Thursday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தளபதி விஜய் – சர்கார் – குறித்த‍ சுவாரஸ்ய தகவல்

சர்கார் – தளபதி விஜய் – குறித்த‍ சுவாரஸ்ய தகவல்

சர்கார் – தளபதி விஜய் – குறித்த‍ சுவாரஸ்ய தகவல்

நேற்று முன்தினம் அதாவது 2ஆம் தேதி நடைபெற்ற‍ `சர்கார்’ ( #SarkarStills  / #Sarkar ) திரைப்படப்

பாடல் வெளியீட்டு விழாவில் கவனிக்கத்தக்க விஷயங்கள் என்றால் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உட்பட பெரும்பாலானோர், நடிகர் விஜய் ( #Vijay )யைப் பெயர் சொல்லி அழைக்காமல் தளபதி என்றே அழைத்தனர். எப்போதுமில்லாத அளவுக்கு அரங்கில் ரசிகர்களின் ஆரவாரம் மிகவும் அதிகமாகவே இருந்தது. விஜய் படம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிகள் ஆங்காங்கே அரங்கில் அசைந்து கொண்டி ருந்தன. இவ்வளவு காலமாக `அரசியலுக்கு விஜய் வருவாரா மாட்டாரா?’ ( #Vijay’s #PoliticalEntry )என்ற கேள்வி, ஒரு தெளிவில்லாத சித்திரமாகவே மக்கள் முன் நீடித்தது. ஆனால், நேற்றைய நிகழ்வின் சூழல், விஜய் பேசிய விதம் ஆகியவற்றை எல்லாம் பார்க்கும் போது, அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றே தோன்றுகி றது. அதுமட்டுமன்றி, விஜயின் சமீபகாலத் திரைப்படங்கள் முழுவதும் பொழுது போக்கை மட்டுமே மையப்படுத்தி இல்லாமல், அதனூடாக நாட்டில் நடக்கும் சமூக அவலங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதைப் பார்க்கிறோம். அதற்கு சமீபத்திய உதாரணங்களாக `மெர்சல் (Mercel / Mersel )’, `கத்தி ( kathee / Kathi )’ திரைப்படங்களின் செய்தியாளர் சந்திப்புக் காட்சிகளைச் சொல்லலாம்.

ஒருவேளை, `விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா’ என்பது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவற்றுகூட இருக்கட்டும். ஆனால், தான் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதை விஜய் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். `ஓர் அரசியல்வாதி என்பதற்கு அடிப்படையே சிறந்த மேடைப் பேச்சுதான்’ என்று எடுத்து க்கொண்டால், விஜய் அதற்கான தீவிரப் பயிற்சியில் இருக்கிறார் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு திரைப்படத்தின் உச்சக்காட்சியைப் போல விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்காக மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மைக்கால மாகத் திரைப்படங்களை விடவும், தமிழக அரசியலில் அதிக பொழுதுபோக்குக் காட்சிகளும், எதிர்பாராத திருப்பங்களும், புதிய புதிய அறிமுகங்களும் நடந்து கொண்டிருப்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளும் புரிந்துகொள்ளக் கூடியவை தாம். இத்திரைப்படத்தில் விஜய் ( vijay ), கீர்த்தி சுரேஷ் ( #KeerthiSuresh ), வரலட்சுமி சரத்குமார் ( #VaralakshmiSarathkumar ), ராதாரவி ( #Radharavi ) உட்பட ஏராளமானோர் நடித்துள்ள‍னர். 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: