Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில்  பணிபுரிய காரணம்?

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்?

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்?
இளைஞர்களுக்கு வெளிநாட்டின் வாழ்க்கை தரம்மீது கொண்ட மோகம்?   இல்லை

…! அதிக சம்பளம் பெற?  ஆம் இவை அனைத்தும் பெரு வர்த்த‍கத்திற்காகத்தான்  அதில் சந்தேகம் ஏதும் தேவையில்லை! 
ஒரு படித்து முடித்த இளைஞர், வேலைக்கு செல்ல தன்னுடைய நேர்காணலுக்கு தயார் படுத்திக்கொள்வதுப் போல்  சுவாரசியமான அனுபவம் ஏதுமில்லை. தங்கள் நேர்காணல் நடத்துபவரிடம் தன் முழு திறமையை காட்டிவிட வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் மனதில் நிறைந்திருக்கும். நேர்காணல் கேள்வி கேட்பவரோ வேலைக்கு புதிதானவர்கள் (freshers) என பார்த்து கேள்விகளை முன் வைப்பதில்லை,
இவர்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு வேலைக்கு ஆள் எடுப்பதில் இருந்து என்ன சம்பளம் கொடுப்பது வரை அந்த நிர்வாகம் நிர்ணயிக்கும்.
அப்படி இப்படி என்று முண்டி அடித்து ஒரு வேலை வாங்கிய பின் நாம் செய்யும் வேலையை விட சம்பளம் குறைவாக தந்து அதைவிட இருமடங்கு நம் உழைப்பை வாங்கிக் கொள்வார்கள். 
வேலை பார்க்கும் ஒவ்வொரு மனிதர் உள்ளத்திலும் நாம் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்கிறோம் என்ற எண்ணம் இருக்கும், ஒரு சிலர் இந்த நிறுவனத்தை விட்டா வேறு நிறுவனத்தில் நாம் குப்பை கொட்ட முடியாது ஆகையால் இங்கேயே இந்த வருமானத்தில் இருந்து விடலாம் என்று நினைக்க, வேறு சிலர், நிறுவனம் நிறுவனமாக மாறி மாறி வேலை புரிவது. 
இன்னும் சொல்லப்போனால் திறமை உள்ளவர் அதிகபட்சம் எப்படி வெளிநாட்டுக் கு போகலாம்னுதான் யோசிப்பார்கள்.  அட இதுக்கே வா? நம்ப நாட்ல PG படிக்க ஏற்ற வசதி UG படிப்புக்குக் கூட இல்லன்னு ஒரு உரையாடலில் என் நண்பர் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.
இந்தியாவில் அடிக்கடி படிப்புக்கே பிரச்சனை இதுல வேலையை பத்தி என்ன சொல்லிக்கிட்டு. கடந்த வாரத்தில் தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது அதில் ‘வீட்டு வேலை செய்பவர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் தரப்பட வேண்டும் மீறினால் சிறைத்தண்டனை” என்று அறிவித்து. 
இதைப்பற்றி ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு கட்டுரையும் வெளியிட்டது. அதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திக்கு 39-37 ரூபாய் என ஒவ்வொரு வேலைக்கேற்ப மாநகராட்சி மற்றும் நகராட்சியில் வீட்டு வேலை செய்பவர்களுக்கும் 35-33 ரூபாய் என வேறுபடும்.
இப்படி படிக்காதவர்களுக்கும் அரசு  நிர்ணையத்த ஊதியம் பெற உரிமை இருக்கிற து இதை பற்றி பெருவாரியான வீட்டு வேலை செய்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பி ல்லை. இருப்பினும், பத்திரிகையிலிருந்து… பன்னாட்டு நிறுவனம் வரை படித்து முடித்த ஒரு இளைஞர் வாங்கும்  சம்பளம் பெருவாரியாக குறைந்தபட்சம் 10,000 ரூபாயாகத்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒட்டுமொத்தமாக 33 ரூபாய் தான் வாங்குகிறோம் இது வீட்டு வேலை செய்பவர்களை காட்டிலும் மிக குறைந்தது.  மேலும் இது ஒரு தனி மனிதன் சுரண்டலை வெளிப்படையாகத் காட்டிகிறது.
தகுந்த சம்பளத்தை பெற வேண்டும் என்று ஒரு கூட்டம் நினைக்க, மறுபுறம் இதை ப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஒரு கூட்டம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறார்கள். 
அந்தந்த துறைகளுக்கேற்ப‌ படித்து முடித்துவரும் மாணவர்களை பணி அமர்த்துதல் அவர்கள் செய்யும் வேலைக்கேற்ப சம்பளம் கிடைத்தால் ஏன் அவர்கள் வெளிநாட்டுக்கு போவதற்கு எண்ணம் வரப்போகிறது?
இந்தியாவில் வேலையின்மை, கிடைத்த வேலைக்கு கம்மியான சம்பளம் இதைத் தான் ஆளுக்கிற அரசு மாற்ற வேண்டும், அதை விட்டுவிட்டு சாதி, மதம் மற்றும் மாட்டு பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு மக்கள்மீது தேவை இல்லாத தை செயல்படுத்துவதற்காகவா, மக்கள் இவர்களுக்கு வாக்கு அளிக்கிறார்கள், வளர்ச்சிக்கு எது தேவையோ அதில் முனைப்போடு செய்யல்பட வேண்டும் அது ஆளுகின்ற அரசுக்கும் வந்து ஆளப்போகும் அரசுக்கு பொருந்தும்.
Regards,
Gayathri, gayucelkon@gmail.com

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: