Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடப்பாவிகளா – இரத்த தானத்தில் நடக்கும் பகீர் மோசடிகள் – பதறவைக்கும் திக்திக் பின்ன‍ணி

அடப்பாவிகளா – இரத்த தானத்தில் நடக்கும் பகீர் மோசடிகள் – பதறவைக்கும் திக்திக் பின்ன‍ணி

அடப்பாவிகளா – இரத்த தானத்தில் நடக்கும் பகீர் மோசடிகள் – பதறவைக்கும் திக்திக் பின்ன‍ணி

இரத்த தானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது… என்றால்,

மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்த தானம் செய்வதில்லையே ஏன்?

ஏன் மருத்துவர்களும் செவிலியர்களும் இரத்த தானம் செய்வதில்லை என்று தெரியுமா?

சாதாரண மக்கள் இரத்த தானம் செய்தார்கள் என்று மருத்துவர்கள் பாராட்டுச் சா ன்றிதழ் வழங்குவது போல, தாங்களும் இரத்ததானம் செய்ததாக, செய்யாமலேயே எத்தனை பாராட்டுப் பத்திரங்களை வேண்டு மானாலும் வைத்திருக்கலாம். ஆனா ல், எந்த மருத்துவராவது தானும் ஒரு சாதாரண மனிதருக்கு இரத்த தானம் செய்தே ன் என்பதற்கு அச்சாதாரண மனிதரின் சான்று ஒன்றையாவது காட்ட முடியுமா?

பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவமுடியும் என்பதுபோல 90% தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது வெளிஉபயோகத்திற்காகத்தா ன் தேவைப்படுகிறது. மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை. அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவத் துறையில் பணி புரியும் ஊழியர்களின் இரத்த தானமே போதுமானதே!

இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்?

இத்தனைக்கும் தானமாக பெறப்பட்ட இரத்தமானது முப்பது நாட்களுக்குள் உபயோ கப்படுத்தவில்லை என்றால் அது கெட்டுவிடும். கோடிகோடியாக செலவு செய்தாலு ம் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதா ரண மனிதர்கள் தானாக மனம் இர ங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது, உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்ட மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் தானமாக கொடு க்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய் தோம் என லட்சம்லட்சமாக சிகிச்சை க்கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களை கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது ஏன்?

சிலர் தங்களின் சுப தினங்களில் ரத்த தானம் செய்வதைக் கடமையாக கொண்டுள் ளனர். அத்தோடு பல தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அவ்வப் போது ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரிகத்தும் கொடுக்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றால், ஒன் றுக்கு இரண்டாக அல்லது மூன்று யூனிட்டாக அவரின் உற்றார், உறவினர், நண்பர் கள் என கட்டாயமாக இரத்த தானம் செய்த பிறகுதான், இரத்த வங்கிகளுடைய மருத்துவ மனைகள் பரிசோதனைகள் முடிந்து நிலுவையாக உள்ள தங்களின் கையிருப்பு இரத்தத்தையே எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள்.

ஒரு வேளை இரத்த கொடையாளிகளே விபத்தில் சிக்க நேரிட்டாலும் இதே நிலை தான். இரத்த கொடையாளரிடமே இரத்த கொடை அளிக்க எவரையாவது அழைத்து வரும்படி கட்டாயப்படுத்துவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

அப்படியானால், “யாருக்காவது பயன்படும் என்ற நல்ல நோக்கில் கொடையாளி கள் கொடுத்த இரத்தம் எங்கே போகிறது?”

இரத்த சேமிப்பு வங்கிகள் இது குறித்த கணக்குகளை மக்களின் பார்வைக்கு அல்லது தானக் கொடையாளர்களின் பார்வைக்கு கொண்டு சென்றது உண்டா?

இரத்த தான முகாம்கள் மூலம் உங்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்தம் இன்னாரின் பயன்பாட்டு க்காக உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை கொடையாள ருக்கும், இன்னாருடைய இரத்தம் தான் உங்களுக்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை பயனடைந்தவருக்கும் தெரிவிக்க வேண்டியது மருத்துவத் துறை யின் கடமையல்லவா?

இவைகளை சம்பந்தப்பட்ட இருவரும் தெரிந்துகொள்வது எந்த வகையில் நியாய மற்றது?

ஆனாலும், மருத்துவத்துறை இதுவரை செய்தது இல்லை. இனியும் செய்யப் போவது இல்லை. ஏன் தெரியுமா?

நிச்சயமாக இதில் ஏதோ தில்லுமுல்லுகள் நடைபெறுகிறது. ஆனால், இப்படியொரு சந்தேகம் இரத்த தானம் செய்யும் எவருக்குமே தோன்றாதது ஏன்?

ஒரு வேளை, எங்காவது அபூர்வமாக தில்லுமுல்லுகள் நடக்கும்; அதற்கு ஏன் நாம் அலட்டிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதுவும் நிச்சயமாக தவறு. ஏனெனில், இரத்த தானம் பெறும் எல்லா நிலையங்களிலுமே இத்தகைய தில்லு முல்லுகள் நடக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு!

நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல், தானாகவே சுரந்து கொள்ளும் என்று கூறப்படுகின்றது.

அதெப்படி சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே, ஊட்டச்சத்து இல்லாமல் தானாகவே ஊற கிடைக்கும்?

மருத்துவர்கள் உண்ணும் உணவைவிட சராசரி மனிதர்களாகிய நாம் தரமானதொ ரு உணவை உண்டு விடப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, மருத்துவர்கள் இரத்ததானம் செய்யாததன் மூலம் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லா மலும், மக்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை யோடும் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா?

இரத்த தானத்தால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது என்பதும் முதல் நோக்கிலேயே ஏற்கத்தக்கது அல்ல. அதாவது, ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலு ம் பால் முழுவதும் விஷம்தானே?

இல்லையில்லை, பாலோடு சேர்ந்த விஷம் ஊட்டச்சத்து மிக்க பாலாகி விட்டது என சொல்ல முடியுமா?

இதேபோல, புதிதாக உற்பத்தியாகும் சுமார் அரை லிட்டர் புது இரத்தம் ஏற்கனவே உடலில் அசுத்தமாக உள்ள ஐந்தரை லிட்டர் இரத்தத்தோடு சேர்ந்து அவைகளையும் புது இரத்தமாக்கி விடுகிறது என்பது எவ்வளவு புத்திசாலித்தனமான கட்டுக்கதை.

அது சரி, புது இரத்தம் சுரந்துதான் புத்துணர்ச்சி தருகிறது என்றால், இரத்ததானம் செய்பவர்கள் எல்லாம் புத்துணர்ச்சி இல்லாதவர்களா?

அவர்களின் இரத்தம் அசுத்தமானதா?

அசுத்தமான இரத்தத்தை எதற்கு தானமாக எடுத்து ஆபத்தில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்?

எப்படி காப்பாற்ற முடியும்?

இதனால், நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதும் சரியல்ல. 400 மில்லி இரத்த இழப்பால் நமக்கு பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர் கள் அதே அளவிற்கு இரத்தம் சிந்தும் போது ஏன் சுய நினைவை இழந்து மயக்க மடைகிறார்கள்?

நாம் கொடுக்கும் 400 மில்லி இரத்தத்தால் நம் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பது உண்மையானால் விபத்தில் சிக்குபவர்கள் அல்லாதோருக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் இரத்தத்தை அந்நோயாளியிடமே எடுத்துக் கொள்ளலாமே!

எனவே, 400 மில்லி இரத்தம் நம் உடலிலிருந்து இழப்பது நிச்சயமாக நம் உடலுக் குக் கெடுதியானதே. எப்படி?

இரத்தம் கொடுக்கும் ஒரு சிலருக்கு உடனடியாக மயக்கம் வரும் என்பதை மருத்து வத் துறையே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், மயக்கம் உடலுக்கு மிகவும் நல்லது என்று எந்த மருத்துவமும் சொல்வதில்லையே!

உண்மை இப்படி வெட்டவெளிச்சமாக இருக்கும்போது, மயக்கமடைந்தவரிடம் இருந்து பெறப்பட்ட தான இரத்தத்தை அவருக்கே திரும்ப செலுத்தி விடுவதுதானே தானத்தின் நியாயம். ஆனால், அப்படி ஒரு போதும் செய்வதில்லையே!

மயக்கம் ஏற்பட்டால் உடனே காலைத்தூக்கி பிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறா ர்கள். இரத்ததானம் செய்யும் இடத்தில் மயக்கம் வந்தால் காலைத் தூக்கிப் பிடித்து தற்காலிகமாக காப்பாற்றி விடுவார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இதற்காக த்தான் சுமார் அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அங்கேயே 200 மில்லி குளிர்ச்சியான செயற்கை பானம் மற்றும் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை உண்ண வைத்து படுக்க வைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை இவ்வெற்று சம்பிரதாய சடங்குக்கு முடிந்து அவ்விடத்தைவிட்டு சென்ற பின் ஒருவர் மயக்கம் போட்டால், அவர் இரத்ததானம் கொடுத்ததால்தான் மயக்கம் போட்டார் என்பதையும், அவரைக் காப்பாற்ற காலை தூக்கிபிடிக்க வேண் டும் என்பதும் யாருக்கு தெரியும். இல்லை அவரே தான் முன்னெச்சரிக்கையாகவோ சொல்லி வைக்க முடியுமா அல்லது மயக்கத்தின் ஊடே எழுந்து சொல்ல முடியுமா?

தானம் செய்தவரை டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டுதான் விழுந்துகிடக்கிறான் பார் என்றல்லவா போவோர் வருவோர் நினைப்பார்கள். திட்டி தீர்ப்பார்கள்.

கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கவில்லை என்றால் மரத்துப்போய் குத்தும், குடையும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் பல முறை அனுபவ பூர்வமாகவே உணர்ந்து இருக்கிறோம் அல்லவா? இரத்த ஓட்டத்தை சரி செய்து மரத்துப் போனதை திரும்பவும் சாதாரண நிலைக்கு கொண்டுவர அத்தருண த்தில் வலியால் என்ன பாடுபடுகிறோம். அம்முயற்சி துவங்கிய பின்னர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரை ஆகிறதுதானே!?

கை கால் மரப்புக்கே இப்படிப்பட்ட விளைவு என்றால், மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஏன் மருத்துவர்களின் மூளையை ப் போல் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட நமது மூளை மட்டும் ஏன் மறுக்கி றது?

இரத்ததானம் செய்தவர் மயக்கம்போட்டு விழுந்து கிடப்பதை தண்ணியடித்து விட்டு தான் விழுந்து கிடக்கிறார். போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என்ற தெளிந்த சிந்தனையில் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால், புண்ணியம் தேடி இரத்ததானம் கொடுத்தவர் புகலிடம்தேடி சாவை சந்திக்கவேண்டியிருக்கும். அல்ல அல்ல. இப்படி நிச்சயமாக நடந்திருக்கும். சாலையில் சென்றவர் சுருண்டு விழுந்து செத்தார் என்ற செய்தியை படித்திருக்கிறோம் அல்லவா? அச்சாவுகள் இந்த வகை யைச் சார்ந்தது அல்ல என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? இப்படி சாவை சந்தித்தவர்களின் புள்ளி விபரங்கள் யாருக்கு தெரியும்!

இது போன்றதொரு நிலமையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரத்த தானம் கொடுப்பவர் தக்கபாதுகாவலர்களோடு வரவேண்டும் என மருத்துவத்துறை இன்று வரையிலும் கூட அறிவுறுத்தியது இல்லை. இப்படி அறிவுறுத்தினால் யார் இரத்த தானம் செய்ய முன்வருவார்கள்? என்ற அடிப்படை காரணம் இதில் இல்லா மலும் இல்லை.

இரத்த தானம் செய்தவரின் உடல் நிலையைப் பொறுத்து சோர்வு ஏற்படும். இது எப்ப டிப் பட்ட பலம் கொண்டவராக இருந்தாலும் நிச்சயம் என்பதை நானே உணர்வுப்பூ ர்வமாக உணர்ந்துள்ளேன். ஆனாலும், உடனே மயக்கம் அடையாத இரத்த கொடை யாளர்கள் தங்களின் சோர்வுக்கும், உடல் ஒத்துழையாமைக்கும் தானம் தான் கார ணம் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியாது.

நம்மால் தானம் கொடுக்கப்பட்ட 400மில்லி இரத்தம் மீண்டும் புதிதாக சாதாரணமா க உண்ணும் உணவில் உற்பத்தியாகாது. அதற்காக இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவுகளை பல மாதங்கள் தொடர்ந்து உண்ண வேண்டியிருக்கிறது. கட்டாய ஓய்வும் எடுக்கவேண்டியிருக்கிறது. ஆனால், இதனையெல்லாம் புண்ணி யம் தேடி சர்வசாதாரணமாக இரத்ததானம் செய்பவர்கள் கணித்து விடமுடியாது. உடல் தங்களது பணிகளுக்கு ஒத்துழைக்க வில்லை என்றால், ஓய்வு கொடுத்து விடுவார்களே ஒழிய, இரத்த தானம் தான் காரணமாக இருக்குமோ என அறியக் கூட முற்படுவதில்லை.

மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இச்சாதக பாதக விளைவுகளை கணிக்கும் திறன் இருப்பதாலும், உடலுக்கு தேவையில்லாத செலவுடன் கட்டாய ஓய்வளித்து வருமானத்தை இழக்க விரும்பாத தாலுமே இரத்ததானம் செய்வதில்லை.

கடந்த 2007ஆம் ஆண்டில் சகோதரி ஒருத்தி விபத்தில் சிக்கி, நான் இரத்ததானம் செய்த வகையில் இதில் குறிப்பிட்டுள்ளபடியான தில்லுமுல்லுகளை உணர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனை இயக்குனருக்கு சட்டப்படியான அறிவிப்பை அனுப்பினேன்.

அதற்கு அம்மருத்துவ அறிவாளிகள், நான் கேட்ட கேள்விகள் எதற்கும் நியாயமான பதிலை சொல்ல முடியாமல், மடத்தனமாக இரத்தம் மரத்தில் காய்க்காது என்பன போன்ற உணர்ச்சியூட்டும் வசனங்களையே திரும்பத்திரும்ப பதிலாக தந்தனர். அவ ளின் தொடர் சிகிச்சையை காரணம் காட்டி, அவளே என்னிடம் மன்றாடியதால் வழக்கு தொடுக்க இயலாமல் போய் விட்டது. இதுபோன்ற தொடர் சிகிச்சை காரண ங்கள்தான் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர தடையாய் இருக்கி றது.

மொத்தத்தில், இரத்ததானம் உடலுக்கு நல்லது என்றால், முதலில் அதை மருத்துவ ர்களுக்கு கட்டாய மாக்க வேண்டும். உனக்கேன் அவர்கள் மீது அவ்வளவு அக்கறை என்று சந்தேக கண்ணோட்டத் தோடோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ பார்க் காதீர்கள்.

ஏனெனில், அவர்கள் உடல் நலத்தோடு இருந்தால்தானே நாமும் உடல் நலத்தோடு இருக்க முடியும்! அது வரை, மருத்துவர்கள் உண்டு கொழுப்பதற்கு உணர்ச்சி வயப் பட்டோ அல்லது புண்ணியம் தேடியோ தேவையில்லாமல் இரத்த தானம் செய்வ தை தவிர்ப்போம்.

மாறாக, வி(ஆ)பத்தில் சிக்கும் உற்றார், உறவினர், நண்பர்களின் தேவைக்கு ஏற்ப இரத்த தானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதோடு, தானத்திற்கு பின் நமது உடல் நலனில் தகுந்த அக்கரை கொள்வோம். நமக்காக அடுத்தவர் தானம் செய்வ தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்போம். மருந்தில்லா மகிழ்ச்சி வாழ்வு வாழ்வோம்.

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை:

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவு டைமையாகும்.

கட்டுரை தொகுப்பு : சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா

இது வாட்ஸ் அப் தகவல்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: