்தக் கடன் தகவல் நிறுவனத்துடன் அது தொடர்பு வைத்துள்ளது, வாடிக்கையாளர்கள் விரும்பா விட்டால், எந்த நேரத்திலும் அதன் சந்தா பதிவை ரத்து செய்துவிட்டு விலகவோ அல்லது அவர்களைப் பற்றிய தகவல்களை அந்தத் தளத்திலிருந்து நீக்கவோ செய்வதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக, சிபில் தவிர எந்த நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனம் அளிக்கும் இலவச கிரெடிட் ஸ்கோரைப் பெற நாம் முயற்சி எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி வாங்கப் போய், சிக்கலிலும் மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை!

#FreeCreditScoreReport

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: