Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆபத்தை அறியாத‌ இளம்பெண்களே! உங்கள் உடல் உங்கள் உரிமைதான் ஆனால்

ஆபத்தை அறியாத‌ இளம்பெண்களே! உங்கள் உடல் உங்கள் உரிமைதான் ஆனால்…

ஆபத்தை அறியாத‌ இளம்பெண்களே! உங்கள் உடல் உங்கள் உரிமைதான் ஆனால்…

மொபைல் செயலிகளின் வியாபாரத்திற்கு தங்களை தாங்களே கவர்ச்சி பொருளாக்கி கொள்ளும் பெண்கள்!

தியேட்டரில் திரைப்படம் போடுவதற்கு முன்வரும் ஸ்மோக்கிங் எச்சரிக்கை விளம்பரத்தை

போல, என்ன தான் ஆச்சு நம்ம நாட்டு பெண்களுக்கு. என்றுதான் கேட்க துவங்குகி றது. இது ஆண்களும் சேர்ந்து செய்யும் தவறுதான் என்றாலும், பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம்.

என்னடா சொல்ற… தலையும் இல்லாமா.. காலும் இல்லமா…ன்னு நீங்க கேட்கிறது புரியுது… சமீப காலமாவே நாம சோஷியல் மீடியாவுல மூழ்கி கிடக்கோம்ங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். ஆனால், ஆரம்பத்துல தங்களுக்கு தெரி யாமலே பாதிக்கப்பட்டு வந்த பெண்கள். இப்ப தங்களுக்கு தெரிஞ்சே நேரடியாகவே அவங்க மூலமாவே பாதிக்கப்பட்டு வராங்க.

இப்ப இளைஞர்கள் மத்தியில அதிகமா பயன்பாட்டுல இருக்க சோஷியல் மீடியா வீடியோ ஷேரிங் செயலிகள் பெண்கள் பதிவிடற வீடியோக்களை தங்களோட ப்ரமோஷன் கருவியா உபயோகிச்சு அவங்கள ஒரு கவர்ச்சி பொருளாக பயன்படுத் திட்டு வராங்க.

ஒரு பக்கம் அவங்க தான் அப்பட்டமா இவங்கள கவர்ச்சி பொருளா பயன்படுத்திக் கிறாங்கன்னா.. மறுபக்கம்… சில செயலிகள திறமைய வெளிப்படுத்துறோம்ங்கிற பெயருல சில பெண்கள்… வயது வித்தியாசம் இல்லாம… அறிவு, புரிதல் இல்லாமா தங்கள தாங்களே கவர்ச்சி காட்சிப் பொருளாக்கிட்டு வராங்க. இதெல்லாம் எங்க போய் முடியும்ன்னு யோசிச்சா நமக்கும் ஒரு நிமிஷம் தலை சுத்ததான் செய்யுது.

மோகம்!

இதுல பெண்களோட மோகத்த சில சோஷியல் மீடியா செயலிகள் பயன்படுத்திக்கி றாங்க. சிலர் நிஜமாவே தங்களோட நடிப்பு பாடல், ஆடல் திறமைய வெளிப்படுத்து றாங்கங்கிறது நிஜம் தான். ஆனால், பெரும்பாலானவர்கள் அவங்களுக்கு தெரியா ம, அதிகமான லைக்ஸ் வேணும், ஃபாலோவர்ஸ் வேணும்ங்கிற ஒரு மோகத்துல, ஆசையில மத்தவங்கள பார்த்து தாங்களும் தவறு செய்ய ஆரம்பிக்கிறாங்க.

முட்டாள்தனம்!

கடந்த சில மாதங்களாக ஒரு வயதில் மூத்த பெண் ஒருவர், கேலி செய்கிறேன், நகைச்சுவை செய்கிறேன் என்ற பெயரில் மிக மோசமான பாவனைகள் வெளிப்படு த்தி தனக்கான கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

நிஜமாகவே நன்கு பாடி, ஆடி, நடித்து திறமை வெளிப்படுத்தி ரசிகர்கள் சேர்ப்பவர் கள் ஒருபுறம் என்றால்.. Self Destruction என்பதுபோல, தங்கள் பாத்திரத்தை தாங்க ளே சீர்குலைத்து கொண்டு ரசிகர்கள் தேடுவோர் ஒருபுறம் இருக்கிறார்கள். இது ஒருவகையில் முட்டாள்தனமான வெளிப்பாடு.

இந்த செயலால் உறவினர்கள், பிள்ளைகள், பெற்றோர் சமூகத்தில் பாதிக்கப்படலா ம் என்பதை இவர்கள் அறிவார்களா? என்பது பெரிய கேள்விக்குறி.

கவர்ச்சி!

பார்க்க படித்த, இளம் வயது பெண்களாக இருக்கும் சிலரோ… தங்கள் அழகையும், கவர்ச்சியையும், உடலையும் வெளிகாட்டி ரசிகர் கூட்டம் சேர்க்க பாக்கிறார்கள். அன்று சினிமாவில் சில்க் ஸ்மிதா, மும்தாஸ், புவனேஸ்வரி போன்றவர்கள் கவர்ச் சி நடிகைகளாக என்னசெய்தார்களோ, அதை அவர்கள் வசனங்கள் பயன்படுத்தியே இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஒருவேளை இது உங்கள் விருப்பம், நீங்கள் மட்டும் கண்டு ரசிக்க என்றால் சரி. நீங் கள் வெளியிடும் வீடியோக்களை அந்த மொபைல் செயலி நிறுவனமே பிரமோஷன் செய்துக் கொள்ள பயன்படுத்தி உலகம் முழுக்க பரவவிடுகிறது.

அந்த வீடியோ பதிவில் நீங்கள் திறமையானவர்களாக தெரிந்தால் பரவாயில்லை கவர்ச்சி பொருளாக வெளிப்படுவதன்மூலம் ஆஸ்கார் விருதா கிடைக்க போகிறது?

யார் கொடுத்த உரிமை?

இந்த கருத்து பலரும் கூறியதுதான். நீங்கள் எந்தஒரு செயலியை இன்ஸ்டால் செ ய்தாலும், எந்த இடத்தில் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் என்று போட்டிருந்தாலும் அங்கே முதலில் படித்து பாருங்கள். ஒருவேளை அந்த மொபைல் செயலி நிறுவன ம் நீங்கள் பதிவிடும் வீடியோக்களை தாங்கள் பிரமோட் செய்துகொள்ள பயன்படுத் திக் கொள்வோம் என்று முன்னரே கூறி இருக்கலாம்.

அப்படியாகவே இருந்தாலும், சிலமொபைல் செயலி நிறுவனங்கள் நல்ல வீடியோ களையா பிரமோட் செய்கிறார்கள்.? பெண்கள் குனிந்து இருப்பதுபோல, சேலை நழு வி விழுவது போன்ற காட்சியலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை வீடியோவின் கவர் பிக்காக வைத்துதான் பிரமோஷன் செய்கிறார்கள். இதெல்லாம் அந்த பெண்களுக் கு தெரியுமா? தெரியாதா? என்பது மற்றுமொரு கேள்வி

எதுக்கு?

1960, 1970களில் பெண்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டால் அது மோசமாக காணப்பட்டது, பிறகு கவர்ச்சி நடிகை யானால் மோசம் என கூறப்பட்டது. இப்போது நிர்வாணமாக நடிக்காத வரை சரி என காணும் போக்கு வந்துவிட்டது.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் சென்று பாருங்கள்.. மாடல் அழகிகளு க்கு நிகராக வெறும் லைஸ் மற்றும் ஃபாலோவர்கள் அதிகரிக்க வேண்டும் என்று தங்கள் உடலையே கவர்ச்சி பொருளாக்கி பிரமோட் செய்துக் கொள்ளும் பெண்கள் எண்ணிலடங்காத வண்ணம் குவிந்து கிடக்கிறார்கள்.

இது என்ன மாதிரியான மனநிலை? எப்படி இப்படி ஒரு தாக்கம் பெண்கள் மனதில் வளர்ந்தது. இன்டர்நெட்டில் பிரபலமாக வேண்டும் என்றால் என்ன வேண்டுமா னாலும் செய்யலாம் என்பது முடிவாகிவிட்டதா?

பெண்ணியம்…

என் உடல் என் உரிமை என்பது சரி. ஆனால் அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர. அதை மற்றவர் கண் களுக்கு கவர்ச்சி பொருளாக்கி லைக்ஸ்களுக்காக விற்பது பெண்ணியமோ, பெண்ணுரிமையோ அல்லவே.

திரையில் செக்ஸியாக நடித்த சில்க் ஸ்மிதா கூட… தான் ஒரு சாவித்திரி போன்ற நல்ல நடிகையாக தான் விரும்பினேன்.. அதற்கான வாய்ப்புகள் கிடைக்காத காரண த்தால்… கிடைத்த வாய்ப்புகளுக்கு நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தான் கூறி இருக்கிறார்.

ஆனால், இன்றைய சமூகத்தில் ஏதோ ஒரு தீய தாக்கத்தால்.. பெண்களே தங்களை கவர்ச்சி பொருளாக மாற்றிக்கொள்வது என்பது பரிதாபத்திற்குரிய விஷயமாக மாறி இருக்கிறது. இதில் ஒரு நல்ல மாற்றம் உண்டாக வேண்டும். ஆரம்பத்திலே யே வேரறுக்க வேண்டிய தீய சூழ்நிலை இது. ஆனால், நாம் கேளிக்கையாக கண்டு களித்து வருகிறோம்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: