Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து தூக்கியெறிய‌ ஓ.பி.எஸ். தயார் – டிடிவி தினகரன் அதிரடி

எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து தூக்கியெறிய‌ #OPS தயார் – டிடிவி தினகரன் அதிரடி

எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து தூக்கியெறிய‌ ஓ.பி.எஸ். தயார் – #TTVDinakaran அதிரடி

தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனும் துணை

முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ( Deputy Chief Minister O. Panneer Selvam / OPS ) கடந்த வருடமே சந்தித்து இருக்கிறார்கள். 2017 ஜூலை 12-ம் தேதி கோட்டூர்புரம் இல்லத் தில் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த‌ ஆட்சியை கவிழ்ப்ப‍து எப்ப‍டி என்பது குறித்து பேசப்பட்டதாக‌ கூறியிருந்தார். அவர து இந்த அதிரடி பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது

ஆனால் தங்க தமிழ்ச்செல்வனின் ( #ThangaThamizhSelvam ) பேச்சை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் அதிமுக அமைச்சர்களும் மறுத்துள்ள நிலையில் அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ( #TTVDinakaran )  சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குறித்து அவர் விளக்கமளித்தார்.

ஓபிஎஸ் (  ஓ. பன்னீர்செல்வம் ) என்னிடம் மன்னிப்பு கேட்டார்: #TTVDinakaran

அப்போது தினகரன், கடந்த‌ 2017 ஜூலை மாதம் ஓபிஎஸுடன் எனது சந்திப்பு நடை பெற்றது உண்மைதான். அப்போது ஈபிஎஸுடன் ( எடப்பாடி பழனிச்சாமி) இணைந் தது தவறுதான் என்றும் அவர் கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை பதவி யில் இருந்து இறக்க தயாராகி விட்டதாக‌ ஓபிஎஸ் ( ஓ. பன்னீர்செல்வம் ) கூறிய தோடு நில்லாமல், தான் பேசியது தவறுதான் அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

என்னை முதல்வராக்க ஓபிஎஸ் ( ஓ. பன்னீர்செல்வம் ) தயார் – டி.டி.வி. தினகரன்

கடந்த வாரம் கூட ஓபிஎஸ் என்னை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. ஓபி எஸை (ஓ. பன்னீர்செல்வம் ) சந்தித்தது தங்க தமிழ்ச்செல்வன் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியும். நான் எந்த முடிவையும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து தான் எடுக்கிறேன்.

ஓபிஎஸ் (ஓ. பன்னீர்செல்வம் ) எங்களின் சிலீப்பர் செல் ( #SleeperCell ) கிடையாது. ஓபிஎஸ்  ( ஓ. பன்னீர்செல்வம் )ஈபிஎஸ் ( எடப்பாடி பழனிச்சாமி ) உடன் இணைவ தற்கு தற்கொலை ( #Suicide ) செய்து கொள்ளலாம். ஓபிஎஸ்-ஈபிஎஸ் ( எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர்செல்வம் ) இடையே ஒற்றுமை இல்லை. ஒருவருக்கொரு வர் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்.

நான் தூதுவிட்டதற்கான ஆதாரம் இருந்தால் தங்கமணி வெளியிடலாம். ஓபிஎஸின் ( ஓ. பன்னீர்செல்வம் / OPS) இரட்டை நிலைப்பாட்டை வெளிக் கொண்டு வரவும், தொடர்ந்து அவர் தூது விடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது விளக்கமளிக்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரி வித்தார். தினகரனின் இந்த பேட்டி, எடப்பாடி பழனிச்சாமி ( Chief Minister Edapadi Palani Samy / #EPS ) தலைமையிலான அதிமுக அரசுக்கு கலக்க‍த்தையும் தமிழக அரசியலில் அனலை கிளப்பி யிருக்கிறது.

அடுத்தது என்ன?

Leave a Reply