ஆண் பாவம் – (100க்கு 100 உண்மை)
ஆண் பாவம் – (100க்கு 100 உண்மை)
(2018 ஆண்டு நவம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்)
இது நியாயமான தூய்மையான, கண்ணியமான, உண்மையான பல ஆண்களின்
வேண்டுகோளுக்கிணங்க எழுதப்படுகிற தலையங்கம். தயவுசெய்து வேண்டா வெறுப்பில் பழிவாங்கும் நோக்கில் எவரும் #MeToo வில் ஆசிரியரைக் கொண்டு வந்து அவருக்கு உலகப்புகழ் சேர்க்க வேண்டாம் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறோம்.
ஆம்! பெண்ணுரிமை, சமத்துவம், நாகரீகம், ஸ்டேட்டஸ் என்ற பெயரில் சில சில பெண்கள் அடிக்கும் கூத்துக்கள் வேதனைக்குரியது. வெட்கத்துக் குரியது.
நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, படிப்பு, பதவியில், உணர் வில் ஊதியத்தில் ஆணுக்கு நிகர் என பாரதி சொன்ன புதுமைப் பெண்கள். ஆனால் குடிப்பது, கள்ள உறவு வைத்திருப்பது, அரைகுறை ஆடை அணிந்து வேண்டாத ஆண்களை பழிவாங்க எதையும் செய்யத் துணிவது எல்லாம் எப்படி சம உரிமையா கும்? இப்படி செய்பவர்கள் புதுமைப்பெண்கள் அல்ல வெறும் பதுமைப் பெண்களே.
வரதட்சனை ஜீவனாம்சம், விவாகரத்து பணியிடத்தில் பாதுகாப்பு ஊதிய விகிதம் என பல அடிப்படை உரிமைகளுக்காக இந்திய சட்டம் பல திருத்தங்களைக் கொண்டு வந்து பெண்களுக்கு பாதுகாப்பு அரணாய் நிற்கிறது. ஆனால், அதே சட்டத்தை அதே உரிமைகளை தங்களி ன் தேவைக்காக புகழுக்காக சில பெண்கள் தவறாக பயன்படு த்தி வருகின்றனர்.
அந்த வகையில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் விபரீத சரக் குதான் இந்த மீ டூ ( #MeToo ) இதை ஒரு இயக்கமாகவே நடத்து கிறார்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் மீடூ #Metoo விவகார த்தில் வெளிவந்திருப்பவர்கள் எல்லோருமே பெரிய இடங்களாய் உயர்ந்த அந்தஸ் தில் இருப்பவர்களாய் இருப்பதுதான் ஆச்சரியமான ஒற்றுமை
கிராமத்தில் ஒரு பெண்ணை தவறான நோக்கத்தோடு பார்த்தாளே அல்லது பழகினாலோ பளிச்சென்று அறைந்துவிடுவாள். ஊரைக் கூட்டி உடனே நியாயம் கேட்டாள். ஆனால் நவநாகரீக உலகத்தி ல் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்து புகார் செய்கிறார்கள். தொடர்ந்து நானும் ரௌடிதான் என்று எங்கிருந்தெல்லாமோ சிலபெண்கள் புகார்களை க்குவிக்கிறார்கள். (எவற்றுக்கும் ஆதாரம் இல்லையாமே?) தவறு செய்த ஆண்களை நேரடியாக சரியான ஆதாரத்துடன் குற்றவாளி யாக்கிடும் துணிச்சலான பெண்களை வரவேற்போம்.
ஆண்களுக்கும் கற்பு உண்டு என்பதும் அவர்களுக்கும் பாசம், நேசம், பணிவு, பண்பாடு என்பதும் ஏன் வெளியில் தெரியப்படுத்தப்படுவதில்லை? அவை ஏன் வெளிச்சம் பெறுவதில்லைழ
மீடூ ( #MeToo ) என்று பெண்களாலும் வீ டூ ( #WeToo ) என்று ஆண் களாலும் தொடங்கப்பட்டுள்ள இயக்கங்கள் இயங்காமல் இருப்ப தும் நம் கலாச்சாரம் உறவுமுறைகளை மேம்படுத்துவதும்தான் உண்மையான உரத்த சிந்தனை.
\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|
#urathaSindhanai #NamUrathaSindhanai #vidhai2virutcham