TAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய 12 தவறுகள்!
டாக்ஸ் ஃபைலிங் – ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய 12 தவறுகள்!
ஆண்டுதோறும் வருமானவரியை கட்டுகிறோம் ஆனால் அதில் செய்யும்
தவறுகளை அறிவோமா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். இந்த வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது பலரும் 12 விதமான தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. அந்தத் தவறுகள் என்னென்ன என்று பார்ப்போம்.
டாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!
இதோ
1. தவறான ஐ.டி.ஆர் படிவம்
உங்கள் வருமானம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பொறுத்து, முதலில் சரியான ஐ.டி.ஆர் (ITR) படிவத்தைத் தேர் ந்தெடுக்க வேண்டும். இப்போது, ஏழு ஐ.டி.ஆர் படிவங்கள் உள்ளன. உதாரணமாக, ஐ.டி.ஆர் -1 சம்பள வருமானம் மற்று ம் வட்டி பெறும் எந்தவொரு நபருக்கு ம் பொருந்தும். ஒருவர் சம்பளத்துடன் சேர்ந்து மூலதன ஆதாயத்தைப் பெற்றிருந் தால், அவர் ஐ.டி.ஆர்- 2-யைத் தேர்வுசெய்ய வேண்டும். சரியான வருமான வரிப் படி
வத்தைத் தேர்ந்தெடுத்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் நிராகரிக்கப் படுவதைத் தவிர்க்கலாம்.
2.அனைத்து வருவாய் விவரங்களையும் குறிப்பிடாமல் இருப்பது
மக்கள் அடிக்கடி மறந்துவிடுகிற ஒன்று, வரி விலக்கு அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பதுதான். இருப்பினும், வரிக்கு உட்பட்ட மற்றும் வரிவிலக்கு பெற்ற வருவாயைக் குறி ப்பிடுவது அவசியம். விலக்கு பெற்ற வருமானங்களான சேமிப் புக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புத் தொகைகளிலிரு ந்து பெறும் வட்டி, பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் ( Mutual Fund ) விற்பனை செய்வத ன் மூலம் சம்
பாதிப்பது ஆகியவை அடங்கும். அனைத்து விதமான வருமானங்களையும் படிவத்தில் குறிப்பிடுவது முக்கியம். அவ்வா று நீங்கள் குறிப்பிடாமல் இருப்பது, ‘வருமானம் மறைக்கப்படுவ தாகக் கருதப்படும். இதனால் வரித்துறையின் கேள்விகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்
3. வரி வரவுகளைச் சரிபார்க்கத் தவறுதல் (Form 26AS credit)
உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்முன், உங் களது 26 AS-ல் உள்ள வருமானம், வரிப் பிடித்தம் (TDS), நீங்கள் செலுத்தும் முன்கூட்டிய வரி (Advance Tax), சுயமதிப்பீட்டு வரி (Self Assessment Tax) ஆகிய விவரங்களைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
நீங்கள் படிவம் 16-உடன் சம்பளம் பெற்ற நபராக இருந்தால், உங் களுடைய வருமானம் மற்றும் வரி விவரங்களைப் படிவம் 26AS உடன் எந்த முரண்பாடும் இல்லாமல் பொருந்துகிறதா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். இதனால், உங்களது ரீஃபண்டு தொகை யை எந்தக் குறைப்பும் இல்லாமல் பெறலாம்.
4.வாடகை வருமானம் அல்லது ஒன்றுக்கும்மேற்பட்ட சொத்துகளை க்குறிப்பிடாமல் இருத்தல்
உங்களிடம் ஒன்றுக்கும்மேற்பட்ட அசையா சொத்துகள் இருந்தா ல், வருமான வரிச் சட்டம் 1961-கீழ் ஏதேனும் ஒன்றை மட்டுமே நீங்கள் பயன்படுத்தி வருவதாகக் (Self-occupied) காட்ட முடியும்.
நீங்கள் சுயமாக வாங்கிய வீட்டை தவிர வேறொரு வீட்டை நீங்க ள் சொந்தமாக வைத்திருந்தால், அது காலியாக இருந்தாலும் வாடகை பெறப்பட் டதாகக் கருதப்பட்டு (Deemed to be rent) வரி செலுத்த வேண்டும். இவ்வாறான வீட்டிற்குச் செலுத்திய வீட்டுவரி மற்றும் வீட்டுக் கடன் வட்டியைக் கழித்துக்கொள்ளலாம்.
உங்கள் எல்லாச் சொத்துகளின் விவரங்களையும் வழங்குவது நல்லது. இல்லாவிட்டால், நீங்கள் வருமான வரி சட்டத்தை மீறுவ தாக குற்றஞ்சாட்டப்படுவீர்கள். நிதியாண்டு 2017-18முதல் வீட்டுக்கடன் வட்டி அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். மீதமுள்ள தொகை அடுத்த ஆண்டு படிவத்தில் எடுத்துச் செல்லப்படும்.
5. வருமான வரிப்பிடித்தம் செய்த தொகையை இருமுறை காண்பித்தல்
ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகளி ல் வேலை மாறும்போது, இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. உங் கள் வருவாயைப் பொறுத்து உங்களது முதல் அலுவலகத்தால் வரிப்பிடித்தம் செய் து வருமான வரித்துறைக்கு காண்பித்திருப்பார்கள். இருப்பினும், உங்களுடைய மொத்த வருமானத்தை இரண்டாவது கம்பெனிக்கு தெரிவிக்கும் போது ஏற்கெனவே பிடித்தம் செய்த வருவாய்க்கும் சேர்த்து வரிப்பிடித்தம் செய்யப்படலாம் அல்லது உங்களது வருவா யைத் தெரிவிக்காமல் இருந்தால் இரண்டாவது வழங்கிய சம்பளத்திற்கு மட்டும் வரிப்பிடித்தம் செய்யப்படலாம். இந்தத் தவறு
களை தவிர்க்க, உங்கள் புதிய அலுவலகத்தில் உங்கள் அனைத்து வருமானம், டி.டி. எஸ் (TDS) விவரங்களையும் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது . ஐ.டி.ஆர் படிவத்தில், இரு அலுவலத்திலிருந்தும் பெற்ற (அல்லது அதற்கும் மே லாக பொருந்தும் வகையில்) உங்கள் வருமானம் மற்றும் வரிவிவர ங்களை நீங்கள் வெளிப்படுத்தவேண்டும். இது இரட்டை வரிவிலக்கு களைத் தவிர்க்க உதவுவதுடன், உங்களுக்கு எளிதில் ரீஃபண்டு கிடைக்க வழி வகுக்கும்.
6. ஐ.டி.ஆர் 5-யை சரிபார்க்கத் தவறுவது
நீங்கள் ஐ.டி.ஆர் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, ஐ.டி.ஆர்-5 படிவத் தைக் கையொப்ப மிட்டு சிபிசி (CPC), பெங்களூருக்கு அனுப்ப வேண் டும். டிஜிட்டல் கையொப்பத்துடன் உங்கள் ஐ.டி.ஆர்-யை நீங்கள் தாக்கல் செய்திருந்தால், இந்தபடி தேவையில்லை. ஐ.டி. ஆர்-5-யை சமர்ப்பித்த 120 நாள்களுக்குள் தபால் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
மேலும் அது சி.பி.சி.யை சென்றடைந்ததையும் உறுதிப்படுத்திக் கொள்ள வும். உங்கள் ஐ.டி.ஆர்யை ஏழு முதல் பத்து நாள்களுக்குள் சென்றடைய வில்லை என்றால், 1800-425-2229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவு ம். அல்லது இன்னொருமுறை அனுப்பலாம். தற்போது இணையம் மூலம் சரிபார்க்கும் முறை (e-verification) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், அத னைப் பயன்படுத்தி இருந்த இடத்திலிருந்து ஆன் லைன் மூலம் சரி பார்க்கலாம்.
7. வருமான வரியைத் தாக்கல் செய்யாமல் இருப்பது
பலர் தங்கள் வருமான கணக்கைத் தாக்கல் செய்வதில்லை. ஏனெ ன்றால், அவை நீண்டகால மூலதன ஆதாயங்கள் வரி விலக்கு உடையவை என்பதாலும் மொத்த வருமானம் வரி வரம்பிற்கு கீழே உள்ளதாலும் தாக்கல் செய்வதில்லை. இருப்பினும், சட்டத்தின் 139 (1) பிரிவின் அண்மைய திருத்தங்களைப் பொறுத்த வரையில், உங்கள் விலக்கு நீண்டகால மூலதன ஆதாயங்கள் மற்றும் மொத்த வருமானத்து டன் குறைந்தபட்ச விலக்கு வரம்பைவிட அதிகமாக
இருந்தால், நீங்க ள் வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்ய வேண்டும்.
8. கூட்டு வருமானத்தைக் கணக்கிடாமல் இருப்பது (Clubbing Income)
கூட்டு வருமான விதிகளின்படி, குறிப்பிட்ட வட்டி வருமானம் (சிறு குழ ந்தைகள், மனைவி, மகனின் மனைவி முதலியன) வரிசெலுத்துபவர் தன் சொந்த வருமானம் மற்றும் அவரால் செலுத்த வேண்டிய வரி ஆகியவற்றி ன் மொத்த மதிப்பில் கணக்கிடப்படுகிறது. சிறுபிள்ளையின் வரு மானம் பெற்றோரின் வருமானத்தில் சேர்க்கப்படும்போது ரூ.1,500 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் உள்ள வருமான த்திற்கு பெற்றோர் வரி செலுத்த வேண்டும். இந்த வருமானத்தை (சிறு குழந்தைக்கு) நீங்கள் தவறவிடுகிறீர்களானால், நீங்கள் வரியுடன் அபராதம் செலு த்த வேண்டும்.
9. வருமானங்களை அதற்குரிய பகுதியில் அறிவிக்காதது
ஐ.டி.ஆர் படிவத்தில் வருமானத்தின் தன்மையைப் பொறுத்து அதற் குரிய கால அட்டவணையில் அறிவிப்பது அவசியம். உதாரணமாக, வரிவிலக்கு பெற்ற வருமா னத்தை அதற்குரிய ஐ.டி.ஆர் படிவத்தில் ‘விலக்கு வருமானம்’ பகுதியில் குறிப்பிட வேண்டும்.
10. இழப்புகளை அறிவிக்கத் தவறுதல் (Claiming brought forward Loss)
முந்தைய ஆண்டு வருமானவரிப் படிவத்தில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டு அதை இந்த ஆண்டுக்குக் கொண்டு வந்திருந்தால் (brought forward loss), அத னைத் தவறாமல் தற்போதைய வரிக்கணக்குத் தாக்கலில் காண்பி க்க வேண்டும். இதனால் உங்க வரி குறையலாம் அல்லது ரீஃபண்டு அதிகரிக்கலாம். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், உங்களது நஷ்டத்தை கேரி ஃபார்வர்டு செய்ய இயலாது.
11. அனைத்து வங்கிக் கணக்குகளையும் அறிவிக்காமல் இருப்பது
வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வரிதாரர் அனைத்து வங்கிக் கணக்குகளையும் (Except Dormant Account) வங்கியின் பெயர், கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி (IFSC) ஆகிய வற்றைத் தங்களது வரிப் படிவத்தில் அதற்குரிய பகுதியில் தெரிவிக்க வேண்டும்.
12. குறைபாடுள்ள வரி நோட்டீஸ் (Defective)
சுய தொழில் வருமானம் காண்பிப்போர் லாப நஷ்டக் கணக்குகளை யும் தாக்கல் செய்யா விட்டால், குறைபாடுள்ள நோட்டீஸ் (Defective Notice) வருகிறது. தவறான வரித்தாக்கல் பல அசெளகர்யங்கள் மற் றும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மேலே குறிப்பிட்ட தவறு களைத் தவிர்க்கவும். நீங்கள் தாக்கல் செய்யும் முறையில் நிறைவு இல்லையெனில், தயவுசெய்து உங்கள் ஆடிட்டரின் உதவியை அணுகுவது நல்லது.
=> செந்தில்