Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எச்ச‍ரிக்கை? – இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது. ஏன்?

எச்ச‍ரிக்கை யாருக்கு? – இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது. ஏன்?

எச்ச‍ரிக்கை யாருக்கு? – இரவு நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது. ஏன்?

இரவு நேரம் சாப்பாடோ, சிற்றுண்டியோ நன்றாக சாப்பிட்டு முடித்து சிறிது

நேரம் கழித்து வாழைப்பழம் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு நன்மைகள் தரும் அப்ப‍டி அவர்களுக்கு நன்மைகள் பல‌ தந்தாலும், பெரும் பாலானோருக்கு உடலில் கலோரி அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஒரு சிலர் இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். வாழைப்பழத்தில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை சத்துள்ளது. இது கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கிவிடும் வாய்ப்புள்ளது. இரவில் உணவிற்குபின் வாழைப்பழம் சாப்பிடுவதால் விரைவில் செரிமானம் உண்டாகும். இதனால் காலைக்கடன் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாது.

யாரெல்லாம் இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் ( Banana #Banana ) சாப்பிடலாம் தெரியுமா?

காலைக்கடன் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாது என்றாலும், வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன் முடிக்க சிரமப்படுபவர்களுக்கு இது பிரச்சனை யை ஏற்படுத்தும்.

எனவே இவர்கள் இரவு உணவிற்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எனினும், 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரவில் வாழைப் பழத்தை கொடுக்கலாம். தொடர்ந்து இரவுநேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு சளித் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவ து நன்மை தரும்.

இதனால் உடலில் கலோரி அதிகரிப்பதுடன், களைப்படை யாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.

இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் பிரச்சனை யை சந்திப்பவர்கள் அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வயதானவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இரவு நேரங்களில் வாழைப் பழத்தை சாப்பிடக் கூடாது.

Leave a Reply

%d bloggers like this: