வீட்டுக்குள்ளே பிரசவம் – விபரீதத்தின் உச்சம்
வீட்டுக்குள்ளே பிரசவம் – விபரீதத்தின் உச்சம்
ஒருசில மாதங்களுக்குமுன் வீட்டிலேயே கணவர் உடபட சில குடும்ப உறுப்பினர்க ள் பிரசவம் பார்த்த கர்ப்பிணி இறந்தார் என்ற துயரசெய்தி செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பானது. மேலும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்படும் என்ற விளம்பரம் செய்த ஒரு மருத்துவரையும் காவல்துறை யினர் கைது செய்தனர் என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததே. ( #BabyDeliveryAtHome / #Baby #Delivery #Home )
ஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் ( #Delivery ) பார்த்தோம் என்பது உண்மை தான். ஆனால், தற்போது பலவேறுவிதமான பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்ப டுகின்றன. பிரவசம் என்பது மருத்துவமனையில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும் பெண்களுக்கு பெரும்சவாலான விஷயம்தான். மருத்துவமனையில் பார்க்கும்போ து ஏதாவது பாதிப்பென்றால் உடனடியாக மாற்றுசிகிச்சை முறைகளை கையாண்டு சரி செய்ய முடியும். வீட்டில் அதுமாதிரியான வசதிகள் இருக்காது. கடைசி நிமிடத் தில் ஏதேனும் விபரீதம் நடந்தால் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
உதாரணமாக, பிரசவம் முடிந்தபின் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். ஒருசில நிமிடங்களில் இரண்டு அல்லது 3 லிட்டர் ரத்தம்கூட வெளியேறலாம். மருத்துவ மனையில் இருந்தால், ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிடலாம். அப்படியும் நிற்காவிட்டால் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும். அதற்கும் ரத்தப்போக்கு ( #Blood #Bleeding ) கட்டுப்படா விட்டால் கர்ப்பப்பை ( #Uterus ) நீக்கும் அறுவை சிகிச்சை ( #Surgery ) செய்வோம். ஒரு புறம் அவர்களுக்குத் தேவையான ரத்தத்தையும் ஏற்றுவோம். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை.
ஏற்கெனவே உயர்ரத்தழுத்த பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவநேரத்தில் பாதிப்பு அதிகமாகும். அதனால் வலிப்பு கூட ஏற்படலாம். அதைத் தடுத்து நிறுத்த மருந்து களோ கருவிகளோ வீட்டில் இருக்காது. அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது, கர்ப்பப் பை பாதை , சிறுநீரகப் பாதையில் அடைப்பு அல்லது காயம் ஏற்படவும் வாய்ப்பிருக் கிறது.
பிறந்த உடனே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மருத்துவமனை யில் இருந்தால் உடனடியாக வெண்டிலேட்டர் ( #Ventilator ), ஆம்புபேக் உதவியுடன் சரி செய்து விடலாம் . வீட்டில் அதற்கும் வாய்ப்பில்லை.
ஒரு காலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான். ஆனால், தற்போது பலவேறுவித பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன. தாயை யும் குழந்தையையும் பத்திரமாகப் பாதுகாக்க மருத்துவமனைகளை நாடுவதுதான் சிறந்த வழி.
=> மலர்