Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு

யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு

யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு

ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வரும்… அப்ப‍டி வரும்போது

அந்த நன்மையையும் தந்திருக்கிறது. சிலருக்கு தீமைகளையும் தந்திருக்கிறது. அந்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் சனியும் கேதுவும் ஒன்றாக சேர்ந்து வந்தால் அவர்களுக்கு என்ன‍மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை இங்கு காண்போம்.

நாம் இப்போது, தத்து கொடுத்தல், தத்து எடுத்தல், ஆயுள் அரிஷ்டம், பாலாரிஷ்டம் முதலான விஷயங்கள் குறித்துப் பார்ப்போம். 

தத்து கொடுத்தல்:-

ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுத்தல் அல்லது ஆலயத்திற்கு தத்து கொடு த்து எடுத்தல் போன்ற விபரங்களைப் பார்க்கலாம். சில ஜோதிடர்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து “இந்த குழந்தையை கோயிலுக்கு தத்துக் கொடுத்து மீண்டும் தத்தெடுத்துக்கொள்ளுங்கள்” என பரிந்துரைத்திருப்பார். அது ஏன்?

யாருடைய ஜாதகத்திலும் “சனி+கேது” இருவரும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தத்து கொடுக்கப்பட வேண்டியவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஏன்? ஆயுள் காரகன் சனி. இந்த ஆயுளை அரித்து விரைவில் இறைவனடியை சேர்க்க கேது பகவான் துணை நிற்பார்,

அதற்கான பரிகாரம்தான் “தத்துக் கொடுத்தல்.” இப்படி ஆலயத்திற்கு அதாவது தெய்வத்திற்கு தத்துக் கொடுக்க அது தெய்வத்தின் குழந்தையாகிவிடும். ஆக தெய்வத்தின் குழந்தைக்கு ஆயுளைக் குறைக்கும் அதிகாரம் கிரகங்களுக்கு இல்லை. அவ்வளவு ஏன்… அந்த சக்தியும் கிடையாது.

எனவே அந்தக் குழந்தை, தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

இப்போது சிலர் “எனக்கு இந்த அமைப்பு உள்ளது. ஆனால் நான் தத்து கொடுக்க வோ, தத்து எடுக்கவோ படவில்லை” என்போருக்கு …

நிச்சயமாக உங்கள் குழந்தை பருவத்தில் தொலைந்துபோய் கண்டு பிடிக்கப்பட்டிரு ப்பீர்கள். அல்லது தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்டிருப்பீர்கள். அல்லது பள்ளிப்பருவத் திலிருந்து கல்லூரி காலம் வரை விடுதியில்(ஹாஸ்டல்) தங்கிப் படித்திருப்பீர்கள்.

சனி கேது இணைவு மட்டுமல்ல, லக்னத்திற்கு 8 ம் இடத்தில் கேது இருந்தாலும் ஆயுள் அரிஷ்டம் ஏற்படும்.

8ல் ராகு இருந்தாலும் ஆயுள் பாதிப்பை உண்டாக்கும்.

இதற்கான ஜாதக நிவர்த்தி ”குரு பார்வை இருந்தால் பாதிப்பு இல்லாமல் போகும்.”

குரு பார்வை இல்லாவிட்டால், ஆலய பரிகாரமே சிறந்தது,

அதிலும் முக்கியமாக… மகான்கள், சித்தர்கள் ஜீவசமாதி, வெள்ளெருக்கு விநாயகர், இவர்களை வணங்கிவந்தால் ஆயுள் அரிஷ்டத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

மேலும்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருக்கடையூரில் மார்கண்டேயன் பொருட்டு ஈசனால் வதம் செய்யப்பட்ட எமதர்மன் தொடர்பு கொண்ட திருத்தலம் என்பதை தாங்கள் அறிவீர்கள்தானே. திருச்சி மண்ணச்சநல்லூரில், திருப்பைஞ்சீலி யில் ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் உயிர் பெற்றார். இப்படி எமனுக்கே உயிர் மீண்ட ஆலயம் இந்த திருப்பைஞ்சீலி.

இந்த ஆலயத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சிவ பெருமானையும், எம தர்மராஜனையும் வணங்கினால் உங்கள் ஆயுள் அரிஷ்டம் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

இன்னும் சில அரிஷ்டங்கள்:-

நீங்கள் பிறந்த கிழமையும், இந்த நட்சத்திரங்களும் ஒன்றானால் நீங்கள் பிறந்தது “பாலாரிஷ்டத்தில்” என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஞாயிறு. – பரணி

திங்கள். – சித்திரை

செவ்வாய் – உத்ராடம்

புதன் – அவிட்டம்

வியாழன் – கேட்டை

வெள்ளி – பூராடம்

சனி – ரேவதி

இந்த பாலாரிஷ்டம் 12 வயதுவரை உடல்நலத்தை பலமாக பாதிக்க வைக்கும். ஒவ் வொரு இரவும் பகலும் உடலைப் படுத்தி எடுக்கும், ஆயுளைக் கெடுக்காது. ஆனால் ஆயுள் முடிந்துவிடுமோ என பதைக்க வைக்கும். 12 வயதுக்கு மேல் இந்த தோஷம் தானாகவே நீங்கிவிடும்.

பரிகாரம்:-

பைரவர் வழிபாடு, மற்றும் சனி ப்ரீதி மட்டுமே போதும். மற்றும் தத்துக் கொடுக்கும் பரிகாரமும் உதவும்.

மேலும் ஆண்களின் ஜாதகத்தில் குருவோடு கேது இணைந்திருந்தாலும், பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனோடு கேது இணைந்தாலும் இந்த பாலாரிஷ்டம் என்னும் தோஷம் உண்டு. இவை அனைத்திற்க்கும் மேற்கண்ட பரிகாரங்கள் செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.

தத்து எடுத்தல் என்பது ஜாதக பலாபலன்களை அறிந்தால்தான் விவரிக்க முடியும்.

நாம் பார்த்திருப்பது பொதுவான தகவல்களே! சுய ஜாதகத்தில் 8 ம் அதிபதி , சனி, ராகு கேது, செவ்வாய் நிலை அறிந்தால் மட்டுமே இந்த அரிஷ்டம் என்னும் தோஷத்தை விரிவாகப் பார்க்க இயலும்,

எனவே அடிக்கடி நோய் வயப்பட்டால் ஜாதகத்தில் கிரக நிலை, திசா புத்தி விபரம் அறிந்து அதற்கேற்ப தெய்வங்களை வணங்கிவர நலமான வாழ்வு அமையும் என்பது உறுதி.

சில குறிப்புகள் :-

கன்னம் புஷ்டியா இருக்கா? சகல செல்வமும் நிச்சயம்! – கன்னம் புஷ்டியாக இருந்தால் செல்வ வளம் குன்றாமல் இருக்கும்.

பெண்களின் முதுகு ஆமை முதுகு போல் இருந்தால் அளவற்ற செல்வம் சேரும்.

ஆண்களின் தொடை பருத்திருந்தால் செல்வ வளம் உண்டு.

உள்ளங்கை குழி போன்ற அமைப்பு இருந்தால் செல்வம் தங்கும்.

மூக்கு நுனி கூர்மையாக இருந்தால் குரு கடாட்சம் உடையவர். அதே சமயம் அதில் மச்சம் (மூக்கு நுனியில்) இருந்தால் யாரையும் மதிக்காத அலட்சியப் போக்கை உடையவர்.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள: 98841 60779

=> இந்து ( ஜோதிடம் அறிவோம்! 45 இதுதான்… இப்படித்தான்! )

Leave a Reply