Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் உச்சந்தலையில் ஒரு கை வைத்து கால் மணி நேரம் ஊற விட்டால்

பெண்கள் உச்சந்தலையில் ஒரு கை வைத்து, கால் மணி நேரம் ஊற விட்டால்…

பெண்கள் உச்சந்தலையில் ஒரு கை வைத்து, கால் மணி நேரம் ஊற விட்டால்…

பெண்கள், அழகாக இருந்தாலும் அவர்களை பேரழகாக கூட்டுவது அவர்களின்

கூந்தல் தான்  பெண்கள் கூந்தல் ( Hair ) குறித்து புராணம் ஒன்றில் கதை ஒன்று உண்டு. ஒரு முறை பாண்டிய மன்ன‍ன், அந்தப் புரத்தில் தனது மனைவியோடு கொஞ்சி மகிழும் போது, அவளது கூந்தலில் வீசிய மணம் அவனது மனத்தை கவர்ந்ததோடு அல்லாமல், அவனு க்கு ஒரு சந்தேகத்தையும் கிளப்பியது அது என்ன‍ சந்தேகம் என்றால், பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல் லையா என்பதுதான்? சரி இதைவிடுங்க பெண்களின் கூந்தல் அழகா கவும், ஆரோக்கியமா கவும், பளபளப் பாகவும், நீண்டும், அடர்த்தியா கவும் வளர சில எண்ணெய் வகைகள் இங்கு காண விருக்கிறோம்.

கூந்தல் அழகை பாதுகாக்கும் எண்ணெய்கள்

 *அழகான கூந்தலுக்கு ( #Beautiful #Hair ) நல்லெண்ணெய் ( #Sesame Oil ) தான் நல்லது. உச்சந்தலையில் ஒருகை வைத்து கால்மணிநேரம் ஊற விட்டால் உச்சந்தலை நன்கு குளிர்ந்துவிடும். உச்சந்தலைக் குளிர்ந் தால், உடல் சூடு தணிந்து விடும். உடல்சூடு தணிந்தால், முடி உதிர்வது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம் பிக்கும். நல்லெண்ணெயை லேசாகச் சுடவைத்து, ஒரு பூண்டு பல், 2 மிளகு போட்டு பொரிய விடுங்கள். இது ஆறியதும், கூந்தலின் வேர்க் கால்கள் முதல் நுனி வரை தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, ஷாம்புவோ அல்லது சீயக்காயோ பயன்படுத்தி தலைக்குக் குளித்து விடுங்கள். 

*தலைக்கு ஆலிவ் ஆயில் ( #Olive Oil) தடவி குளிப்பவர்கள் கவனத்து க்கு.. இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், லேசாகச் சூடாக்கி தலையில் ஊறவைத்துக் குளியுங்கள். சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயி லை எங்குத் தடவினாலும், அந்தப் பகுதியைக் கறுப்பாக்கும் தன்மை கொண்டது. அதனால், சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை நன்கு ஆற வைத்து தலை முடி, புருவம் போன்ற இடங்களில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்துக் குளியுங்கள். 

*அடுத்தது தேங்காய் எண்ணெய் ( #Coconut #Oil ). பிராண்டட் எண்ணெயிலும் கலப்ப டம் இருக்கிறதே பயப்படுபவர்கள், வீட்டிலேயே இதை தயாரிக்கலாம். கொப்பரைத் தேங்காய்களை நாட்டு மருந்துக் கடை ( Country Medical Shop)களில் வாங்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் (Water) விட்டு அரைத்துப்பிழிந்து வடிகட்டி இரும்புவாணலியில் காய்ச்சுங்க ள். சடசடவென வெடித்து தண்ணீர் ஆவியாகி எண்ணெய் (Oil) திரண்டு வரும்போது, அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். இந்த எண்ணெயை ஒருநாள் விட்டு ஒரு நாள் வேர்க்கால்களில் மட்டும் தடவி, சீப்பால் வாரிவிடுங்கள். கூந்தல் (Hair )உடையாமல், சிக்கு விழாமல் இருப்பத ற்கு வெளிப்புற பூச்சாகத் தேங்காய் எண்ணெய் தடவுவது ரொம்பவே அவசியம். 

*பாதாம் எண்ணெய்( Badam Oil) தலைமுடிக்கு மட்டுமின்றி, ஸ்கால்புக் கும் நல்லது. கூந்தலை பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும் பாதாம் எண்ணெய். இந்த ஆயிலை தலைமுழுக்கத் தடவி, இரவு முழுக்க ஊற விடுங்கள். காலையில் முகத்தில் எண்ணெய் வழிவது போல உணர்ந்தீர்கள் என்றால் மட்டும், தலைக்குக் குளியுங்கள்.

இல்லையென்றால் அப்படியே விட்டு விடலாம். இந்த மிக்ஸ்டு ஆயில் பொடுகுத் தொல்லை வராமல் தடுக்கும்.

=> தமிழிசை மாறன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: