Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் – மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள்

அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் – மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள்

அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் – மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள்

ஓய்வுபெறும் முதியோர்கள் முதல் பள்ளிக்குபோகும் சிறுவர்கள் வரை எல்லோரும் தற்கால

சூழ்நிலையில் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர். பள்ளிக்குப்போகும் சிறுவர்கள் பள்ளியில் ஹோம் ஒர்க் ( #HomeWork )அதிகமாக கொடுக்கும்போதும், அதிகமாக படிக்கவேண்டிய நேரத்திலும் , பரிட்சை சமயத்திலும், குழந்தைகளுக்கு பிரியமில்லாத ஒன்றை பலவந்தமாக திணிக்கும்போதும் பள்ளிப் படிப்புக்கு கட்டவேண்டிய பணத்தை காலத்திற்கு சரியாக கட்டமுடியாத நிலையில் பள்ளி நேரத்தில் பல மாணவர்கள் முன்னால் பள்ளியின் ஆசிரியர் கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போதும் வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னால் அடிக்கடி சண்டை போடும் போதும், சிறு வயதினர் தனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்தபோது இதுநாள் வரைக்கும் தன்மீது அதிக பிரியத்தை காட்டிய பெற்றோர்கள் தன்னைவிட பிறந்த குழந்தையின்மீது அதிக பிரியத்தை காட்டும் போதும் சிறுவயதினர் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தலைவலி ( #HeadAche ), கழுத்துவலி ( #NeckPain ), வயிற்று வலி ( #StomachPain ) போன்ற கோளாறுகளுக்கு உட்படுவர். மருத்துவரிடம் அழைத்துக் கொண்டுபோய் காட்டும்போது மருத்துவர் பரிசோதித்து பார்த்து உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை என்று கூறிவிடுவார்.


மன அழுத்தம் நீங்க வழிகள்

பெற்றோர்கள் தன் பிள்ளைகள் ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் பள்ளி இறுதி ஆண்டில் 90 சதவீதம் விட அதிக மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் கல்லூரியில் இடம் கிடைக்காது என்று அடிக்கடி கூறும் போது அதிக மார்க் வேண்டுமே என்று மாணவ, மாணவியர்கள் பயப்படும் போது அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டு உயர் ரத்த அழுத்தம் ( #HighBP / #HighBloodPressure ), வயிற்றில் புண் ( #Ulcer ), அதிக அமில சுரப்பு போன்றவைக ளால் பாதிக்கப்படுவர்.

கல்லூரி படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் அல்லது நன்கு கவனம் செலுத்தி படிப்பவர்களும் கூட காதல் போன்ற விஷயங்களில் சிக்கிக் கொண்டு, பிறகு குடும் பத்திற்கு தெரியக்கூடாது என்று மறைக்க முயலும் போதும், குடும்பத்திற்கு தெரிந்த பிறகு பெற்றோர்களால் கடுமையாக கண்டிக்க ப்படும் போதும் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாமல் மனபாதிப்புக்கு உள்ளாவர். பள்ளி பருவத்திலிருந்து கல்லூரி படிப்பு முடியும் காலம் வரை நேரத்திற்கு சரியாக பிள்ளைகள் வீட்டுக்கு வர வில்லை என்றால் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டார்கள் அல்லது பிள்ளைகள் தவறான பாதையில் போகிறார்களா என நினைத்து பெற்றோர்கள் கலக்க முறுவர்.

கல்லூரி படிப்பிற்கு பிறகு தனது படிப்புக்கு தகுந்த உத்தியோகம் கிடைக்காத போதும் தனக்கு பிரிய மில்லாமல் திருமணம் ( #Marriage / #Wedding ) செய்து கொண்ட நிலையிலும் படிப்பிற்கு எந்த ஒரு வேலையையும் செய்யாமல் ஊர்சுற்றி வரும் பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்கள் தன் சுற்றம், நண்பர்கள், அக்கம்பக்கம் உள்ள வீட்டினரிடம் குறை கூறும்போதும், வாகனங்களில் செல்லும் போது நெரிசலான இடங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தி போகும் போதும் ஒரு பாதிப்புக்கு உள்ளாவர்.

பெரியவர்கள் சொத்துத் தகராறு, தொழிலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, வீட்டில் யாராவது இறந்து போதல், உத்தியோகத்தில் மேலதிகாரி அல்லது தனக்குகீழ் வேலை செய்பவர்களிடம் விவாதிக்கும் போது, தன் வேலையை சரியாக செய்யாமல் சிக்கிக் கொள்ளும்போதும், வயதானவர்கள் தன்னு டைய பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்காமல் உதாசீனப்படுத்தும் போதும், இப்படி வாழ்க்கை யில் பல சூழ்நிலையில் பல கால கட்டங்களில் பல்வேறு காரணங்களினால் கோபப்படுவது தவறு செய்வதனால் ஏற்படும் குற்ற உணர்வு ( #Feel #Guilty ), பயப்படுவது ( #Fear / #Afraid ), சலிப்புறுவது மற்றும் கோபப்படு வதினால் உடலும், மனமும் அதிகளவு பாதிக்கப்படுகிறது.

மன அழுத்தம் ஏற்படும் ஒவ்வொரு சமயமும் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி ( #Pituitary )யின் மூலம் உடலின் இயக்கம் அனைத்தும் அதிக பரபரப்புடன் செயல்படத் தூண்டுகிறது மூளை ( #Brain ). இதனால் இருதயத்துடிப்பு ( #HeartBeat ) அதிகரித்து தசை நரம்புகளில் ரத்தத்தை அதிகமாக நிரப்புகிறது. உமிழ்நீர் சுரப்பிகள் அடைப்பட்டு வாய் உலர்ந்துபோகிறது. பிராண வாயு தேவைக்காக சுவாசம் வேகப்படுகிறது. சக்தி பெருக சர்க்கரையும் கொழுப்பும் ஏராளமாக ஈரலில் இருந்து வெளியேறுகிறது. ஜீரணிப்பு நின்று போகிறது. அதனால் ரத்தம் தசைகளுக்குள் திசை மாறி பாய்கிறது. அகண்ட கண் பார்வை ( #Eye #Visual ) உண்டாகிறது. உடலில் வியர்வை ( #Sweating ) பெருகி சூடு குறைகிறது. அட்ரினலின் ( # Adrenal ), நாரட்னயின் போன்ற ஹார்மோன் களை அட்ரீனல் சுரப்பி வெளியிடுகின்றன. தோல் சார்ந்த உபரிக் கொழுப்பும், ரத்தத்துக்குள் கலந்து விடுகின்றன.

கழிவு அகற்றும் குடலும், சிறுநீரகமும் வேலையை குறைத்துக் கொள்வதால் உடல் தொடங்கு கிறது. இதனால் உடலின் இயல்பான இயக்கம் பாதிக்கப்படுகிறது.

மனித உடலில் நரம்புகள் மற்றும் நாளமில்லா சுரப்பி தொகுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் வரையில் உடலும், மனமும் புற உலக பாதிப்புக்கு உட்படும்போது, சிறி து நேரத்தில் மீண்டும் தனது இயல்பான செயல் நிலைக்கு திரும்புகின்றன. ஆனால் நரம்புத் தொகுப்பு மற்றும் சுரப்பிகளின் ஹார்மோன் அளவுகள் இடையிலான சமநிலை பாதிக்கப்பட்டால் ரத்த அழுத்தம் ( #BloodPressure / #BP), உடல், மனசோர்வு, மன உளைச்சல் மற்றும் நரம்பு தொடர்பான நோய்களும் உண்டாகின்றன.

மேலும் முக்கிய சுரப்பிகளின் செயல்பாடு சீர்குலையும் போது உடலின் வளர்சிதைமாற்ற சம நிலை பாதிக்கப்பட்டு உடலில் பல கடுமையான நோய்களை தோற்றுவிக்கின்றன. யோகாசனங்களின் ஒவ்வொரு நிலைகளும் ஒரு குறிப்பிட்ட முறையில் செயலாற்றி நரம்பு மண்டலத்தை தூய்மைப் படுத்தி பலப்படுத்துவதுடன் அங்கு நரம்பு வேதியல் செய்து பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் அனைத்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தையும் சீர்படுத்தி சம நிலையில் செயல்படத் தூண்டுகின்றன.

தினமும் 15-20 நிமிடம் செய்யும் பிராணாயாமம் யோக நித்திரை, தியானம் போன்ற பயிற்சிகள் மன இறுக்கம், அழுத்தத்தை நீக்குவதுடன் அன்றாட வாழ்க்கையில் நமது மனம் இரண்டு நிலையில் செயல்படும் ஆற்றலை அளிக்கின்றன. ஒன்று புற உலக பாதிப்பிற்கு மனம் உட்பட்டாலும், உடனடி யாக தனது இயல்பான நிலைக்கு திரும்பும் ஆற்றல், மற்றொன்று புறவுலக பாதிப்புகளை எதிர்த்து செயல்படுதலும் அப்படி செய்யப்படும் போது உடல் இயக்கம் பாதிக்கப்படாமல் மனதையும் அமைதி யாக வைத்துக் கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. மன அழுத்தத்தை நீக்குவதற்கு பல்வேறு யோகப் பயிற்சிகள் உள்ளன.

 

=> ப்ரீத்தா ராகவ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: