மங்கையர் கூந்தல் மங்காதிருக்க சில இயற்கை வழிகள்
மங்கையர் கூந்தல் மங்காதிருக்க சில இயற்கை வழிகள்
ஆண் பெண் இருபாலாருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் மிகப்பெரிய
பிரச்சினைகளில் ஒன்றுதான் இந்த கூந்தல் பிரச்சினை அதிலும் ஆண் களை காட்டிலும் பெண்களுக்கு அதிகளவில் மன உளைச்சலை ( #Stress ) ஏற்படுத்தி அவர்களின் தன்னம்பிக்கை குறைத்து விடும் என்பது உண்மை.
தலைமுடி உதிர்தல் ( #Hair #Falls பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக் கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமி க்கல் கலந்த ஷாம்பு ( Shampoo )பயன்படு த்துதல், தூசி மற்றும் மாசுகள் தலையில் படுதல் என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலா ம். ஆனால் இவற்றை யெல்லாம் மீறி, இயற்கை முறையில் முடி உதிர் தலைத் தடுக்க முடியும். அதோடு முடியை பளபளப்பாகவும் நீண்டு வளரவும் செய்ய முடியும்.
அழகுநிலையங்களுக்கு சென்று தலைமுடியை கலரிங் செய்துவிட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும்.
இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.