கலைஞர் அப்படி என்னய்யா செஞ்சுட்டாருன்னு கேட்பவரா நீங்கள்?
கலைஞர் அப்படி என்னய்யா செஞ்சுட்டாருன்னு கேட்பவரா நீங்கள்?
14 வயதில் 95 வயதுவரை தளராத மன உறுதியோடும், நம் தமிழ்சமூகத்திற்கும்,
தமிழகத்திற்கும் ஏன் தமிழர்களுக்கும் தொண்டாற்றி, தனது இறுதி மூச்சை அடக்கிக் கொண்டு, பேரறிஞர் அண்ணாவின் காலடியில் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். அவரது இழப்பு வேறு எந்த தலைவராலும் ஈடுசெய்ய இயலாதது என்றாலும் அவர் செய்த சாதனைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.
பொதுவாக திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரின் நோக் கமும் ஒன்றே ஒன்று தான் – “திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் நல்லது செய்வர்.. தமிழகம் மீண்டும் வளர்சிப்பாதையில் செல்லும், தமிழ் நாடு முதன்மையான மாநிலமாக மாறிவிடும். தமிழும் தமிழர்களும் உயர்வு பெறுவார்கள். அதனை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்தி விடவேண்டும். தமிழ், தமிழர், தமிழ்நாடு எல்லா வகைகளிலும் பின்தங்கவேண்டும்”, என்ற ஒரே நோக்கம்தான் அவர்களுக்கு…
இதோ
கலைஞரும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு செய்த சாதனை கள் கணக்கிலடங்கா…
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்;
2. பஸ்போக்குவரத்தை நாட்டுடமையாக்கியது கலைஞர்;
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்;
4. 1500பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித் தடம் அமைத்தது கலைஞர்;
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்;
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்;
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்;
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்;
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்;
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்;
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்ற வை) கொண்டுவந்தது கலைஞர்
12. இந்தியாவிலே முதன்முதலில் காவல்துறை ஆணையம் அமைத்தது கலைஞர்;
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக் கென துறை அமைத்தது கலைஞர்;
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்;
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC – 31%, SC – 18 % ஆக உயர்த்தியது கலைஞர்;
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்;
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்;
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்;
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்;
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்;
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்;
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்;
23. கோவில்களில் குழந்தைகளுக்கான “கருணை இல்லம்” தந்தது கலைஞர்;
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்;
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்;
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்;
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்;
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்;
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்;
30.உருதுபேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோ ரில் தமிழ் இஸ்லாமியர்கள்போல் சேர்த்தது கலைஞர்;
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தது கலைஞர்;
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்;
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்;
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்;
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட் டோரில் இணைத்தது கலைஞர்;
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரைச் சேர்த்தது கலைஞர்;
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்;
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்;
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்;
40. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்;
41. வருமான உச்ச வரம்புக்குகீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இலவச கல்வி இளம்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்;
42.தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்;
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்;
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்;
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்;
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்;
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்;
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்;
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்;
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்;
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்;
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்;
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்;
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்;
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்;
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்;
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்;
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தது கலைஞர்;
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்;
60. இருபெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலி ருந்து வர செய்தது கலைஞர்;
61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்;
62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்;
63.தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்;
64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்;
65. தமிழகத்தில் கான்கிரீட் சாலைகளை அமைத்தது கலைஞர்;
66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்க ளுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்;
67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்;
68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்;
69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்;
70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்;
71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் கலைஞர்;
72. விவசாயக்கடனை 7000 கோடி அறவே தள்ளுபடி செய்து, (2006-2011) வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழகத்தையும், விவசாயிகளையும் காத்தவர் கலைஞர்;
73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர்;
74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்;
75. நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே தமிழகத்தில் வைத்து ராஜீவ் காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால் கொலை பழியை சுமந்தது கலைஞர்;
76. ராஜீவ் படுகொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்ன போது, கழகத்தின் மீது படிந்த கொலைப் பழியைத் துடைத்தவர் கலைஞர்;
76. சமத்துவபுரம் கண்டது கலைஞர்;
77. உழவர் சந்தை தந்தது கலைஞர்;
78. டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டு வந்தவர் கலைஞர்;
79. தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணிணிப் புரட்சியையும் கொண்டு வந்தவர் கலைஞர்;
80. தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது கலைஞர்;
81. சமச்சீர் கல்வி கொண்டு வந்தது கலைஞர்;
82. இந்தியாவிலே முதன் முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை அடுக்கு மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர்;
83. ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது கலைஞர்;
84. திராவிடக்கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர்;
85. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தியவர் கலைஞர்;
86. சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie University) உருவாக்கியவர் கலைஞர்;
87. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University) உருவாக்கியது கலைஞர்;
88. கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம் தந்தது கலைஞர்;
89. திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM) அமைத்தது கலைஞர்;
90. ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்று க்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம் அமைத்தது கலைஞர்;
91. சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.) அமைத்தது கலைஞர்;
92. திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School) அமைத்தது கலைஞர்;
93. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம். அமைத்தது கலைஞர்;
94. ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம். அமைத்தது கலைஞர்;
95. கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இட ங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், துறை முக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனைய ங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின…
96. சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.
