Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை 

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை 

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை 

தங்களை முன்னிறுத்த நான்கு பேர் பாராட்ட, பெரும்பாலான பெண்கள், கிரீடம் சூட் டிக்

கொள்ள என, தங்களின் வெளிப்புற தோற்றத்திற்கே முக்கியத்துவம் தர முயல்கின் றனர். பெண்களே கவர்ச்சி வேண்டாம். கண்ணியம் காப்போம். சமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்துவிட்டால் அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டிபோகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம்கூட ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.

பெண்களே கவர்ச்சி வேண்டாம்.. கண்ணியம் காப்போம்..

ஒரு பெண், தான் தனித்திறமை உள்ளவள், பல சாதனைகளை செய்ய முடிந்தவள், பல இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் படைத்தவள், தன் இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தெரிந்தவள் என்பதை வெளிக்காட்ட, மற்றவர்கள் பாராட்டும்படி நடக்க தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஆனால் பெண் களின் தற்போதைய நிலையை சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்கை ஆராய் ந்து பார்த்தால், திருப்திகரமானதாக இல்லை என்றுதான் கூறத்தோன்றுகிறது.

எல்லா துறைகளிலும் பெண்கள் ஜெயித்து வரும் வேளையில், இது என்ன புதுக்க தை என கோபப்படக்கூடாது. நன்கு கூர்ந்து ஆராய்ந்தால், பெண்களின் மாறிய மன நிலையை புரிந்துகொள்ளலாம். பெரும்பாலான பெண்கள், தங்களை முன்னிறுத்த, நான்கு பேர் பாராட்ட, கிரீடம் சூட்டிக்கொள்ள என தங்களின் வெளிப்புற தோற்றத் திற்கே முக்கியத்துவம் தர முயல்கின்றனர்.

உடுத்தும் உடை, தற்போதைய பெண்களின் மூச்சாகவே மாறிவிட்டது எனலாம். உட லை மறைக்கத்தான் உடை என்பதெல்லாம் பழங்கதை. உடலை வெளிச்சம் போட்டு காட்டத்தான், புதுப்புது நவநாகரிக உடைகள் என்ற கட்டத்திற்கு வந்து விட்டோம். ஓர் உடை அழகாக இருக்கிறது என்பதே, அதை நாம் தேர்ந்தெடுப்பதற்கான காரண மாக இருக்கக்கூடாது. அது நம் உயரம், உடல் அமைப்பு, வயது, சமுதாயத்தில் நம் நிலை இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அமைய வேண்டும். ஆனால், இப்ப டியெல்லாம் யாரும் கவனம் கொண்டுள்ளதாய் தெரிய வில்லை.

உடை என்பது, நம் சவுகரியத்திற்கு ஏற்ப, கண்ணியமாகத்தான் இருக்கணுமே தவிர, உடையை வைத்து நம்மை விமர்சிக்கும்படி இருக்கக்கூடாது. கண்ணியமான உடை , மற்றவர்களை கவர்ந்து, சுண்டி இழுக்காத உடை, நாகரிகமான முறையில் அணிந் தாலே, கம்பீரம் தானாகவே வந்துவிடும். படிக்கும் பருவ வயதில், தன் எதிர்காலம் பற்றிய லட்சியத்தோடு நடைபோடும் இளம்பெண்கள் எத்தனைபேர், இதை கவனத் தில் கொண்டுள்ளனர்?

நடுத்தர வயது பெண்களுக்கே இதைப் பற்றிய தெளிவு இல்லை. உடை, சிகை, முக அலங்காரம் அனைத்தும், ஆண்களின் பார்வைக்காக என்பதில் கவனம் செலுத்துவ தால், பெண்கள், தங்களின் இலக்கு என்ன என்பதையே தீர்மானிக்க முடியாமல் தடு மாறுகின்றனர். பின் எங்கிருந்து பெண்கள் சமுதாயம் முன்னேற்றம் காணும்?

பெண்கள், தங்களுக்கான வழியை விரிவுபடுத்தி கொண்டு போகும்போது, பாலியல் தொந்தரவு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனியாக ‘டூ வீலர்’ ஓட்டும் பெண்ணை, சமூகம் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த நிலை, இன் று இல்லை. மற்றவர்கள் நம் உடை அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கலாம்; ஆனால், ருசிக்கவும் வேண்டும் என்ற எண்ணம், ஆண்கள் மனதில் ஏற்படா வண்ணம் நடப்பது, நம் கடமை தானே! ( #Glamour, #Sex, #Sexy #Dress #Girls #vidhai2virutcham )

=> யமுனா வசீகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: