
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ்
மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி,
தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படத் தில் நடித்து, வெற்றி பெற்றதால் முன்னணி கதாநாயகி ஆனவர் கேரளத்து பைங்கிளி நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) .
இத்திரைப்படத்தைதொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நடிகையர் திலகம் படம் மூலம் நம்பர் ஒன் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விட்டதாக செய்தி வருகிறது.
கீர்த்தி சுரேசின் புதிய சென்டிமென்ட்
கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் பட ங்கள் யாவும் ‘S’ வரிசையில் அமைந்துள்ளன. விஜய்யுடன் ‘சர்கார் ’, விஷாலுடன் ‘சண்டக்கோழி-2’, விக்ரமுடன் ‘சாமி2’, சிவகார்த்தி கேயனுடன் ‘சீமராஜா’ (கவுரவ வேடம்) என ‘S’ எழுத்தில் வரும் தலைப்புகளில் நடித்து வருகிறார். ( #KeerthySuresh #Sarkar #Vijay #Vishal #Sandakozhi #Vikram #Sami #Sivakarthikeyan #vidhai2virutcham )
நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்த நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தொடர்ச்சியாக ‘பா’ வரிசையில் திரைப்படங்களில் நடித்து தொடர் வெற்றி பெற்று தொடர் நாயகனாக வலம் வந்தார ல்லவா அதே பாணியை தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh)-ம் பின்பற்றி வருவதாக ஒரு தகவல்.