Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ்

`துருவநட்சத்திரம்’ படத்தைத்தொடர்ந்து ஹரி ( Hari ) இயக்கத்தில் `சாமி 2′ ( Sami 2) படத்திலும் விக்ரமுடன் ( vikram )

இரண்டாவது முறையாக கைகோத்திருக்கிறார்  ஐஸ்வர்யா  ராஜேஷ். சாமி முதல் பாகத்தில் த்ரிஷா ( Trisha ) நடித்த கேரக்டரில்தான் இவர் நடித்திருக்கிறாராம். இதுதொடர்பாக அவரிடம் பேசியபோது, “ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட சினிமா வாழ்க்கையில் பெரிய இயக்கு நர்கள் படங்களில் நடிச்சிருக்கேன்; அதுவும் குறைந்த காலத்தில். இதை வரமாக நினைக்கிறேன்” என சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தார்  ஐஸ்வர்யா ராஜேஷ் ( #AishwaryaRajesh ). 

`நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ சாமி படம் வந்துச்சு. அப்பட த்துலவந்த `கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா பாட்டு செம ஃபேமஸ்; எனக்கு அப்படமும் ரொம்பப் பிடிக்கும். இப்போ சாமி2ல நான் நடிச்சிருக்கேன். இது சந்தோஷமான விஷயம். ஏன்னா, நிறைய கமர்ஷியல் படங்களில் நான் நடிச்சதில்லை. ஹரிசார் படங்கள் பக்கா கமர்ஷியல் படங்களா இருக்கும். ஹரிசார் எனக்கு  போன் பண்ணி சாமி2′ படத்துல நடிக்கமுடியுமா? சின்ன ரோல் தான்.. நல்ல ரீச் இருக்கும்’னு சொன்னார். ஹரி படத்துல நடிக்க ணும்னு ஆசையிருந்துச்சு. அதனால ஓகே சொன்னேன். ரொம்ப நாளால த்ரிஷா நடிச்ச கேரக்டரில் நடிக்க சரியான ஆளை தேடி க்கிட்டு இருந்திருக்காக. நான் சரியா இருப்பேன்னு தோன்றி யதால என்கிட்ட கேட்டாங்க. ஸ்பெஷலான கேமியோ ரோல். சில காட்சிகளில் மட்டும் வருவேன்.  

`சாமி படத்துல த்ரிஷா சூப்பரா நடிச்சிருப்பாங்க. அவங்கஅளவு  க்கு நடிக்கலைனாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு நடிச்சிருக் கேன். முதல் பாகத்துல த்ரிஷாவுக்கு வலுவான கேரக்டர் இருக் கும். படம் முழுக்க முக்கியத்துவம் இருக்கும். ஆனா, `சாமி2′ அப்படி யில்ல. சின்னரோல்தான். ஆனா, கொஞ்சம் சீன்ஸ் வந்தாலும் ரசிக ர்கள் ரசிக்குற மாதிரியிருக்கும். டூயட் பாட்டும் இருக்கும். கணவன் மனைவி உறவை அழகாகக் காட்டிருப்பாங்க. ஹோம்லியான லுக்குல விக்ரம் சார்கூட நடிச்சது சந்தோஷம். 

எல்லா இயக்குநர்கள் படங்களிலும் நடிக்கணும்னு நான் எப்போவு ம் ஆசைப்படுவேன். அதுஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.  அதனாலதான் சின்ன கேரக்டர் ரோலா இருந்தாலும் நிறைய இயக்குநர்கள்கூட சேர்ந்து வொர்க் பண்றேன். நான் நடிச்சிருக் கிற படங்கள் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் வித்தியாசமான கெட்ட ப்பில் திரைப்படங்களில் என்னைப் பார்ப்பீங்க. 

துருவநட்சத்திரம் படத்துலேயும் விக்ரம் சார்கூட நடிச்சிருக்கேன் . இதுவேற மாதிரியான ஜானர். இப்படத்துல துணிச்சலான பெண் கே ரக்டர். கெளதம் சாருடைய படங்கள் பார்த்தாலே சிம்பிள் &  க்ளாஸ் லுக்குல இருக்கும். என்னோட லுக்கும் படத்துல அப்படித் தான் இருக்கும். 

செக்கச்சிவந்த வானம் படத்ல சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்னு 4 ஹீரோக்களையும் ஒரே நேரத்துல பார்த்தேன். ஜோதிகா மேடம் என்ட்ட `உங்களோட படங்கள் எல்லாம் பார்த் திருக்கேன்.  செலக்டிவா பண்ணுறீங்கனு சொன்னாங்க. நல்லா  நடிக்கிறீங்கனு பாராட்டுனாக. இப்படத்துல கமிட்டாகும்போது ரொம்ப பயந்தேன். ஏன்னா மணிரத்ன சாருடைய படம். எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்னு பயம் இருந்துச்சு. அவரை பார்க்கும்போது எப்போவும் கண்டிப்பா  இருக்குற மாதிரியே இரு க்கும். அவர்கூட வொர்க் பண்ணி முடிச்சதுக்கு அப்பு றம்தான் பீல் பண்ணேன். ரொம்ப கூலான பெர்ஷன் மணி சார்னு ரொம்ப ஈஸியா இருந்துச்சு அவர்கூட வொர்க் பண்ணுனது. எந்தவொரு இடத்துலே யும் டென்ஷனே ஆகல. கஷ்டமே இல்லாம வேலை வாங்குனார். இவருடைய படத்துல வொர்க் பண்ணுனது வரம். ‘வடசென்னை’, `துருவ நட்சத்திரம்’, `செக்கச் சிவந்த வானம்’, ` சாமி2 ‘ படத்தில் என் னோட போர்ஷனோட ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. ரசிகர்கள் மாதிரி இப்படங்களோட ரிலீஸூக்கு நானும் வெயிட் பண்றேன்’’ என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ் ( #AishwaryaRajesh #DuruvaNatchathiram #ChekkaSivanthaVaanam #Sami # .

=> விகடன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: