Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்

நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்

நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்

மூவுலகிற்கு துணிச்சலுடனும் எந்தவிதமான, யாருடைய

அனுமதியும் இன்றி சென்று வரக்கூடிய ஒரே ஒருவர் நாரத மாமுனி ( #Narada ) மட்டுமே. இவர் பிரம்ம‍தேவனின் புதல்வர் என்பது நாமறிந்த ஒன்றே. ஆனால் நாரத மாமுனியிடம் ஏமாந்த பிரம்ம‍ன் ( #Brahma ), கோபமுற்று தன் பிள்ளையென்று பாராமல், நாரதருக்கு கொடும் சாபம் இட்டார். அந்த புராண கதையை பின்வரும் வரிகளில் காணலாம்.

நாரத மாமுனியின் பிறவி ரகசியம்

பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர் ( #Sanagar ), சனந்தர் ( #Sanandhar ), சனாதனர் ( #Sanadhanar ), சனத்குமாரர் ( #Sanathkumarar ) ஆகியோரைத் தோற்றுவித்தார். ஆனால் அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமியற்ற பரமன் தோன்றி வரம் என்னவேண்டும் என்று கேட்க அவர்கள் மெய்ப்பொருளை உபதேசித் து ஞானம்பெற அருள்புரியுமாறுவேண்டினர். அதனை ஏற்ற சிவபெருமான் கல்லாக மரத்தின்கீழ் தக்ஷிணாமூர்த்தியாய் அமர்ந்து குருவாகி உபதேசிக்க அவர்கள் தவத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பிரம்மன்… நாரதர்  ( Narada ), தட்சன் ( #Dhadchan ), வசிஷ்டர் ( #Vasishtar ), பிருகு ( #Birugu ), இருது ( #Irugu ), புலஸ்தியர் ( #Pulasthiar ), ஆங்கிரசு ( #Angirasu ), அத்திரி ( #Aththiri ), மரீசி ( #Marisi ) ஆகிய புதல்வர்களைத் தோற்றுவித்தார். நாரதர் தவிர மற்றவர்கள் தந்தைக்குத் துணையாக படைப்புத் தொழிலில் ஈடுபட்டனர்.

நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன்

இதனால் பிரம்மன், நாரதரை அழைத்து மற்றவர்களை போல் நடந்துகொள்ளுமாறு கூற, நாரதர் தன் மனம் மோக்ஷம் பெற விரும்புகிறது என்றும், அதற்காக பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கும் முறையை உபதேசிக்க வேண்டும் என வேண்டினார். தன் விருப்பதிற்கு மாறாக நடந்து தன்னை நாரதர் ஏமாற்றி விட்ட தாக பிரம்ம‍தேவன் கோபமுற்றார்.

நாரதர் பெற்ற பிரம்ம சாபம்

அப்ப‍டி கோபம் கொண்ட பிரம்மன், நாரதரைக் கீழ்க்கண்டவாறு சபித்தார்.நீ மேற் கொள்ள எண்ணும் பிரம்மச்சரிய விரதம் அழிந்து குடும்பஸ்தனாக பிறந்து பல சிக்க ல்களுக்கு ஆளாகி தவிக்கக் கடவாய் என்றார். நாரதர் வருத்தமுற்றுதான் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூற, பிரம்மன் தன் எண்ணத்துக்கு மாறாக இருப்பதே தவறு என்றார். நீகந்தர்வ குலத்தில் பிறந்து பல பெண்களை மணந்து அவதிப்படு வாய் என்றார். அடுத்து நாரதர், அதற்குப் பிறகாவது சாபவிமோசனம் கிடைக்குமா? என்று கேட்க, மேலும் கந்தர்வனாக இருக்கும் போது ஒரு முனிவர் சாபம் பெற்று தாழ்குலத்தில் மானிடனாகப் பிறப்பாய் அதன் பிறகே சாபவிமோசனம் என்றும் கூறினார். இவ்வாறு தந்தையாகிய பிரம்மனிடம் நாரதர் சாபம் பெற்றார்.

=> நித்யா

Leave a Reply

%d bloggers like this: