Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நுரையீரலில் வலி – ஆபத்தின் அறிகுறியா

நுரையீரலில் வலி – ஆபத்தின் அறிகுறியா?

நுரையீரலில் வலி – ஆபத்தின் அறிகுறியா>

உங்களின் நுரையீரலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வீக்கம் உங்களுக்கு

கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தக்கூடும். அப்படி நெஞ்சுவலியுடன் இருக்கும்போது மூச்சை உள்ளிழுப்பது ம் சரி வெளிவிடுவதும் சரிமிக கடினமாய் இருக்கும். பிளேரிசி என்பது உங்கள் நுரையீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் வீக்கமாகும். சிலருக்கு இதயத்திற்கும், நுரையீர லுக்கும் இடையே உள்ள திரவத்தால்கூட ஏற்படும்.

நுரையீரல் வலியை குணப்படுத்த சாப்பிட வேண்டியவை

நுரையீரல் தொடர்பான தொற்றுநோய்களான நிமோனியா போன்றவையும் இது ஏற்பட காரணமாக இருக்கலாம். இந்த பிளேரிசியை குணப்படுத்த தடுப்புமருந்துகள், வலி நிவாரணி கள் பல வழிகள் உள்ளது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்க ளின் மூலம் இந்த நுரையீரல் வீக்கத்தையும், வலியையும் குணப்படுத்தலாம். எந்த பொருட்கள் நுரையீரல் வலியை குணப்படுத்தும் என்பதை இங்கே பார்க்கலாம்.

வலிக்கும் புறமே படுத்தல்

இதுகொஞ்சம் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இது பலனளிக்ககூடிய ஒன்று பிளேரிசியால் நுரையீரல் வலி ஏற்படும் போது எந்த பக்கம் வலிக்கிறதோ அந்த பக்கமே அதிக அழுத்தம் கொடுத்து படுப்பது வலியை குறைக்கும். அதிக அழுத்தம் கொடுத்து படுக்கும்போது அங்கே மார்பு செயல்பாடுகள் குறையும்.

தேன்

இயற்கையாகவே தேன் ஒரு மருந்தாகும். பழங்கால மருத்துவ குறிப்புகளிலேயே தேனை நுரையீரல் நோய்க்களுக்கு பயப்படு த்தியதாக குறிப்புகள் உள்ளது. இதிலுள்ள TNF அழற்சிகளை கட்டு ப்படுத்துவதன் மூலம் வீக்கத்தை குறைக்கும். மருத்துவ ரீதியாகவும் தேனை எடுத் துக்கொள்வது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புரோஸ்டாலான்டின் E2 ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள் ளது.

பிளேரிசி தேநீர் ( Pleurisy Tea )

அசுகிபாஸ் திபெரோசா என்னும் இந்த இலை நுரையீரல் வீக்கமின்றி அனைத்து விதமான வீக்கத்தையும் குணப்படுத்தும் திறன்கொண்டது. மேலும் நுரையீரல் ( Lungs) தொடர்பாக ஏற்படும் நிமோனியா ( pneumonia ) வையும் இது குணப்படுத்தும். இதனை தேனீராகவோ அல்லது கஷாய மாகவோ காய்ச்சி குடிப்பது உங்கள் காய்ச்சல் மற்றும் வீக்கத்தை விரைவில் குணமாகும். ஒருநாளைக்கு இரண்டு முறைக்குமேல் இதனை குடிக்கக் கூடாது.

மஞ்சள் பால் ( Turmeric Milk )

தன்னுடய அதிக நோயெதிர்ப்பு ( Immunity ) சக்திக்காகவே புகழ்பெற்ற ஒன்று மஞ்சள் ( Turmeric ). மஞ்சள் பிளேரிசியால் ஏற்படக்கூடிய நெஞ்சு வலி ( Chest Pain )யை குணப்படுத்தும் என மருத்துவர்கள் கூறு கின்றனர் ஏனெனில் இதிலும் தேனைப்போலவே புரோஸ்டாலான்டின் E2 (Purostalan) அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி இது நுரையீரலில் பாக்டீரியா ( Bacteria )க்களால் ஏற்படும் தொற்று ( Infection ) நோய்களை தடுக்கும் எனவும் நிரூபிக்கப் பட்டுள்ளது. பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து தூங்கு வதற்கு முன் குடிக்கவும்.

இஞ்சி தேநீர் ( Ginger Tea )

உங்களின் நுரையீரல் வலியை குணப்படுத்தக்கூடிய மற்றொரு அற்புத பொருள் இஞ்சியாகும். இஞ்சியில் அதிகளவு புரோஸ்டாலான்டின் உள் ளது, இது வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணம் வழங்கும். அதுமட்டு மின்றி இது எந்தவித பக்க விளைவுகளை யும் ஏற்படுத்தாது. மார்பு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய் களையும் இது தடுக்கும் ஆற்றல் பெற்றது. இஞ்சியை நீரிலே அரைமணிநேரம் ஊற வைத்து, அதன்பின்னர் தேநீர் தயாரிப்பது கூடுதல் பலனை அளிக்கும்.

சீரகம் ( cumin )

உணவில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சீரகம் உண்மையில் ஒரு மருந்துப்பொருளாகும். இதிலுள்ள காரவன் என்னு ம் மூலப்பொருள் வீக்கங்களுக்கு எதிராக செயல்படக்கூடியது. இயற்கை வலி நிவாரணியான இதை 1/2 அல்லது 1/4 ஸ்பூன் எடுத் துக்கொண்டு நன்கு அரைத்து க்கொள்ளவும். இதனை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் குடித்தால் நெஞ்சு வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

துளசி

பல மருத்துவ குணங்களை கொண்ட துளசி நுரையீரல் வலிக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இதில் உள்ள காக்ஸ்- 2 வீக்கத்தை குறைக் கும் பணியை சிறப்பாக செய்கிறது. மார்பு வலியை ஏற்படுத்தக் கூடிய பேத்தோஜனை இது குறைக்கிறது. துளசியை பச்சையாக வோ அல்லது காயவைத்து தேனீராகவோ தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

=> சரண்ராஜ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: