Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க – சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க

முகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க – சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க

முகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க – சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது அந்த கால

பழமொழி. முகத்தில் அழகு இருந்தால் அகத்தில் தன்னம்பிக் கை மிளிரும் இது இந்த கால புதுமொழி

தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்ப து அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் ( #FaceWash ) தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்! ( Coconut oil face wash dull skin )

சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் ( #CoconutOil )சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லி யிருக்கின்றார்கள். அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன் படுத்தி வருகின்றோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சரும த்திற்கும் பயன்படுத்துகின்றோம்.

முகப்பரு ( #Pimples ), கரும்புள்ளி ( #BlackDots ), தேமல் எனபல பிரச்சனை களை போக்குகின்றது. இயற்கையான தேங்காய் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் ( #Antioxidant )  இருக்கின்றது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கின்றது.

தினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்கு கள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கு ம் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். இதற்காக நீங்களே ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம்.

இந்த ஃபேஸ்வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தில் முகப்பரு உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்க ளை போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 3 துளிகள் தேயிலை மர எண்ணெய், 2 துளிகள் லாவெண்டர் எண்ணெய், 1 டீஸ்பூன் தேன்

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சிலதுளி எலு மிச்சை சாறு கலந்துகொள்ளலாம். இல்லையெனில் தேவையில் லை. முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தி ல் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழு விடுங்கள்.

இப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.

#CoconutOilFaceWashDullSkin


 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply