நயன்தாரா அதிரடி – சம்பளம் கொடுத்தாலும் இனி லாபத்திலும் பங்கு! – தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி
நயன்தாரா அதிரடி – சம்பளம் கொடுத்தாலும் இனி லாபத்திலும் பங்கு! – தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி
வித்தியாசமான கதையுடன் நயன்தாராவை அப்ரோச் செய்து நடிக்க
OK வாங்கியவர் புதுமுக இயக்குனர் நெல்சன். இவரது அக் கதையில் நயன்தாராதான் நாயகி. கதை நாயகன் யோகி பாபு. கோலமாவு கோகிலா என்ற பெயருடன் இப்படம் கடந்த வெள்ளி க் கிழமை வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னாடி
‘எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சு, என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலுடன், கடந்த வெள்ளிக் கிழமை படம் பார்க்க சென்றனர்.
வசூலில் மாஸ் காட்டும் நயன்தாரா ( #Nayanthara )!
படத்தை பார்த்த அத்தனை ரசிகர்களும் வயிறுகுலுங்க சிரித் து வெளியே வந்தனர். படத்தின் பாடல்கள் காமெடி கதை என அத்தனையும் சூப்பர் என நயன்தாராவை புகழ்ந்து தள்ளினர். யோகி பாபுவையும் புகழ்ந்து பாராட்டினர். இதனால் கோலமாவு கோகிலா சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1.58 கோடி வரை வசூலித்துள்ளதாக
கூறப்படுகிறது. ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் கோலமாவு கோகிலா ( #KolamavuKokila )படம் பல கோடி வசூலிக்கும் என தெரிகிறது.
மேலும் இந்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் இமாலய வெற்றியால், நயன்தாரா, அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறா ராம். அது என்னவென்றால், பெரிய நடிகர்கள் போலவே தானும் இனி நடக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதாவது சம்பளம் தனி – திரைப் படம் வெற்றி பெற்றால், லாபத்திலும் பங்கு கேட்கவிருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்து ள்ளார்களாம். #Kolamavu #Kokila