Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்  பதவியேற்றார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்  பதவியேற்றார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்  பதவியேற்றார்

இதுவரை இப்பதவியில் இருந்துவந்த‌ தீபக் மிஸ்ரா ( #Deepak Misra ) நேற்று

ஓய்வு பெற்றதை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் (  #Supreme #Court #ChiefJustice #RanjanGogoi ) இன்று காலை பதவியேற்றார். அவருக்கான பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ( President of India ) ராம்நாத் கோவிந்த் ( Ramnath Govind ) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்..

வடகிழக்கு மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நீதிபதியாவார்.  இவர் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் ( Bar Counsel ) பதிவு செய்து கொண்டு குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதன் தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.

உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது நீதிபதியாக ரஞ்சன் கோகாய் ( #RanjanGogoi ) பதவியேற்றது குறிப்பிடத்தக்க‍து.

முன்னாள் உச்ச‍ நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவியில் இருந்தபோது பல‌ முக்கிய வழக்குகளான ஓரின சேர்க்கை, ஆதார், கள்ளக்காதல், சபரிமலைக்கு பெண்கள் அனுமதி உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தகது.

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வெளிப்படையாக குற்றம் சாட்டிய நீதிபதிகளில் கோகாயும் ( #RanjanGogoi ) ஒருவர்.


 

Leave a Reply