Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிரட்டும் இலியானா – மிரளும் நடிகைகள்

மிரட்டும் இலியானா – மிரளும் நடிகைகள்

மிரட்டும் இலியானா – மிரளும் நடிகைகள்

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த‍தன் விளைவாக‌ முன்னணி நாயகியாக

வலம்வந்த இலியானா, தமிழில் கேடி, நண்பன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பிறகு பர்பி எனும் படம் மூலம் இந்தியில் நுழைந்த இலியானா அதற்குப்பின் தெலுங்குப் பக்கம் வரவே இல்லை. இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அமர் அக்பர் ஆண்டனி ( Amar Akbar Anthony ) எனும் படம் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பி உள்ளார். ரவி தேஜா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கி உள்ளார். வரும் 16ம் தேதி இப்படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் புரோமோ‌ஷன் பணிகளில் இறங்கி உள்ளனர்.

அதன் ஒருபகுதியாக சமீபத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் நடிகை இலியானா பேசும் போது, கடந்த 2012-ம் ஆண்டு இதே ரவிதேஜாவுடன் ‘தேவ்டு செசினா மனசுலு’ என்ற படத்தில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அதே ரவிதேஜா மூலம் தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளேன். இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் விட்ட இடத்தைப் பிடிப்பேன் என்று ஆவேசமாக கூறினார். மேலும் ஆறு வருடங்களுக்கு முன்பு ரவிதேஜாவிடம் இருந்த எனர்ஜி இந்தப் படத்தில் இன்னும் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

இவரது திடீர் ஆவேசம், தெலுங்குபட உலகில் உள்ள‍ மற்ற‍ நடிகைகள் மிரண்டு போ யிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம், இவரது கொழுகொழு உடல்வா கும் அழகும் இன்னும் கூடியிருப்பட்ட‍து மட்டுமின்றி இவரது கவர்ச்சியாகவும், அதே நேரத்தில் கதாநாயகர்களுடன் மிக நெருங்கியும் நடிப்ப‍வர் என்பதால், தங்களுக்கு வரவிருக்கும் அத்த‍னை பட வாய்ப்புகள் இலியானாவுக்கு சென்று விடுமோ என்று மிரண்டு போயியுள்ள‍தாக சொல்லப் படுகிறது.

#Ileana #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja #இலியானா #அமர்அக்பர்ஆண்டனி #ரவிதேஜா #Kedi #Nanban #Burby 

Leave a Reply

%d bloggers like this: