Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் – அதிரப்போவது உண்மை 

தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் – அதிரப்போவது உண்மை 

தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் – அதிரப்போவது உண்மை 

தமிழ்த் திரையுலகின் தவிர்க்க‍முடியாத முன்னணி நடிகர்களுள் ஒருவராக

இருந்து வருபவரும், ஆர்ப்பாட்ட‍மில்லாத ரசிகர்களை அதிகளவில் வைத்துள்ள‍வர் தல அஜித். இவரது ‘விஸ்வாசம்’ ( Viswasam )படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட‍த்தை நெருங்கிய உள்ள‍ நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ளவர் ‘சதுரங்க வேட்டை’ எச்.வினோத் என்பதும் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் இன்று அஜித் (Ajith ) கையெழுத்திட்டதாக செய்தி கசிந்துள்ள‍து.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித், ஏஆர்.ரஹ்மான் ( A.R. Rahman ) கூட்டணி கடைசியாக இணைந்த படம் ‘வரலாறு’ 2006ஆம் ஆண்டு இந்த படம் வெளியானதை அடுத்து 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த ஜோடி இணைய வுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி கழித்து இந்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கி தீபாவளி க்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கோடம்பாக்க‍த்தில் இருந்து செய்தி கசிந்துள்ள‍து.

மேலும் இந்த திரைப்படத்தில் எப்ப‍டியாவது இசையமைப்பாளர் A.R. ரஹ்மான்-ஐ ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்து விடவேண்டும் என்று அஜித் உட்பட பலர் எண்ணியுள்ள‍னர். ( #ARRahman #Thala #Ajith #Viswasam #Varalaru #Music #vidhai2virutcham )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: