Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்

உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்…

உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்…

ஏராளமான சத்துக்கள் ஆப்பிளில் மட்டுமல்ல அதன் தோலிலும்

நிறைந்திருக்கின்றன. சிலர் ஆப்பிளை அதன் தோலை சீவி விட்டு தான் சாப்பிடுவார்கள். ஆனால் ஆப்பிளைவிட அதன் தோலில்தான் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆப்பிள் ( Apple )தோலில் உள்ள சத்துக்களும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும் …!

ஆக்ஸிஜனேற்றிகள் ஆப்பிள்களில் அதிகம். இது நோயிலி ருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் பயிற்சியின்போது இழந்த உடல்வலிமையைப் பெற முடியும்.

ஆப்பிள் தோலில் உள்ள சத்துக்கள்;

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண்புரை ஏற்படும் அபாயத்தை குறைத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆன்டிஆக்சிடண்டுகளும், ஃபிளாவனாய்டுகளும் ஆப்பிள் பழத்தோலில் அதிகம். இது இதய பிரச்சினைகளை ( Heart Disease ) சரிசெய்யும். ஆப்பிளில் கால்சியம் ( Calcium ), பொட்டாசியம் ( Potassium ), பாஸ்பரஸ் ( Passphrases ), மற்றும் இரும்பு ( Iron ) ஆகியவை நிறைந்துள்ளன. அவை எலும்பு ( Bone ) களை வலுவூட்டும். வலுவாக மாறும்.

ஆப்பிளின் தோலில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவை சிறுநீரக கற்கள் ( Kidney Stone) உருவாவதையும், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகுவதை யும் தடுத்து உடல்பருமனை அதிகரிக்காமல் தடுக்கிறது.

ஆராய்ச்சிக்காக வரும்போது உயர் ரத்த அழுத்தத்தின் சிக்கலைக் கட்டுப்படுத்த இது உதவும். ஆப்பிளில் பேசினின் என்ற ஒரு இரசாய ன உள்ளது. இது கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறைக்க உதவுகிறது. அதேபோல் ஆப்பிளின் தோலில் இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது.

ஆப்பிளின் தோலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்த நாகம் ஆகியவை கர்ப்ப காலத்தில் இரத்த சோகைக்கான ஆபத் தை குறைக்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் ( Breast Cancer ) வராமல் தடுக்க உதவுகிறது.

ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிடவேண்டும். பெக்டின் நம் உடலி ன் நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: