ஆஹா – குப்பையில் எறியும் முட்டை ஓடு – அதில்தான் எத்தனை எத்தனை நன்மைகள்
ஆஹா – குப்பையில் எறியும் முட்டை ஓடு – அதில்தான் எத்தனை எத்தனை நன்மைகள்
முட்டையில் மனித உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைய உண்டு. ஆனால்
அந்த முட்டையின் ஓட்டில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது என் பதையும் இது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சி யடையவும் உதவுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்களா?
தூக்கி எறியும் முட்டை ஓட்டின் நன்மைகள் என்ன தெரியுமா?
முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து வீட்டில் தரையில் மற்ற இடங்களில் படிந்திருக்கும் கரைகளை எளிதாக அகற்றலாம்.
முட்டை ( #Egg ) ஓட்டினை முகத்தில் தேய்க்கும் போது சருமமானது மென்மையாகிறது.
முட்டை ( Egg ) ஓடுகள் இரத்த அழுத்தத்தினை குறைக்கவும், கொழுப்பின் குறைக்கவும் உதவுகிறது.
தினமும் நாம் 1/2 ஸ்பூன் முட்டை( Egg ) பவுடரை உட்கொண்டால் நம் அன்றாட தேவைக்கான கால்சியத்தில் 90 சதவீதம் தருகின்றது.
முட்டை ( Egg ) ஓட்டினை நன்கு அரைத்து நம் வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாம்.
இதன்மூலம் அவற்றிற்கு தேவையான கால்சிய சத்தானது கிடைக்கு ம்.
காபி கலக்கும்போது அதனுடன் சிறிது முட்டை ( Egg ) ஓட்டின் பவுடரை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு தன்மையானது குறைந்து இனிப்பு சுவை அதிகரிக்கும்.
தாவரங்களை முட்டை ( Egg ) ஓட்டில் வளர்த்து நட்டால் அவை எளிதில் மட்கி அவற்றிற்கு உரமாகவும் மாறும் தன்மை கொண்டது.
=> மலர்விழி