97. 120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனை “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனையாக மேம்பாடு அடைந்தது;
98. கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா;
99. 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
100. 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்;
101. 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலி யில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்;
102. தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி;
103. 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி;
104. சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்;
105. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
106. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்;
107. 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்;
108. கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு;
109. நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்;
110. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற் றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி;
111. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்;
112. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவது, பல மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்;
113. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன;
114. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்ட த்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி செயல்படுத்தியது கலைஞர்;
115. அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் “பவானி அத்திக்கடவு திட்டம்” என்கிற அத்திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர்;
116. சென்னையில் கோயம்பேடு காய்கனி அங்காடி, சென்னை மருத்துவ கல்லூரி கட்டிடம், நாமக்கல் கவிஞர் மாளிகை, பனகல் மாளிகை, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்…. இப்படி எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக;
117. செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா. இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உரு வாக்கியதும் திமுக ஆட்சிதான்;
118. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில் வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொரு ள் துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்க செய்தது திமுக;
119. சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், நின்று போன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை கொண்டு வந்ததும் திமுகதான்;
120. பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொரு ளாதார மண்டலங்களை அமைத்து தொழில் வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ் நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோ மொபைல் உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக;
121. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்க ளில் துவக்கப்பட்டன
122. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 33% அதிக ரித்தது 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்… தமிழகத்தை தொழில் வளர்சியில் இந்தி யாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக ஆட்சி.. அதன் காரணமாக தற்போது இந்தியாவி லேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு.. GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிக ளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது;
123. தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது திமுக ஆட்சியில்தான்;
124. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று குட முழுக்கு விழாக்கள் நடைபெற்றன;
125. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாக ராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின் று விட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில் 25ஆண்டுகளுக்குபின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்.
இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்.
உதாரணத்துக்கு 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட் டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமா னம் ஒருஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்தர வருமானம் 1,36,000 ரூபாய். 1960 இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011இல் நாட்டின் பணக் கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது… கலைஞர் & ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சியை சில சக்திகள் தொடர்ச் சியாக எதிர்ப்பதில் இருந்தே தெரியவில்லையா கலைஞரு ம் திமுகவும் தமிழ் & தமிழ் நாட்டின் வளர்ச்சிகாக பாடுபடுகி றார்கள் என்று..
மேற்கூறியவற்றை உணராமல், தூற்றியவர்கள், மனம் திருந்தி, கலைஞரை போற்றுவோம் தி.மு.க வை உயர்த்து வோம். அதனை விடுத்து தேவையின்றி கலைஞர் மீதும் திமுகமீதும் சேற்றை வாரி இறைத்தும் அவரது மரணத்தை கிண்டல் கேலி செய்வீர்கள் என்றால் உங்க ளை எல்லாம் திருத்தவும் முடியாது.
உங்கள் விமர்சனங்களையும் தாங்கும் இதயம் ஒவ்வொ ரு தி.மு.க• தொண்டனுக்கும் உண்டு. எதையும் தாங்கும் இதயத்தை ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் கொடுத்து சென்றிருக்கிறார் கலைஞர்.
( #Kalaignar #MKarunanidhi #Stalin #Death #DMK #DravikaMunnetraKazhagam #கலைஞர் #தி.மு.க• #கருணாநிதி )
வாட்ஸ் அப்-ல் படித்த பதிவு
இந்த விரிவான பட்டியலை தயாரித்து வெளியிட்டதற்கு மிக்க நன்றி. அனேகமாக இதைப் பார்த்தபின் மனம் மாறலாம்.
நீங்கள் சுயமாக இத்தகைய பதிவை இடமாட்டீர்கள் என்று தெரியும்… இருந்தாலும் இத்தகைய பதிவை அளித்தமைக்கு மிக்க நன்றி.. யாருக்குத் தெரிய வேண்டுமோ இல்லையோ நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு…
… இப்படிக்கு,
மானமிகு சுயமரியாதைக்காரன்….