Thursday, July 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வ‌டசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள‍ அட்ட‍காசமான பாடல்கள்

வ‌டசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள‍ அட்ட‍காசமான பாடல்கள்

வ‌டசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள‍ அட்ட‍காசமான பாடல்கள்

வெற்றிமாறன் ( #Vettrimaran ) இயக்கத்தில் தனுஷ் ( #Dhanush ) நடித்துள்ள

படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ் ( #AiswaryaRajesh ), ஆண்ட்ரியா ( #Andrea ), சமுத்திரக்கனி ( #Samuthirakani ), அமீர் ( #Amir ), டேனியல் பாலாஜி ( #DanialBalaji ), கிஷோர் ( #Kishore ), கருணாஸ் ( #Karunas ), ராதாரவி ( #RadhaRavi ), சீனு மோகன் ( #SeenuMohan ) ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் ( #WonderBarFilms தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் ( #LiccaProduction ) வெளியிடுகிறது. வேல்ராஜ் ( #Velraj ) ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் ( #SanthosehNarayanan ) இசையமைத்து ள்ளார்.

இத்திரைப்பட‌ம் வருகிற 17-ம் தேதி உலகம் முழுவதும் ‘வடசென்னை ( #VadaChennai / #VADACHENNAI )’ ரிலீஸாக இருக்கிறது. 

வ‌டசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள‍ அட்ட‍காசமாக பாடல்கள்

1. சந்தனத்த ( #Santhanatha )

இப்பாடலை கானா பாலாவும், காகா பாலச்சந்தரும் இணைந்து பாடியுள்ளனர். இப் பாடலை கானா பாலா எழுதியுள்ளார். வழக்கம்போல, தனுஷ் தன்னுடைய ரசிகர்கள், தியேட்டரில் ஆடுவதற்கு ஏற்றார் போல ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்து ள்ளார், என்று தான் கூற வேண்டும்.

2. கோயிந்தம்மாவால ( Goindhammavaala )

இப்பாடலை தனுஷ் பாடியுள்ளார். இதனை ராகேஷ் எழுதியுள்ளார். இவர் பாடியிரு ந்தாலும், இப்பாடல், சற்று சுமார் ரகம்தான். இருப்பினும், வெற்றிமாறன் இயக்கத் தில் இப்பாடல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3. கார்குழல் கடவாயி ( #KaarkuzhalKadavayee )

இப்பாடலை, ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய்நரைன், அனந்து, சந்தோஷ் நாராயணன், மற்றும் பிரதீப் குமார் பாடியுள்ளனர். மெர்சல் புகழ் விவேக் இப்பாடலை எழுதியுள் ளார். கேட்பதற்கு மெதுவாக செல்லும் இப்பாடலை, நன்றாகவே உருவாக்கியிருக் கிறார் சந்தோஷ் நாராயணன்.

4. மாடியில நிக்குற மான்குட்டி ( #MaadilaNikkuraMaankutty )

இப்பாடலை கானா பாலாவும் தீயும் பாடியுள்ளனர். இப்பாடலை கானா பாலா எழுதியுள்ளார். இது, கதாநாயகன், கதாநாயகியைப் பார்த்து பாடுவதைப் போல் உருவாக்கியிருக்கின்றனர். சற்று சுமார் ரகம் தான்.

5. என்னடி மாயாவி நீ ( #EnnadiMayaviNee)

இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இப்பாடலையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இப்பாடல் சித் ஸ்ரீராம் குரலில் இப்பாடல் உண்மையில் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

6. எப்படியம்மா

இப்பாடலை சிந்தை ரேவ் ரவி எழுதி, பாடியுள்ளார். இப்பாடல் சற்று சோகம் கலந்து உருவாக்கியிருக்கின்றனர்.

7. மத்திய சிறையில்ல

இப்பாடலை அறிவு எழுதி, பாடியுள்ளார். இதுவும் சோகமான கானா பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

8. அலங்காரப் பந்தல்

இப்பாடலை டோலக் ஜெகன் எழுதி பாடியுள்ளார். துக்கம் விசாரிக்கச் செல்லும் இடத்தில் பாடப்படும் பாடலாக இதனை அற்புதமாகவும், தத்தூருக்காரு நம்ம சந்தோஷ் நாராயணன்.

9. கடல் தீம்

இந்த தீம் மியூசிக்கின் மூலம், மீண்டும் கடல் ராசாவாக மாறியிருக்கிறார் நடிகர் தனுஷ். அனைவருக்கும் பிடிக்கும் விதத்திலேயே, இந்த இசையை உருவாக்கி யிருக்கின்றனர்.

10. ஹவ் ஹவ் ஹவ்வா தீம்

கடல் தீம் மியூசிக்குடன் ஒப்பிடும் பொழுது, இது சற்று சுமாராகவே உள்ளது. இருப் பினும், படத்துடன் பார்க்கும் பொழுது தான், இதன் சுவையை முழுமையாக உணர முடியும்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மொத்தம் 2 தீம் மியூசிக் மற்றும் 8 பாடல்களுடன் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

நன்றி => tamilannewz

Leave a Reply

%d bloggers like this: