கண் இமைகளில் வலி எடுத்தால்
கண் இமைகளில் வலி எடுத்தால்
விழி வழியே தான் நாம் இந்த உலகத்தில உள்ள உன்னத படைப்புக்களை
கண்டுரசிக்கமுடிகிறது. அந்த கண்கள் மூலமாகவே, நமக்கு வரும் சில நோய்களின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொள்ளமுடியும். உதாரணமாக திடீரென்று நம் கண் இமைகளில் வலி எடுக்கும். அப்படி வலி எடுப்பது எந்த நோயின் அறிகுறியாக இருக்கும் என்பதையும், அதனை ஆரம்ப நிலையிலேயே குணப் படுத்தும் வழியையும் இங்கு காணவிருக்கிறோம்.
கண் இமை ( #eyelid / #wink )களில் வலி எடுப்பது எதனால் என் றால், நீங்கள் செய்யும் அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி ஏற்படலாம். மேலும் உங்கள் உடலில் மக்னீசியம் குறைவதால் உடல் சோர்வடைந்து, அந்த சோர்வின் காரணமா க கண் இமைகளில் வலியாக வெளிப்படுகிறது.
இது முற்றிலும் குணமடைய
ஆயிரம் வேலைகள் இருந்தாலும், ஓய்வுக்கென்று கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு, போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு நில்லாமல் நீங்கள் உண்ணும் உணவில் முட்டைக்கோஸ் ( #Cabbage ) மற்றும் கீரைகளை அதிகளவில் சேர்த்து உட்கொண்டுவந்தால் இந்நோய் விரைவில் குணமடையும்.