Friday, April 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரப் பூர்வ அறிவிப்பு

அரசியலுக்கு தான் வருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி

ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கபாலி திரைப் படம் வெளியானது. அதன்பிறகு காலா திரைப்படம் வெளியானது. ஆனால் அவரது அரசியல் கட்சி எங்கே? எப்போது? அப்ப‍டி கட்சி ஆரம்பித்தால், அந்த கட்சியின் பெயர் என்ன‍? கொள்கை என்ன‍? கொடி என்ன? என்ற அதிரடி தகவல்களுக்காக அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்க‍ளும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சூப்ப‍ர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவரது புதிய திரைப்படத்தின் பெயர் (165ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத் தக்க‍து)

” பேட்ட‌ ”  – ” PETTA “

இந்த பேட்ட ( #Petta ) திரைப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி ( #VijaySethupathy ), திரிஷா ( #Trisha) மற்றும் சிம்ரன் ( #Simran ) நடிக்க‍வுள்ள‍னர். இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ( #Director #KarthickSuburaj இயக்க‍விருக்கிறார்.

திரைப்படங்கள் தான் வரிசையாக வந்துகொண்டிருக்கிறதே தவிர, அவரது கட்சி குறித்த‍ தகவல் ஏதும் இதுவரை வரவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த‍ ஏமாற்ற‍த்தை ஏற்படுத்தியுள்ள‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: