வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி – ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா?
வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி – ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா?
அந்த காலத்தில் மனித சமுதாயத்திற்கு உடல் உழைப்பு அதிகம், அதற்கேற்றாற்
போல் அன்று ஆரோக்கியமான உணவும் இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ்.
பொதுவாக உடற்பயிற்சி என்பது அதிகாலையில் எழுந்து பூங்கா க்களிலோ அல்லது சாலைகளிலோ நடப்பது, ஓடுவது என்று இருந்தது. இன்று நம் மக்களின் நேரமின்மை மற்றும் வசதி கருதி வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும்ப் பழக்கம் பரவி வருகிறது. உண்மையில் இது ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? என்பது இன்றளவும் விடை கிடைக் காத ஒரு கேள்வியாகவே இருக்கிறது.
ட்ரெட்மில் ( Treadmill )லில் உடற்பயிற்சி ( Exercise ) செய்வது நல்லதா? கெட்டதா?
வீட்டிற்குள் செய்யும் உடற்பயிற்சி ( #Exercise #Gym )என்று வரும் போது அதில் முதல் இடம் வகிப்பது ட்ரெட்மில். ட்ரெட்மில் ( #Treadmill )லில் உடற்பயிற்சி செய்வது என்பது கௌரவ அடை யாளமாக மாறி வருகிறது. உண்மையில் ட்ரெட்மில் உபயோகி ப்பது பலனளிக்கிறதா? இந்த கேள்விக்கான விடையைத் தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ட்ரெட்மில்லில் நடப்பது ஒருசிறந்த ஏரோபிக் பயிற்சியாகும். சமீபத்தில் நடத்தியஆய்வில் தினமும் 40நிமிடம் ட்ரெட்மில்லி ல் நடப்பது ஆரோக்கிய அதிகரிக்கும் சிறந்தவழியாக இருக்கிறது என மருத்துவர்க ள் கூறுகிறார்கள். இது இரத்த அழுத்தத்தை ( #Blood #Pressure) குறைத் து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் எடை இழப்பு, தசைகளின் வலிமை போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் தகுதியை மட்டு ம் மேம்படுத்துவதில்லை, அது உங்களின் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மாலை நேரங்களில் ட்ரெட்மில்லில் நடப்பது உங் களை அன்றைய நாளின் சோர்வுகளில் இருந்து மீட்பதோடு, இரவு நல்ல தூக்கத்தையும் கொடுக்கிறது.
ஜிம்மில்சென்று நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்களை போ ன்றே எண்ணம் கொண்ட பலரை நீங்கள் பார்க்க வாய்ப்புள்ளது. ஆனால் வீட்டில் ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யும்போது அதன் வேகம், பயிற்சி செய்யு ம் முறை என அனைத்தையும் உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள் ளலாம், இது ஒரு விளையாட்டு போலவே இருக்கும். வீட்டில் ட்ரெட் மில் பயிற்சி எடுக்கும்போது உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார் க்கலாம், உங்கள் குடும்பத்தினருடன் பேசலாம். இவையெல்லாம் உங்களுக்கு சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
ட்ரெட்மில்லில் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ உங்கள் கலோரிகள் எரிக் கப்படுகிறது. இதுஉங்களின் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும். மிதமான வேகத்தில் இதில் அரைமணி நேரம் நடப்பது உங்களின் 150 கலோரிகளை குறைக்கும். அதுவே சற்று வேகமாக இதில் நடக்கும் போது இது 200 கலோரிகள் வரை குறைக்க உதவியாக இருக்கும்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் வெளியில் சென்று உடற்பயிற்சி செய்பவர்களை காட்டிலும் வீட்டில் ட்ரெட்மில்லில் நடப்பவர்களுக்கு குணமாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்ட்டது.
ட்ரெட்மில்( treadmill )லில் நடப்பது உங்கள் மூட்டுகளின் பலத்தை அதிகரிக்க உதவு கிறது. ட்ரெட்மில் (treadmill )லில் நடப்பது மூட்டுகள் தேய்மானம் அடைவதை குறை க்கிறது. நீங்கள் வெளிப்புறங்களில் நடக்கும்போது ஏற்படும் மூட்டு களின் தேய்மானத்தை காட்டிலும் ட்ரெட்மில்லில் நடக்கும் போது ஏற்படும் தேய்மானம் குறைவுதான்.
ஒவ்வொரு நூறு மணி நேர வெளிப்புற உடற்பயிற்சிக்கும் நீங்கள் சில காயங்களை உணருவீர்கள். வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செ ய்பவர்களில் 65 சதவீதத்தினர். இந்த சூழ்நிலையில் நீங்கள் ட்ரெட் மில்லில் நடக்கும்போது காயங்கள் ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு.
உங்களுக்கு வெளியே சென்றுதான் உடற்பயிற்சி செய்யவேண்டும் என விரும்பினால் ஜிம்மில் உள்ள ட்ரெட்மில் அதற்கு சிறந்த தீர் வாகும். ஒருவேளை நீங்கள் எடை அதிகமானவராக இருந்தால் ஜிம்மில் உள்ள ட்ரெட்மில்தான் நீங்கள் உடற்பயிற்சி செய்ய சரியாக இருக்கும்.
ஏனெனில் வீட்டில் இருக்கும் ட்ரெட்மில் குறைவான எடைக்கு ஏற்றாற்போல செய்யப்பட்டதாய் இருக்கும்.
=> சரண்ராஜ்