பிரம்மிப்பூட்டும் செய்தி – குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா
பிரம்மிப்பூட்டும் செய்தி – குகைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவர்களை காப்பாற்றிய யோகா
சிறுவர்களோடு குகைக்குள் சென்றிருந்த துணைப்பயிற்சியாளர் எக்போல் சிறு
வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். அதன் பின் புத்த மடத்தில் சேர்ந்து புத்த துறவியானார். இதனால், யோகக்கலை, ஆசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகிய வற்றை நன்கு கற்றுத்தேர்ந்தார்.
தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட 15 சிறுவர்க ளை காப்பாற்றிய. யோகக்கலை…. பிரமிப்பூட்டும் செய்தி
குகைக்குள் மாட்டிக்கொண்டபின் இருக்கும் உணவுகளைச் சிறுவர்களுக்கு கொடுத் து அவர்களைச் சோர்வடையாமல் எகாபோல் பார்த்துக் கொ ண்டார். ஆனால், உணவு தீர்ந்தவுடன், தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களு க்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.
காற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இட த்தில் இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால், இவை அனைத்தை யும் தான் கற்றுக்கொண்ட தியானம், மூச்சு ப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களைப் பாதுகாத்தார்.
தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனதை ஒரு முகப்படுத்தி, சிறுவர்களை பெரும்பகுதிநேரம் அமரவைத்து அவர்களின் சக்தியை செலவழிக்காமல், சோர்வடையாமல் துணை ப்பயிற்சியாளர் பாதுகாத்தார். இதனால், சிறுவர்கள் சோர்வடையாமல் 15 நாட்களுக்கு மேலாக உயிர்வாழ முடிந்தது….
#ThailandCave #Rescue #Cave #Thailand #Cave #Yoga #Meditation
=> தி. இந்து