Monday, April 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஞானசம்பந்தர் – இறைவனை பெண்கள் பார்க்க‍க் கூடாது என்ற நெறியை உடைத்தவர் – அரிய தகவல்

பெண்கள், இறைவனை பார்க்க‍க் கூடாது என்ற நெறியை உடைத்த திருஞானசம்பந்தர் – அரிய தகவல்

பெண்கள், இறைவனை பார்க்க‍க் கூடாது என்ற நெறியை உடைத்த திருஞானசம்பந்தர் – அரிய தகவல்

அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய

நால்வரும் சிவபெருமானை அனுதினமும் மனத்தில் எண்ணி, பூஜித்தவர்கள்.  திருஞானசம்பந்தர் ( #Thirugnanasambandar ) , திருநாவுக்கரசர் ( #Thirunavukkarasar ), சுந்தரர் ( #Sundarar ), மாணிக்க வாசகர் ( #Manickavasagar ) ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர். இவர்களில் திருஞானசம்பந்தர் பற்றிய ஒரு அரிய தகவலைத்தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்.

“மாதவிடாய் காலத்தில் ஞானசம்பந்தருடன் சோதியில் கலந்த பெண்ணைப்பற்றி தெரியுமா???”

நமச்சிவாய வாழ்க

திருஞானசம்பந்தர் தனியாக சிவசோதியில் கலக்கவில்லை. சம்பந்தரின் திருமண விழாவில் சோதியாய் தோன்றிய சிவபெருமானுடன், திருமணவிழாவுக்கு வந்த அனைவரையும் சேர்த்துக்கொண்டு கூட்டமாக சோதியில் கலந்தவர் தான் சம்பந்தர் பெருமான்.

ஈசன் சோதியாக எழுந்ததும், எல்லோரும் சிவனோடு சேர்ந்து பேரின்பவீடான ஈசனின் திருவடி நிழலை அடைவோம் வாருங்கள் என்று சம்பந்தர் அழைத்ததும், அனைத்து மக்களும் சோதியோடு சேர்ந்தனர். ஆனால் ஒரு பெண் மட்டும் தயங்கி ஓரமாக நின்றால். அப்பெண்ணை பார்த்து சம்பந்தர், ஏனம்மா இங்கு நிற்கிறாய்!! ஈசனோடு சேர விருப்பமில்லையா?? என்று கேட்டார்.

கண்கள் கலங்கிய நிலையில், “சுவாமி, நான் தீட்டு பட்டுவிட்டேன். மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன். நான் எப்படி!!!!!!!!” என்று சொல்லி தன் இயலாமையையை கண்ணீரால் தெரியப்படுத்தினாள்.

இதை கேட்ட ஞானசம்பந்தர் என்ன கூறினார் தெரியுமா?????

“அம்மா…… நீ தீட்டு என்று கருதுவதால் இது தீட்டு ஆகிவிடாது. அப்படியே இது தீட்டு என்றால், உன் தீட்டு வெறும் தீப்பொறிப் போன்றதே. சிவபெருமான் சோதி ரூபமானவன். “இந்த சிறிய தீப்பொறி, அந்த சோதியை என்ன செய்து விடும்” என்று சொல்லி, அப்பெண்ணை தேற்றி, அவளையும் சிவபெருமானோடு சேரச்செய்தார்.

மாதவிடாய் என்பது பெண் உடலின் இயல்பு. அது ஒருபோதும் தீட்டாகாது. 365 நாளும் சிவபெருமானை வழிபடலாம். 365 நாளும் சிவச்சின்னங்களை அனியலாம்.

மாதவிடாய் காலத்தை தீட்டு என்றும், தீட்டு நேரத்தில் பெண்கள் ஈசனை பார்க்கக் கூடாது என்றும் சிவச்சின்னங்கள் அணியலாகாது என்றும், வீட்டின் பூசையரைக் கதவுகளை தாழிடவேண்டும் என்றும் சிவனடி சேர்ந்த நால்வர் பெருமக்களும் நாயன்மார்களும் எங்கும் சொல்ல வில்லை. அவ்வளவு ஏன்…… சிவபெருமானே தம் கைபட எழுதிய திருவாசகத்திலும் அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.

சிவனடியை சேராதவர்களும், சிவனடியை சேர விடாதவர்களாலும் உருவாக்கப் பட்ட நெறிதான், மாதவிடாய் காலத்தில் இறைவனை பார்கவே கூடாது என்ற நெறி.

சிவபெருமான்மீது மெய்யாகவே அன்பு கொண்டவர் தொழுநோயாளியாக‌ இருந்தா லும், மாட்டின் தோலை உறித்து பிழைப்பு நடத்தும் புலையராக இருந்தாலும், அவர் தான் நான் வணங்கும் கடவுள் என்று சிவனடி சேர்ந்த அப்பர் பெருமான் பாடியுள்ளார். தொழுநோயைவிட மோசமானதா மாதவிடாய் காலம்????

எங்கள் வீட்டில் இந்த பழக்கம் செல்லாது. யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அஞ்ச வேண்டாம். ஈசனோடு நெருங்கி பழக பழக, உங்கள் வீட்டாரும் ஈசனை உணர பழகிக்கொள்வர். துனிவே சிவம்.

மறையும் முறையும் எமக்கில்லை
மனமும் மொழியும் தடையில்லை
சிவனை நினைப்போம்
சிவனை உரைப்போம்
சிவனடி சேரவே சீவித்திருப்போம்

வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய


வாட்ஸ் அப் தகவல்

Leave a Reply