இன்று ஒரு தகராறு
இன்று ஒரு தகராறு
இன்று (13-11-2018) காலை திருவல்லிக்கேணியில் உள்ள எனக்குச் சொந்தமான
அலுவலகத்திற்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக சென்றபோது வழியி ல் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்று வண்டி ஒன்று சாலை ஓரத்தில் இரு ந்த பெரிய நெகிழி தொட்டியில் இருக்கும் குப்பைகளை அகற்றிக் கொண்டிந்ததால், சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான் இரு சக்கர வாகனத்தில் சாலையில் நடுவில் இருந்த நான், கிடைத்த இடைவெளியில், சற்று முன்னோக்கி சென்று சாலையில் ஓரத்தில் வாகனத்தை செலுத்தினேன். அப்போது எனக்கு முன் பாக ஒரு ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது, பக்கத்தில் மிகச் சிறிய இடை வெளி விட்டு ஒரு ஸ்கூட்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. எனது இருசக்கர வாகனம் போகாது என்று உணர்ந்த நான், ஆட்டோவின் பின்புறமாக நிறுத்தி நின்று கொண்டி ருந்தேன். அப்போது எனக்கு பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், (மரியாதை கிலோ எவ்வளவு என்று கேட்பார் போல) என்னிடம், யோவ் கொஞ்சம் முன்னாடி போகலாம்ல, இங்கேயே இருந்தா எப்படி என்று கேட்டார். அதற்கு நான், யோவ் என்னய்யா சொல்ற இந்த சின்ன கேப்ல எப்படி வண்டி போகும் என்றேன். அதற்கு உனக்கு வண்டி ஓட்டத் தெரியாதுன்னு சொல் என்றார். அப்போது நான், நான் வேண்டுமானால் பின்னால் செல்கிறேன் முடிந்தால், நீ இந்த சிறு கேப்ல வண்டி ஓட்டிட்டு போ என்றேன்.
அதற்கு அவர், சரி என்றார். நானும் எனது இருசக்கர வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி, அவருக்கு விழிவிட்டேன். அவன் தனது இருசக்கர வாகனத்தை எடுக்கும் போதே ஆட்டோவில் மோதினான், மேலும் அந்த சிறு இடைவெளியில் வண்டியை செலுத்த அவர் முற்பட்டபோது, அந்த ஸ்கூட்டிமீது மோதினான். அது கீழே விழுந்த து. அவனும் கீழே விழுந்தான். சிலவிநாடிகளில், அந்த ஆட்டோ டிரைவரும், ஸ்கூட்டி யின் உரிமையாளரும் வேகமாக ஓடிவந்து அவனிடம் சண்டை இட்டனர். அங்கிருந்த சிலர், இவர்களை விலக்கி விட்டு சமாதானப்படுத்தி அனுப்பினர். இதை இங்கு நான் சொல்லக் காரணம், ஒரு வாகனத்தை ஓட்டும்போது, மிகுந்த கவனத்து டன் ஓட்டவேண்டும். மேற்கூறிய சம்பவத்தில், அந்நபர் சில நிமிடங்கள் பொறுமை காத்திருந்தால், மேற்படி சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்காது. சில நிமிடங்களில் சரியாக வேண்டிய நெரிசல், இந்த சம்பவத்தால், சுமார் 35 நிமிடங்கள் கழித்தே போக்குவரத்து சீரானது.
பாருங்கள், மேற்படி நபரின் அவசரத்தால், போக்குவரத்து நெரிசல், ஆட்டோ சேதம், ஸ்கூட்டி சேதம், அவருக்கும் கீழே விழுந்ததில் சிறுசிறு சிராய்ப்புகள். ஏனிந்த அவசரம் வாகனம் ஓட்டும்போது, பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக அவசியம் அதைவிட விவேகம் மிக முக்கியம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
#Triplicane #TriplicaneHighRoad, Accident, #Garbage #Lorry #TwoWheeler #Bike #Driving #traffic #rules #TrafficJam