Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! – பாதிக்க‍ப்படும் இளம்பெண்கள்

நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! – பாதிக்க‍ப்படும் இளம்பெண்கள்

நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! – பாதிக்க‍ப்படும் இளம்பெண்கள்

ஒரு ட்வீட் தொகுப்பு இன்டர்நெட்டில் சென்ற வாரத்தில் மிகப்பெரிய

வைரலானது. அந்த ட்வீட் தொகுபில், விமானத்தில் புதியதாக அறிமுகமாகிக் கொண்ட இளம் ஆணும், பெண்ணும், எத்தனை சீக்கிரமாக நெருக்கமாக பழகினார்கள், தங்கள் குடும்ப புகைப் படங்கள் மற்றும் சுயவிருப்பு, வெறுப்புகள் பற்றி பேசிக்கொண் டார்கள் என, அவர்கள் அடுத்தடுத்து கழிவறை சென்று வந்தது வரையிலும் விவரமாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

இளம் பெண்ணை வாட்டி எடுத்த நெட்டிசன்கள், நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

அந்த ட்வீட் தொகுப்பு கேலியாக தான் இருந்தது என்றா லும், ரோஸ் ப்ளேர் என்ற பெண்மணி (அந்த ட்வீட்களை பதிவி ட்டவர்) தான் பதிவுசெய்த அந்நபர்களிடம்  முன்பே ஒப்புதல் வாங்கி எல்லாம் ட்வீட் செய்யவில்லை. தன் பொழுதுப்போ க்கு மற்றும் தனது பின்தொடர்பாளர் எண்ணிக்கை அதிகரிக் க அவர் இந்த ட்வீட் தொகுப்பை பயன் படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.

அவரது கேலியான ட்வீட்கள் பெரும்பாலும் ரசிக்கும்படியாக இருந்தாலும், சிலர் ட்வீட் தொகுப்பில் இடம்பெற்றிருந்த அந்த பெண்ணின் கதாபா த்திரத்தை திட்டியும், விமர்சித்தும் கருத்துகள் பதிவு செய்திரு ந்தனர்.

சில நெட்டிசன்கள், அந்த பெண்ணை சமூக தளங்களில் தேடிப் பிடித்து போய் ஆபாச மாகவும், நீ மோசமானவள், குறுகிய காலத்தில் எப்படி ஒரு ஆணுடன் இப்படி பழக முடியும் என்றெல்லாம் கூறி #PlaneBae என்று இன்டர்நெட்டில் அறியப்படும் அந்த பெண்ணை மிகு ந்த மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதனால், அந்த பெண் தன் அனைத்து சமூக தளங்களையும் டீ-ஆக்டிவேட் செய்து விட்டார். இதற்கு எல்லாம் முழுகாரணம் ரோஸ் ப்ளேர் எனப் படும் அந்த நடிகை தான்.

யாரிந்த ரோஸ் ( #RoseyBlair) ?

ரோஸ் ப்ளேர் ஒரு நடிகை மற்றும் எழுத்தாளர். இவர் இதுவரை தி பிராட் கேவ் – The Brat Cave (2015), சன்னி சிட் அப் – Sunny Side Up (2010) மற்றும் ஃபிலிம் பிக்ஸ் – Film Pigs (2012). போன்ற படங்களில் நடிகையாகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி இருக் கிறார்.

ரோஸ் ப்ளேர் தான் எங்கு சென்றாலும் அதை தனது சமூக தளங் களில் உடனக்குடன் பதிவு செய்யும் பழக்கம் கொண்டிருப்பவர். இந்த பழக்கத்திற்கு இப்போது #PlaneBae என்று அறியப்படும் அந்த பெண் இரையாகியிருக்கிறார்.

நடந்தது என்ன?

ரோஸ் ப்ளேர் மற்றும் அவரது துணை நியூயார்க்கில் இருந்து டல்லாஸிற்கு விமா னத்தில் பயணித்துள்ளனர். அப்போது அருகருகே இவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. ஆகையால், தங்கள் அருகில் சீட் ஒதுக்கப்பட்டிருந்து இருவரிடம் (முன்பு அறிமுகம் இல்லாத ஆண், பெண்) பேசி சம்மதம் வாங்கி இருக்கைகளை மாற்றிக் கொண்ட னர். உண்மையில், அவர்கள் செய்த உதவிக்கு ரோஸ் ப்ளேர் நன்றி கூறி இருக்க வேண்டும். ஆனால், அவர் செய்ததோ கேலிக்கூத்து.

ட்வீட் தொகுப்பு!

ஒன்றல்ல, இரண்டல்ல. தொடர்ந்து பல ட்வீட்களை… அதாவது அவர்கள் இருவரும் தோள் ஓட்டி உட்கார்ந்திருக்கிறார்களா? என்ன பேசுகிறார்கள், குடும்ப படங்களை ஒருவருக்கு ஒருவர் காண்பித்துக் கொள் கிறார்களா? இருவரும் எங்கே எழுந்துசெல்கிறார்கள்? அவர்க ள் என்ன துறையில் பணியாற்றுகிறார்கள் என்று ஒன்று விடா மல் அனைதையும் பின் இருக்கையில் இருந்து வேவு பார்த்து, ஒட்டுக் கேட்டு அவற்றை ட்விட்டரில் ட்வீட் தொகுப்பாக பதிவிட்டார் ரோஸ்.

வைரல்!

சென்ற வாரம் முழுக்க உள்ளூர் ஊடங்களில் இருந்து உலகின் முதன்மை செய்தி நிறுவனங்களாக அறியப்படும் பல ஊடங்க ளில் #PlaneBae என்ற பெண்ணின் வைரல் கதை தான் விவாத மாக மாறியது. ரோஸின் புகைப்பட ட்வீட் தொகுப்பில் இடம் பெற்றிருந்த உவான் ஹோல்டர் ஒரு கால்பந்தாட்ட வீரர் மற் றும் ஃபிட்னஸ் நிபுணர் என் றும் அறியப்படுகிறது. #PlaneBae என்ற அந்த பெண்ணும் ஃபிட்னஸ் மீது ஆர்வம் இருந்ததால், இ வருடன் மிக எளிதாக பேச துவங்கிவிட்டார் என்றும் அறியப்ப டுகிறது.

கமெண்ட்!

அவர்கள் சாதாரணமாக கூட பேசி பழகி இருக்கலாம். அவர்களை அறியாமல் கூட அவர்கள் தோள்கள் அருகருகே அமர்ந்து இருந்ததால் உரசி இ ருக்கலாம். அவர்கள் இயல்பாக கூட தங்கள் குடும்ப படங்களை ஒருவ ருக்கு ஒருவர் காண்பித்தி ருக்கலாம். ஆனால், இதற்கு எல்லாம் ரோஸ் கொடுத்த அந்த கேலியான கமெண்ட்டுகள் தான் இப்போது இயற்பெயர் அறியப்படாத அந்த #PlaneBae எனும் பெ ண்ணை சமூக தளங்களில் இருந்து விரட்டியடித்துள்ளது. எப்படி முதல் முறை அறி முகமான உடனேயே இப்படி நெருங்கி பழகலாம்? என்று நெட்டிசன் கள் அவர்மீது கருத்து போர் துவக்க காரணமானது.

நேரடி தாக்குதல்…

உவான் ஹோல்டர் இதை பெரியதாக எடுத்துக் கொள் ளவில்லை. இதன்மூலம் தானும் பிரபலமாகிவிட்டோம் என்பதுபோல தான் அவ ர் பலருக்கும் பேட்டி கொடுக்க துவங்கினார். ஆனால், #PlaneBae எனு ம் அந்த பெண், இதில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டா ர். அவர் தனது முகத்தை வெளியுலகிற்கு காண்பிக்க விரும்பவில் லை. இந்த இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் முகவரியை எப்படி யோ கண்டுபிடித்து அங்கே அவருக்கு நேரடிசெய்திகள் மூலமா க ஆபாசமாக பலரும் செய்திகள் அனுப்பியுள்ளனர். இதனால் மனவே தனை அடைந்த #PlaneBae, அனைத்து சமூக தளங்களை யும் டீ-ஆக்டிவேட் செய்து விட்டு கிளம்பிவிட்டார்.

நேர்காணல்!

Today Show என்ற புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியில் உவான் ஹோல்டர், ரோஸ் ப்ளேர் மற்றும் #PlaneBae ஆகியோரை நேர்காணல் நிகழ்சிக்கு அழைத்து ள்ளனர். ஆனால், #PlaneBae வர மறுப்பு தெரிவித்த கார ணத்தால், மற்றவர்கள் மட்டும் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட னர்.

நடிகையும் எழுத்தாளருமான ரோஸ் ப்ளேர் #PlaneBaeவுக்கு ஏற்ப ட்ட மனவுளைச்சலுக்கு மிகவும் வருந்துகிறேன். சாரி என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

வைரலின் கொடூர முகம்!

எப்படியாவது வைரலாகிவிட வேண்டும் என்று கச்சை கட்டி கொண்டு சிலர் ஒருபுறம் இருக்க.. #PlaneBae போல தானுண்டு தன் வாழ்க்கை உண்டு என்று தனிமை விரும்பும் நபர்களும் ஏராளமா னோர் இருக்கிறார்கள்.

ஆனால், ரோஸ் ப்ளேரின் அந்த ட்வீட் தொகுப்பு #PlaneBaeவின் பர்சனல் வாழ்க்கையில் விளையாடிவிட்டது. சாதாரணமான உரையாடல் ரோஸின் கமெண்டால் உருமாற, இன்று சமூக தளத் தில் தலை காட்ட முடியா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் #PlaneBae.

எங்கே ப்ரைவசி…?

இந்த டிஜிட்டல் யுகத்தில் எங்கே ப்ரைவசி இருக்கிறது.. ஒரு Hastag அடித்தால் போதும், உங்கள் படங்கள், வீடியோக்கள் அனைத்தும் ஃபில்டராகி உலகமே காணும் அளவிற்கு வெளிப்படையாகிவிடும். இந்த சமூகதளமாய உலகம், நிஜ உலகில் இருந்து பலரை ஒதுங்கி வாழ செய்கி றது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். சமூக தளத்தின் மூலம் பிரபலமாகி நல்ல வாய்ப்பு பெற்றவர்கள் எத் தனைபேர் இருக்கிறார்களோ, அதற்கு மேலாகவே மனவுளைச்சலு க்கு ஆளாகி விலகியவ ர்களும் இருக்கிறார்கள்.

=> பாலாஜி விஸ்வநாத்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: