உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு…
உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு…
இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால்
அதேநேரத்தில் குடும்ப வாழ்வில் சில பெண்களின் செயல் அதை விட கீழ்த்தரமானது. கீழே உள்ள வழக்கறிஞரின் வரிகளைப் படித்தீங்கன் னா நீங்களே சொல்வீங்க ஆம் என்று…
‘‘இக்காலத்துல கல்யாணம்னு பேச ஆரம்பிச்சதுமே ஒரு பொண்ணு தன் மனசுல இருக்கிறதை பெத்தவங்ககிட்ட தெளிவா சொல்லிடணும்’’ என்கிறா ர். இவர் சந்தித்ததாக கூறிய விவாகரத்து வழக்கு ( #Divorce #Case ) ஒன்று நம்மை அதிர வைத்தது.
‘‘அப்பொண்ணு நர்ஸ் ( #Nurse ). அவளோட கணவருக்காகத்தான் ஆஜரானேன். அவர், பேங்க்ல அசிஸ்டென்ட் மேனேஜர் ( Assistant Manager ). கல்யாணம் ( Marriage – Wedding ) முடிஞ்சு, முதலிரவில் அப்பொண்ணு ஒரு குண்டை துக்கிப்போட்டா. கல்யாணத்துக்கு முன்னால ஒரு பையனை லவ் பண்ணதாகவும், தான் மூணுமாச கர்ப்பமா இருக்கற தாகவும் சொல்ல, மாப்பிள்ளைக்கு ஷாக். ரெண்டாவது நாள்லயே விவாகரத்து கேட்டு வந்துட்டாங்க.. பரஸ்பர சம்மதத்தோட அவங்க ளுக்கு விவாகரத்தும் கிடைச்சிடுச்சு. அதுக்கப்புறம் அப்பொண்ணு தான் காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா’ என்ற வழக்கறிஞர்…
கர்ப்பம் வரை துணிஞ்ச அப்பொண்ணுக்குத் தன்னோட காதலை வீட்டுல சொல்ல தைரியம் இல்லாமபோயிடுச்சு. அதனால எவ்வள வு பிரச்னை பாருங்க. சம்பந்தமே இல்லாம இன்னொரு
வீட்டையும் கஷ்டப்படுத்திட்டாங்க என்றார் வேதனையோடு … ( #SexBeforeMarraige )
– ஆர். மகேஸ்வரி
வழக்கறிஞர் ( #Advocate – #Lawyer )
சென்னை உயர்நீதிமன்றம் ( #MadrasHighCourt )
காதலிச்சவனையே கரம்பிடிப்பது நல்லகுணம்தான் என்றாலும், அதை கல்யாணத்துக்கு முன்னாடியே பெற்றவர்களிடம் சொல்லி , காதலித்தவனையே கரம் பிடித்திருந்தால், இன்னொரு ஆணின் வாழ்க்கையில் ஏற்பட்ட தேவையற்ற பிரச்சினைகளையும், இழப்பு க்களையும் தவிர்த்திருக்க முடியும் அல்லவா? இது மிகவும் கீழ்த் தரமான செயல்தானே!
–விதை2விருட்சம்