Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளம்பெண்களே – நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் – சில பல டிப்ஸ்

இளம்பெண்களே – நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் – சில பல டிப்ஸ்

இளம்பெண்களே – நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் – சில பல டிப்ஸ்

இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்பவர்கள் வெகு சிலரே. அதே போல்தான் தன்னுடைய

உடலமைப்பை திருப்தியோடு அங்கீகரிப்பவர்களும் மிகமிகச் சில ரே. அதிலும் பெண்களுக்கு தங்களின் உடலமைப்பில் திருப்தியே இருக்காது. உயரமாக இருப்பவர்களுக்கு கொக்கு போன்று இருக்கி றோமே என்று வருத்தம். குள்ளமாக இருப்பவர்களுக்கு வாத்து போ ன்று இரு க்கிறோமே என்று கவலை. ஒல்லியாக இருப்பவர்களுக்கு நோஞ்சானாக இருக்கிறோமே என்றும் குண்டாக இருப்பவர்களுக் கு எல்லோரும் கிண்டல் பண்ணுமளவிற்கு இருக்கிறோமே என்றும் கவலை யோ கவலை.

இப்பிரச்னைகள் அனைத்தையுமே நம்முடைய உடை அணியும் முறையால் மாற்ற முடியும் என்கின்றனர் நிபுணர்கள். என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் வரும் என்பதை இங்கே தொகுத்துள்ளோம்.

உயரம் குறைவாகத் தெரிய:

ஐந்தரை அடிக்கு மேல் இருந்தால் நீங்கள் சராசரிக்கும் அதிகமான உயரம் என்று பொருள். உயரமான உங்களை சராசரி உயரமாகக் காண்பிக்க அதிநவீன ஆடைகளை அணியலாம். ஒரே வர்ணத்தில் உள்ள ஆடைகளை மேலிருந்து கீழ்வரை அணி யாதீர்கள். பல வர் ணங்கள் கலந்த ஆடைகளை அணியுங்கள். உங்கள் உருவம் உயரம் குறைவாகத்தெரிய தோள்பட்டைகளை குறுக்கியபடி நடக்காதீர்கள். நீங்கள் தைரியமாக “பளிச்’ நிற ஆடைகளை அணியலாம். ஒரு சில அடுக்குகள் உள்ள தளர்வான ஆடைகள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். அகலமான பார்டர், பெரிய பெரிய டிசைன் போட்ட புடவை கள், சுரிதார்கள் உங்களின் தேர்வாக இருக்க வேண்டும். கனமான, பட்டையான நகைகளை அணியலாம். பெரிய மணிபர்சுகள், கைப்பை களை தேர்வு செய்யுங்கள். ஜீன்ஸ் அணிபவர்களாக இருந்தால் எந்த அளவிலான பெல்ட்டுகளையும் நீங்கள் அணியலாம். சான்ட்விட்ச் போ ன்று வண்ண மயமாக காட்சியளிக்க, ஆடை அணியும் வண்ணத்திற்கு எதிர்மாறான வண்ணங்க ளில் நகைகளை அணியுங்கள்.

உயரமாகத் தெரிய:

நீங்கள் ஐந்தடிக்கும் குறைவாக இருந்தால், உங்கள் உயரத்தைக் கூட்டிக் காண்பிக்க நீளமாக ஆடைகளை அணிய வேண்டும் என்று அவசிய மில்லை. பளிச் என்ற ஆடைகளைத் தவிருங்கள். உங்கள் உருவத்துக்குப் பொருந்தாத அளவில் ஆடை அணியாதீர்கள். கிடைமட்ட கோடுகளோ, வடிவமைப்போ உள்ள ஆடைகளை தேர்ந்தெடுக்காதீர்கள். மாறாக உயர த்தில் கோடுகள், டிசைன்கள் கொண்ட ஆடையை தேர்வு செய்யலாம். அகலமான பார்டர் வைத்த புடவை, சுரிதார்களை தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் அணிபவராக இருந்தால் பெரிய அளவிலான பெல்ட்களைத் தவிர்க்கவும். கணுக்கால் பக்கம் வார் வைத்த செருப்பு வேண்டாம். அதிக கனமான, பட்டையான நகைகளை அணியாமல், எளிமையான மாடல்களில் நகை அணியலாம்.

ஒல்லியாகத் தெரிய:

பொதுவாக எல்லோருக்கும் “சிலிம் ப்யூட்டி’யாக இருக்கத்தான் ஆசை. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் சிலபல கிலோக்கள் உடலில் “எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்’ ஆக சேர்ந்துகொள்ளும். குண்டாக இருந்தாலு ம், மெலிந்து அழகாகக் தெரிய மிகவும் புத்திசாலித்தனமாகயோசி த்து நீங்கள் ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். நிறைய வண்ணங்கள் கலந்திருக்கும் ஆடைகளை தவிர்த்திடுங்கள். அதிக வண்ணங்கள் கலந்திருப்பதால் அந்த வண்ணம் உங்களைக் குண்டாகக் காண்பிக்கு ம். கிடைமட்டமான கோடுகள், வடிவமைப்புகள்கொண்ட ஆடைகள் வேண்டவே வேண்டாம். மேற்கத்திய ஆடைகளுக்கு பெல்ட் அணியா தீர்கள். பெல்ட் அணிவதால் உங்கள் இடை மிகவும் பெருத்து தெரியும் . மிகவும் இறுக்கமான ஆடைகள அணிந்தாலும் உங்கள் உடலின் உண்மையான உருவம் வெளியே தெரிந்துவிடும். தலை முதல் கால் வரை ஒரேவண்ணத்திலான ஆடைகளை அணியுங்கள். செங்குத்தா ன கோடுகள், எளிய டிசைன்கள் கொண்ட வெளிர்நிற ஆடைகள் உங் களின் தேர்வாக இருக்கவேண்டும். சற்று இறக்கமான கழுத்துள்ள ஆடைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும். உங்கள் இடைகளை மறைக்கும்படியான ஆடைகளை அணியுங்கள். மென்மையான, நீள ம் அதிகமாக உள்ள நகைகளை அணியுங்கள். (நீங்கள் உயரமானவர் களாக இருந்தாலும்) சிறிய ஹீல்ஸ் வைத்த செருப்புகள், ஷூக்களை அணியுங்கள். தரமான ஆடைகள், சிறந்த தையல் கலைஞர், சரியான அளவு இவை மூன்றையும் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.

பூசினாற்போல் தெரிய:

என்ன நீ சாப்பிடுவியா மாட்டியா? இப்படி தேய்ஞ்சு போய் இருக்கி யே?’ என மற்றவர்கள் கேள்வி கேட்பதைத்தவிர்க்க, ஒல்லியாக இருப்பவர்கள் ஒரே நிறத்தில் உடை அணியவே கூடாது. மிகவும் கூரான ஹீல் வைத்த செருப்புகள் உங்கள் காலை வாரிவிட்டு விடும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும். அனைத்து வண்ண ஆடைக ளையும் அணிய ஏற்ற நபர் நீங்கள்தான். எனவே வண்ண வண்ண ஆடைகளில் வலம் வரலாம். பெரிய மற்றும் அகலமான வடிவங்கள் கொண்ட ஆடைகளை அணியுங்கள். எதிர்மறையான “மிக்ஸ் அன்ட் மேட்ச்’ முறையில் ஆடைகளை தேர்வு செய்யுங்கள். மேற்கத்திய ஆடைகளை அணியும்போது பல்வேறு நீளங்களில் உள்ள சட்டையை அணிந்தால், உங்களை ஆரோக்கியமானவராக க்காண்பிக்கும். எப்போதும் வித்தியாசமான ஆடைகளைத் தேர்ந் தெடுத்து அணியுங்கள். எந்த விதமான பெல்ட்களையும் அணியலா ம். நீங்கள் தேர்வுசெய்யும் ஆடைகள் உங்களுக்குச் சரியான அள வாக இருக்க வேண்டும் அல்லது ஓர் அளவு பெரியதாகவும் இருக்க லாம். அதிக நீளமான நகைகளும், மிகவும் குட்டையான நகைகளு ம் வேண்டாம். 

இவ்வாறு உங்களின் உடலுக்கு ஏற்றாற்போல் உடையணிந்து பாரு ங்கள். “ஏய்! என்ன கொஞ்ச நாளாவே கலக்கலா இருக்கியே. அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லித் தாயேன்” என்று நண்பர்கள் உங்களை மொய்த்து விடுவார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: