Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நன்மைகள் பல வெடித்துச் சீறும் எரிமலைகளால் – அரிய தகவல்கள்

நன்மைகள் பல வெடித்துச் சீரும் எரிமலை ( Volcano )களால் – அரிய தகவல்கள்

நன்மைகள் பல வெடித்துச் சீறும் எரிமலை( #Volcano )களால் – அரிய தகவல்கள்

என்ன‍து வெடித்துச் சீறும் எரிமலைகளால் நமக்கு நன்மையா என்று

வாய்ப்பிளப்பவர்கள், அந்த நன்மைகள் என்னென்ன என்பதை மேற்கொண்டு படித்து தெரிந்து கொள்ளுங்கள்

எரிமலை சீறும்போது எரிமலை ( #Volcano ) குழம் போடு கந்தக ( Sulfur ) ஆவி வெளிவருகிறது. அந்தக் கந்தக ஆவியானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும் போது கட்டியாக மாறி, எரிமலைப் பள்ளங்களில் படிந்து விடுகிறது. இவ்வாறு வெடி த்துச் சீரும் எரிமலைகளாலும் நன்மை உண்டென உங்க ளுக்கு தெரியுமா??

இம்மாதிரியான எரிமலைப் படிவுகள் உள்ள எரிமலைப் பகு திகள் தென்அமெரிக்கா, நிïசிலாந்து, ஜப்பான், மெக்சிகோ, சிசிலி முதலிய இடங்களில் காணப்படுகின்றன. அப்பகுதி களில் 500முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக்கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தை த்தான் தீக்குச்சிகள் செய்வதற்கும், துப்பாக்கி மருந்து தயா ரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது நோய் தீர்க்கும் சல்பா மருந்து தயாரிக்கவும், பூச்சிக்கொல் லி மருந்துகள் போன்றவை தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார் கள்.

அனல்குழம்பு குளிரும்போது மேலிருந்துகீழே பாறையாக இறுகிக் கொண்டே போவதால் தங்கம் ( Gold ), வெள்ளி ( Silver ), ஈயம் ( Lead ), துத்தநாகம் ( Zinc ), பாதரசம் ( Mercury )போன்ற பல உருகிய உலோகப் பொருட்களும் கட்டியாக மாறி பாறைகளோடு கலந்து விடுகின்றன. அவ்வாறு பூமிக்கு கீழே சிலஅடி ஆழத்துக்குள்ளா கவே உலோகக் குழம்புகள் பாறைக் குழம்போடு வந்து படிவதால் தான் சுரங்கங்கள் மூலம் அவை நமக்கு எளிதில் கிட்டுகின்றன. 

=> தமிழ்

Leave a Reply

%d bloggers like this: