Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் வாங்கும் காரில் E.S.C இருக்கா? – அவசிய அலசல்

நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. இருக்கா? – அவசிய அலசல்

நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. இருக்கா? – அவசிய அலசல்

ஆங்கிலத்தில் கார் என்றும் தமிழில் மகிழுந்து அழைக்க‍ப்படும் ஆடம்பரமற்ற அத்தியாவசிய

தேவைகளின் பட்டியலில் நுழைந்து விட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கார் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை போன்றே, புதிய கார்களில் வழங்கப்படும் அம்சங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உங்கள் காரில் இ.எஸ்.சி. இருக்கா?

இந்தியாவில் கார் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. ( #ESC / #E.S.C. / Electronic Stability Control ) தொழில்நுட்பம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. #Car

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப கார் பயன்படுத்துவோருக்கு பயன் தரும், பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு புதிய வசதிகள் புதிய கார்களில் சேர்க்கப் படுகின்றன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் அல்லது புதிதாக வாங்க இருக்கும் காரில் இ.எஸ்.சி. எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் சிஸ்டம் ( ECS / Electronic Stability Control System ) இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

சில கார்களில் இந்த தொழில்நுட்பம் முன்னேறிய வகையில் உள்ளது. அதாவது வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் போது அது இன்ஜின் செயல்பாட்டைக் குறைக்கும். மீண்டும் வாகனம் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அது செயல்பட அனுமதிக்கும். வாகனம் கட்டுப்பாடு இழந்து செல்வதைத் தடுக்க இ.எஸ்.சி. உதவும்.

அமெரிக்காவில் இத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்பட்ட பிறகு நெடுஞ்சாலை களில் பெருமளவிலான விபத்துகள் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை காப்பீடு அமைப்புகள் கூறியுள்ளன.

மூன்றில் ஒரு பங்கு விபத்துகள் இதனால் குறைவதாக சுட்டிக்காட்டியுள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இதே கருத்தைத் தெரிவித்ததோடு மட்டுமில்லாம ல் தங்கள் நாடுகளில் தயாராகும் கார்களில் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாய மாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளன.

1983-ம் ஆண்டு முதல் முதலில் கார்களில் ஆன்டி ஸ்கிட் எனும் தொழில்நுட்பத்தை டொயோடா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதையடுத்து 1987-ல் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் மற்றும் பி.எம்.டபிள்யூ. நிறுவனங்கள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை தங்களது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தின. ஆனால் இவை அனைத்துமே ஸ்டீரிங்குடன் தொடர்பு கொண்டவையாக இருக்கவில்லை.

1990-ம் ஆண்டில் மிட்சுபிஷி நிறுவனம் முதல் முறையாக ஒருங்கிணைந்த கண்ட்ரோல் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கு டி.சி.எல். என பெயரிடப் பட்டது. இதன் மேம்பட்ட நுட்பமாக ஆக்டிவ் ஸ்கிட் அண்ட் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (ஏ.எஸ்.டி.சி.) புழக்கத்திற்கு வந்தது.

திருப்பத்தில் காரின் ஆக்ஸிலரேட்டரை டிரைவர் வேகமாக மிதித்தாலும், இதில் உள்ள சென்சார் (உணர் கருவி) காரின் வேகத்தைக் குறைத்துவிடும். ஆனால் படிப் படியாக இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக பி.எம்.டபிள்யூ. ( #BMW ) நிறுவனம் 1992-ம் ஆண்டில் புதிய நுட்பத்தைக் கண்டு பிடித்தது.

1987-ம் ஆண்டிலிருந்து 1992-ம் ஆண்டு வரையான காலத்தில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் கண்ட்ரோல் புரோகிராம் உருவாக்கப்பட்டது.

1995-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ., மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் முதல் முறையாக தங்கள் வாகனங்களில் இ.எஸ்.சி. எனப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அனேகமாக அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை தங்களது கார்களில் வைக்கத் தொடங்கின.

பொதுவாக கார் ஓடும்போது பின் சக்கரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை இது கண்காணிக்கும். காரின் பாதை மாறாமல் இருக்கிறதா என்பதை இது தொடர் ந்து கண்காணிக்கும். ஸ்டீரிங் கட்டுப்பாடு இழக்கும்போதுதான் இ.எஸ்.சி. செயல் பட தொடங்கும். உடனடியாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்து இன்ஜின் செயல் பாட்டை நிறுத்தும்.

கார் கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதை டிரைவர் உணர்வதற்கு முன்பாகவே இ.எஸ்.சி. ( Electronic Stability Control ) உணர்ந்துவிடும். எத்தகைய தளத்திலும் அதாவது வழுக்கும் தரையாக இருந்தாலும் சரி இது செயல்படும். 

=> அந்திமலர்


#ElectronicStabilityControl / #ESC / #Car / #vidhai2virutcham 

Leave a Reply