Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து – எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து – எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து – எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி

சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை 

( #Nakkheeran #Gopal #NakkheeranGopal / #NakkeeranGopal) சிறையில் அடைக்க உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளார். ஐ.பி.சி. 124 ( #IPC 124)வது பிரிவின்கீழ் நக்கீரன் கோபால் ( Nakkheeran Gopal ) மீது போடப்பட்ட வழக்கு ரத்து ( Case Dismissed ) செய்யப்பட்டது. 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் ( Nakkheeran Gopal / #NakkeeranGopal ) கைது ( #Arrest ) செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை,

124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் ( Nakkheeran Gopal / #NakkeeranGopal ) மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்றும் நீதிபதி கோபிநாத் ( #Justice #Gopinath / #JusticeGopinath ) தெரிவித்துள்ளார். ஆளுனரை ( #Governor ) மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரையில் கோபால் எதுவும் எழுதவில்லை என்று கூறிய நீதிபதி, கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற வாதத்தை நிராகரித்தார்.

முன்னதாக ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் ( #Sengottaiyan ) அளித்த புகாரில் நக்கீரன் கோபால் ( Nakkheeran Gopal / #NakkeeranGopal ) கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை ( Governor Palace ) பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தேச துரோக வழக்கில் கைதான நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை எழும்பூர் அல்லிக் குளம் நீதிமன்றத்தில்  ( Egmore Court at Allikulam )ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

One Comment

  • rajasinghac
            புரியாத கேள்விகளுக்கு பதிலளிக்க இறைவன் அருள் கிடைக்கும் அதுபோல் நீதி மன்றம் கூறியது உள்ளது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு உள்ளது நீதி மன்றத்தில் சொன்ன தீர்ப்பு சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
    

Leave a Reply

%d bloggers like this: