Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காப்பர் டி – Copper T – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள்

காப்பர் டி ( Copper T ) – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள

காப்பர் டி (Copper T) – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள்

ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று

நினைப்பவர்கள் கருத்தடைக்கான தாமிர வளையம் (Copper T) பொருத்திக் கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. கருத்தரிப்பதை தற்காலிகமாக நிறுத்த மட்டுமே காப்பர் டி (Copper T) பயன்படும். நிரந்தர தடைக்கு வேறு வழி உண்டு.

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி ( #CopperT ) பற்றிய தகவல்கள்

* மாதவிலக்கு ( #Menses )வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.

* காப்பர் டி (Copper T) பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

* காப்பர் டி (Copper T) பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

*காப்பர் டி (Copper T)போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அக்கர்ப்பத் தைத் தொடரக்கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலா ம். எனவே, அதை எடுத்து விடுவது நல்லது.

* காப்பர் டி (Copper T)யில், Copper (தாமிரம்) இருக்கும்வரைதான் நல் லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது முட்டை, கர்ப்பப் பையை துளைத்துக்கொண்டு உள்ளேபோக வாய்ப்புகள் அதிகம்.

*குழந்தை இல்லாதவர்கள் போடவேகூடாது. இதனால், கர்ப்பப் பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாக தங்காமல் போய் விடும்.

குறிப்பு:

கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக் கொ ள்வதும் நல்லதல்ல.  மீறிபோட்டுக்கொண்டால் அவர்களின் உயிருக்கேகூட ஆபத் தை ஏற்படுத்தும். ( #Uterus #Menses #Mensuration #Diseases #Sugar #Heart #CopperT #vidhai2virutcham, )

=> மலர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: