Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் இறக்கும் வரை தொடர்ந்து வளரும் உங்களின் இரண்டு உறுப்புகள் – ஆய்வகத் தகவல்

நீங்கள் இறக்கும் வரை தொடர்ந்து வளரும் உங்களின் இரண்டு உறுப்புகள் – ஆய்வகத் தகவல்

நீங்கள் இறக்கும் வரை தொடர்ந்து வளரும் உங்களின் இரண்டு உறுப்புகள் – ஆய்வகத் தகவல்

நமது உடலின் அனைத்து உறுப்புகளின் செல்களுமே ஒரு சமயத்தில்

அதன் வளர்ச்சியை நிறுத்தி விடுகிறது என நம்மில் பலரும் நினை த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி இல்லை. மனித உடலின் உயரம், உடல் அளவு, கைகள், கால்கள் என அனைத்தும் ஒரு கட்டத்தில் தங்களின் வளர்ச்சியை நிறுத்திக் கொள்ளும் நிலையில் இரண்டு உறுப்புகள் மட்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறக்கும் வரையில் இந்த உறுப்புகள் தொடர்ந்து வளரும்: உங்களுக்கு தெரியுமா?

அவை, காது மற்றும் மூக்கு ஆகும். கூந்தல், நகம்கூட வளர்ந்து கொண் டே தான இருக்கின்றன என உங்களுக்கு தோன்றுவது இயல்பு, ஆனால் அது அனைவருக்கும் பொதுவானது அல்ல.

மரபணு பாதிப்பால சிலருக்கு கூந்தல் வளர்வது நின்று சொட்டையா கக் கூடும், சிலருக்கு நகங்கள் வளர்வது கிடையாது.

இப்படி அனைவருக்கும் பொதுவாக ஒய்வே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் இரண்டு உறுப்புகளின் சிறப்பையும் பாதுகாக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்வோம்.

காது ( Ear )

மெல்லிய திசுக்கள் மற்றும் குறுத்தெலும்புகளால் ஆன காதுப் பகுதியில் உள்ள செல்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்குமாம்.

குழந்தைகளுக்கு காது குத்தும்போது சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம்.

காதில் அணிந்துள்ள தோடுகளை அவ்வப்போது க்ளீன் செய்வது அவசியம்.

தரமான பட்ஸ் மூலம் அவ்வப்போது காதுப் பகுதியை சுத்தம் செய்வது அவசியம், குடைய வேண்டிய அவசியமில்லை.

மூக்கு ( Nose )

மூக்கை பொறுத்தவரையில் நமக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனை யாக இருப்பது பிளாக் ஹெட்ஸ்தான்.

அப்படி ஏற்படும் பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு அருகில் வந்து பார்ப்பவர்க ளுக்கு ஒருவித சங்கடத்தை தரும் என்பதால், கடைகளில் விற்கும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸை பயன்படுத்துவதன் மூலம் அதனை குறைக்கலாம்.

=> ஹரீஷ்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: