Friday, April 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெற்றோர் தலையிடக் கூடாது – கணவன் மனைவி பிரச்னையில் – முன்னாள் நீதிபதி அதிரடி

பெற்றோர் தலையிடக் கூடாது – கணவன் மனைவி பிரச்னையில் – முன்னாள் நீதிபதி அதிரடி

பெற்றோர் தலையிடக் கூடாது – கணவன் மனைவி பிரச்னையில் ( Parent should not interfere in husband-wife problem ) – முன்னாள் நீதிபதி அதிரடி 

குடும்ப நீதிமன்றத்துக்கு வர்ற பெரும்பாலான வழக்குகள்ல அடிப்படை

பிரச்சனைகள் இரண்டு ஒன்று கணவனும் மனைவியும் தங்களு க்குள் மனம்விட்டு பேசிக்காதது’’ மற்றொன்று இவர்கள் பிரச்ச னையில் இவர்களது பெற்றோர்கள் தலையிடுவதுதான் என்று அழுத்தம் திருத்த‍மாக சொன்னதோடு ஒரு உண்மை சம்பவத் தை இங்கே விவரித்தார் அந்த முன்னாள் நீதிபதி

‘‘அந்த தம்பதிக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்ல.. ஆனா அவங்க பெற்றோர்கள், சொந்தக்காரங்க இடையில் பயங்கர ஈகோ பிரச்னை நீ சொல்லி எங்க பொண்ணு என்ன கேக்கிறது?’னு சண்டை வலுத்து, அவுங்க ளே புருஷன், பொண்டாட்டியை பிரிச்சுவெச்சுட்டாங்க. ரெண்டு பே ரையும் பேசிக்கவேவிடல. ரெண்டு தரப்பினரையும் கூப்பிட்டு கவு ன்சிலிங் கொடுத்தபிறகு தெளிவானாங்க. இப்போ சந்தோஷமா இருக்காங்க’’ என்றவர், இளம்மனைவிகளுக்கு சொன்ன முக்கிய டிப்ஸ்…

‘‘சின்னசின்ன பிரச்னைகளை பெத்தவங்ககிட்ட கொண்டுபோக வேண்டியதில்லைதான். சிலபேர் பெரிய பிரச்னைகளையும் அதே மாதிரி தனக்குள்ள போட்டு மறைச்சுக்கறாங்க. இது தப்பு.

‘நம்ம அம்மா, அப்பா இவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண் ணி வெச்சிருக்காங்க.. இந்த பிரச்னையெல்லாம் போய் சொன்னா அவங்க வருத்தப்படுவாங்களே’னு நினைச்சு, தனக்கு நடக்கிற கொடுமைகளை சொல்லாம விட்டா, அப்புறம் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியி ருக்கும்…’’

சிறுசிறு பிரச்சனைகள் வந்தால் அதனை கணவன் மனைவி இருவருமே ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து மனம் விட்டு பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

மிக பெரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டாலோ அல்ல‍து அவ ர்களது உயிருக்கே ஆபத்து என‌ வந்தாலோ அல்ல‍து கள்ள‍க்காதல் விவகாரமோ அல்ல‍து உடல் ரீதியான நோய்கள் குறித்த‍ பிரச்சி னைகளோ, வந்தால் அதனை பெற்றோரிடம் தெரிவித்து, முறைப் படி காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுகலாம்.

=> வி. அகல்யா, மூத்த‌ வழக்க‍றிஞர்
கவுன்சிலர் – முன்னாள் நீதிபதி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: