Friday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செய்யாதீங்க – முகப்பரு வந்தால் இதையெல்லாம் . . .

செய்யாதீங்க – முகப்பரு வந்தால் இதையெல்லாம் . . .

செய்யாதீங்க – முகப்பரு வந்தால் இதையெல்லாம் . . .
பருவ வயதை தொட்ட‍வுடன் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும்  வரும்

பிரச்சனை ‘பரு’. இந்த ‘பரு’ வருவதற்கான அடிப்படைக் காரணத் தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோ சனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

முகப்பரு வந்தால் செய்யக் கூடாதவை ( Do Not Do – Pimple )  

மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரண மாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு ( Pimples)  வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு மூலம் வரும் பருக்கள் நெற்றி ( Fore Head), கழுத்து (Neck), முதுகு (Back) ப்பகுதிகளில் பொறிப்பொறியாக வரும்.

எனவே முதலில் எந்தக் காரணத்தினால் தனக்கு பரு வருகிறது என் பதைக் கண்டுபிடித்தல் மிகவும் முக்கியம். பரு, வருவதற்கான அடிப்படை காரணத் தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல் லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்தி லே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இரு ந்து தப்பிக்கலாம்.

*விரல்களை கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.

* பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.

*பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்று க்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிர‌ந்தரமாகி விடும்.

* பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ்பேக்காக போடுதல் கூடாது.

முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சிபெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.

=> ம‌லர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply